வணக்கம் மேடம் என் பெயர் மாலதி எனக்கு 2 வயதில் குழந்தை இருக்கிறான் அவனுக்கு ஒரு மாசத்துல 2 r 3 டைம் குடற்புழு வருகின்றது அதிக இனிப்பு கொடுக்க மாட்டேன் ஆனால் வீட்ல சமையல்க்கு வாங்கின கிழங்குகளில் இருக்கும் மண்ணை எனக்கு தெரியாமல் சாப்பிட்றான் முதலில் எப்போதுதாவது வரும் அப்போது வேப்பிலை கொழுந்து குடுப்பேன் சரி ஆகி விடும் ஆனால் இப்போது அதை குடுத்தாலம் சரி ஆக மாட்டுக்கு நான் என்ன செய்வது ஏதாவது வீட்டு மருந்து சொல்லுங்கள் அல்லது நான் மருத்துவமனை அழைத்து செல்லவா.

Created by
Updated on Apr 01, 2021

| Apr 01, 2021
ஹாய் மாலதி, மண்ணை உட்கொண்டால் குடற்புழு வரும். பயப்பட வேண்டாம். துவர்ப்பு தன்மை கொண்ட கொட்டை பாக்கு பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது இதை இடித்து பொடியாக்கி மிளகு அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். தொடர்ந்து 3-5 நாட்கள் கொடுக்கலாம். சரியாகிவிடும். இல்லையெனில் ஒரு பூண்டு பல் எடுத்து வறுத்து பொடியாக நறுக்கி தேனில் குழைத்து கொடுக்கலாம் தினமும் காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட வந்தால் மலம் வழியாக வெளியே வந்து விடும். எனது தோழிஇவ்வாறு தான் செய்துவாள். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

| Apr 01, 2021
Hi Malathi Thangamariappan ! குடல் புழுவை தடுக்க துளசி இலைச் சாறில் தேன் கலந்து சாப்பிடலாம். குழந்தையின் உணவில் பூண்டை அதிகம் பயன்படுத்துங்கள். கேரட் அதிகம் எடுப்பதன் மூலம் குடல்புழு தவிர்க்கலாம். உங்கள் மகன் கேரட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவானா இருந்தால் ,அதை தினமும் காலை வெறும் வயிற்றில் தரலாம்.