குழந்தை நலம்

Created by
Updated on Jan 23, 2019
எனது மகன் 2 வயது 4 மாதங்கள் ஆகிறது. வயிறு சமந்தமான கேஷ் பிரச்சனை இருக்கிறது... என்ன செய்வது

| Jan 23, 2019
ஜீரக தண்ணீர் கொடுங்க. மோரில் ஒரு துளி பெருங்காயப்பொடி கலந்து கொடுக்கலாம். வாயுத் தொல்லை தரும் உணவு வகைகள், சிப்ஸ், பருப்பு வகைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்புக்கு பதில் பயித்தம் பருப்பு கொடுக்கலாம். உருளை, வாழைக்காய், முட்டைகோஸ் போன்ற வாயுள்ள காய்களையும் சரியாகும் வரை தவிர்த்து விடுங்கள். ரசம், மணத் தக்காளி கீரை போன்றவைகளை கொடுக்கலாம். காரத்தை தவிர்த்து விடுங்கள்.

