8 வழிகளில் குழந்தையின் முடியை பராமரிக்கலாம் - அம்மாக்களுக்கான டிப்ஸ்

பெரியவர்களுக்கே அவங்களோட முடியை பராமரிக்கிறதுக்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கிறதோ அதே போல் குழந்தைகளோட முடியை பராமரிக்கிறதுக்கு நமக்கு பொறுமையும், பொறுப்பும் இருக்கின்றது. ஒவ்வொரு குழந்தையோட முடியும் மென்மையா, அடர்த்தியா, சுருட்டையா இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகளோட முடியை ஈஸியான முறையில எப்படி பராமரிக்கலாம்னு நாம இப்போ பார்க்கலாம்.
தலைக்கு குளிக்கிற முறை:
குழந்தைகளுக்கு தினமும் தலைக்கு தண்ணீர் ஊத்த கூடாது. அதுவும் ஷாம்பூ போட்டு தினமும் தலைக்கு கண்டிப்பாக குளிக்க வைக்க கூடாது. குழந்தைகளோட தலை சருமம் ரொம்ப மிருதுவாக இருக்கும். இதனால, வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஷாம்பூ போட்டு குளிக்க வைக்க வேண்டும்.
அதுவும் ஷாம்பூவை நேரடியா தலையில் போடக்கூடாது. கொஞ்சம் தண்ணீர்ல ஷாம்பூவை கலந்து அதன் பிறகு தலையில் தேய்து குளிக்க வைக்கணும்.
ஹேர் கட்:
பெண் குழந்தையாக இருந்தாலும், ஆண் குழந்தையாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி விட வேண்டும். அதற்கு குழந்தைகள் அழுதால் அது உனக்கு அழகாக இருக்கும்னு சொல்லி அவர்களை தயார்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு முடி வெட்ட வெட்ட வளர்ந்துவிடும். அதனால குழந்தையா இருக்கும் போது முடி வளர்க்கிறதை அவாய்ட் பண்ணிக்கலாம்.
தலை துடைப்பது:
குழந்தைகளோட தலையை அழுத்தி துடைக்க கூடாது இதனால முடி உதிர்வு ஏற்படும். மெதுவாக டவலால் தலையை ஒத்தி எடுக்க வேண்டும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு டிரையர் பயன்படுத்தக் கூடாது. அதிக முடியிருக்கும் குழந்தைக்கு டிரையர் போட்டே ஆக வேண்டும் என்ற சூழலில் கூல் டிரையர் மட்டுமே பயன்படுத்தலாம்.
முடி வளர
ஒரு சில குழந்தைகளுக்கு முடி வளர்ச்சி குறைவாக இருக்கும். குழந்தைகளுக்கு அதிகமா பாதாம், வால்நட், கீரை, தானிய வைகள், பழங்கள் இது போன்ற உணவு வகைகளை கொடுக்க வேண்டும். அசைவ வகையில் முட்டை மற்றும் மீன் ஆகியவை முடி வளர்ச்சியை சீராக்கும்.
சீப்பு
குழந்தைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு முறை சீப்பை பயன்படுத்தி தலை வாரிவிடவும். அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும். அழுத்தி சீவக் கூடாது மெதுவாக சீவ வேண்டும். தலை சீவும் போது தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் அது முடி வளர்ச்சிக்கு உதவும்.
ஆயில் மசாஜ்
சுத்தமான தேங்காய் எண்ணெய். ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தி தினமும் 5 நிமிடம் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு சூடு குறையும். அதே சமயத்தில் தலையில் புண், பொடுகு போன்ற தொல்லைகள் குழந்தைகளுக்கு வருவதை தவர்க்கலாம்.
நீர்சத்து
குழந்தையின் முடிக்கும், சருமத்துக்கும் முக்கியமானது நீர்ச்சத்து. நீர்ச்சத்து உள்ள பழ வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதுவும் வெயில் காலத்தில் இத்தகைய உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் கொடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
வெளியில் செல்லும் போது:
குழந்தைகளை வெளியில் தூக்கிச் செல்லும் போது கேப் அல்லது டவலால் குழந்தையின் தலையை கவர் செய்ய வேண்டும். காற்று மாசுவால் தலை முடி பிரச்னைகள் அதிகமாக வரும். அதுவும் குழந்தைகளின் தலை சருமம் மிருதுவாக இருப்பதால் அவர்களை அது பாதிக்கும். கேப் அல்லது டவல் கொண்டு மூடுவதால் அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
இவ்வாறு செய்தால் குழந்தைகளின் முடி நன்றாக, ஆரோக்கியமாக வளரும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...