பிறந்து 2வாரங்களூக்கு மேலான குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக போதவில்லை தாய்ப்பாலை அதிகரிப்பது எப்படி உணவு முறையில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் குழந்தை அழுது கொண்டிருக்கிறது குறைந்தது நான்கு மணி நேரமாவது அழுகிறது என்ன செய்வது? தாய்ப்பால் பத்தவில்லை என்று மாட்டு பால் கொடுக்கலாமா?

Created by
Updated on Jul 02, 2020

| Jul 02, 2020
ஹாய் சக்திகுமார்! கீரை வகைகளை (முருங்கைக் கீரை பசலைக்கீரை) எடுத்துக் கொள்ளலாம், உணவில் பூண்டு அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பசும்பால் அருந்தலாம். முட்டை சிக்கன் மட்டன்ல சுவரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம். இந்த உணவிலே உங்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்க வேண்டாம். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு பிறகும் தாய்ப்பால் போதவில்லை என்று நினைத்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி அவர்கள் சொல்லும் ஆலோசனை கேட்கலாம்.