முதலுதவி பெட்டியில் 7 பொருட்கள ...
முதலுதவி பெட்டியில் 7 பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும்

குழந்தைகள் இருக்கும் வீட்டில் முதலுதவிப்பெட்டி அவசியம் இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகளுக்கு குறும்புத்தனமும் விளையாட்டுத்தனமும் அதிகமுள்ளதால் காயம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அந்த அவசர நேரத்தில் பொருட்களை தேடாமல் முன்னதாகவே முதலுதவிப் பெட்டியை வீட்டில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.
இன்னும் அடுத்த கட்ட நிலைக்கு ஆபத்து நேர்வதை தவிர்த்தல், நிலைமை மோசமடைவதை தவிர்த்தல் அல்லது இன்னும் கூடுதலான காயம் ஏற்படுவதை தவிர்த்தல். குணமாவுதலை ஊக்குவித்தல். ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்ற அப்பொழுது அவருக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து சமயோசிதமாக செயல்பட வேண்டும். முதலுதவிப்பெட்டியில் இருக்கும் பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னதாகவே அறிந்திருப்பது நல்லது.
உங்கள் முதலுதவி கிட் பெட்டியில் இருக்க வேண்டிய 7 பொருட்கள்
இதுவே, முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய 7 முக்கியமான மற்றும் அத்தியாவசியமான பொருட்களாகும். காயத்தை ஆற்றுவதற்கான ஆயில்மெண்ட் மற்றும் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்துகள் இருக்க வேண்டும்.
- பேண்டேஜ், கட்டு துணி இருக்க வேண்டும். ஒட்டுவதற்கான டேப் ரோல்கள் இருக்க வேண்டும். முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும்
- காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.
- துணிகளை வெட்ட மற்றும் காயம்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட கத்திரி இருக்க வேண்டும்.
- தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும்.
- முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் கட்டை இருக்க வேண்டும்.
- தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும். மற்றும் காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.
- தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும். மற்றும் காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.
விபத்து ஏற்பட்டால் முதலுதவி பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
ஆபத்துகள் ஏற்படும் பொழுது முதலுதவி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். கட்டாயம் படிக்க வேண்டும்.
- கத்தி, பிளேடு போன்ற கூர்மையான பொருட்களால் குழந்தைகளுக்கு வெட்டு காயம் ஏற்பட்டாலோ, அல்லது கீழே விழுந்து அடிபட்டாலோ முதலுதவி செய்வது எப்படி என்பதை தெரிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் சிறு சிறு காயங்களுக்கு கட்டுப்போடுவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- உடம்புகளில் எந்தெந்த வீக்கங்களுக்கு எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
- சிறு தீக்காயங்களுக்கு மட்டுமே கிரீம் போன்றவைகளை பயன்படுத்துங்கள். இந்த வகை காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- வெட்டுக்காயங்கள் ஏற்படும் பொழுது காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
- தொடர்ந்து ரத்தம் வருவது, ரத்தக்கசிவு, போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது போன்றவைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
- சிறு காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் உண்டாகும் பொழுது இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
- அத்தியாவசியமான பொருட்கள் கொண்ட ‘முதலுதவி’ பெட்டி அனைவர் வீட்டிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
- முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்
- அவசரத்திற்கு ஏற்றாற் போல் எந்ரேமும் மருத்துவர்களின் போன் நம்பரும், முகவரியும் வீட்டில் எப்பொழுதும் அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும். முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
- குழந்தைகள் ஏற்கனவே அடிப்பட்ட பதட்டத்தில் இருப்பார்கள். அந்த நேரம் அவர்களை திட்டாமல், அறிவுரை கூறாமல், டென்ஷன் ஆகாமல், கொடுக்க வேண்டிய முதலுதவியை மட்டும் கவனத்தில் கொண்டு கொடுப்பதன் மூலம் ஆபத்தின் நிலையை நன்கு உணர்ந்து சிகிச்சை அளிக்க முடியும்.
ஒவ்வொரு தருணத்திலும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது பல ஆபத்துகளிலிருந்து அவர்களை காப்பாற்ற உதவுகிறது. இந்த முதலுதவிப்பெட்டியும் அதே போல் தான் குழந்தைகளின் எதிர்பாராத விபத்துகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதோடு, பெற்றோர் நமக்கும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...