1. festivals

குழந்தைகளுக்கு எந்த வயதில் மொட்டை போடுவது? ஏன் மொட்டை போட‌ வேண்டும்?

All age groups

Bharathi

3.2M பார்வை

4 years ago

குழந்தைகளுக்கு எந்த வயதில் மொட்டை போடுவது?  ஏன் மொட்டை போட‌ வேண்டும்?
Festivals

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன.  ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இருக்கிறது.  எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால், சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப் புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு.

Advertisement - Continue Reading Below

அதே போல் தான் மொட்டைக்கும் முடி ஆரோக்கியத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றது. முடிக்காக மட்டும் இல்லாமல் மொட்டை அடிப்பாதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் மற்றும் மொட்டை எந்த வயதில் அடிப்பது சிறந்தது, மொட்டை பின் எப்படி பராமரிக்க வேண்டும் ஆகிய விஷயங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மொட்டை போடுவது எதற்காக?

 பெரும்பாலும் இந்து மதத்தினர் குழந்தைகளுக்கு மொட்டை போடுவதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர். உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குல தெய்வம் கோவிலில் வைத்து குழந்தையை தாய் மாமன் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தும் விழா நடத்துவது வழக்கம்.

ஒரு‌ சிலர் எதற்காக ‌‌‌‌‌குழந்தைகளுக்கு  மொட்டை போட வேண்டும் என்று விதண்டாவாதம் பேசுகின்றனர். ஒரு சிலர் தேவையில்லாத செலவு என்று எண்ணி எதற்காக மொட்டை என்று வேண்டாம் என்று எண்ணுகின்றனர்... ஆனால் இளம் தம்பதியரோ இப்படி மொட்டை அடிக்கும் பழைய மூடநம்பிக்கை எல்லாம் எதற்கு என்று எண்ணி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவதில்லை.

ஆனால் நம் முன்னோர்கள் கூறிய சாஸ்திரம் சம்பிரதாய முறைகள் வேடிக்கையாக இருந்தாலும் அது அர்த்தங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.

மொட்டைப் போடுவதில் இருக்கும் அறிவியல் உண்மைகள்

நாம் இனிப்பு கலந்த தண்ணீரில் கையை விட்டு எடுத்தாலே இனிப்பு ஒட்டி கொள்கிறது. நம் தாயின் வயிற்றின் கருவில் ஒன்பது மாதங்கள் பனிக்குடத்தில் இருக்கிறோம். அந்த நீர் இரத்தம், மலம், சலம் மற்றும் தண்ணீரால் நிறைந்தது. அது அனைத்தும் சேர்ந்து ஊறி போய் இருக்கும் குழந்தையை வெளியே வந்ததும் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுகிறோம்.  ஆனால் இளம் தலை என்பதால் அழுத்தி பிடித்து துடைக்க முடியாது. அதனால் தலையில் உள்ள கசடு அப்படியே தான் இருக்கும். அதை நாம் மொட்டை அடித்து தான் போக்க முடியும். அப்போது குழந்தைகள் வளர்ந்து பின்னர் கிருமிகளால் தொற்று, ஒவ்வாமை இது எல்லாம் வருவது குறையும். இது அறிவியலால் நம்பப்படுகிறது..

 மொட்டை அடிப்பதன் மூலம், தான் என்னும் கர்வத்தை இழந்து கடவுளுக்கு அருகில் செல்கிறோம். இது கடவுளிடம் நமக்கு இருக்கும் பணிவை வெளிப்படுத்துவதாகும். மேலும் ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல், கடவுளை அடையக் கூடிய முயற்சியாகும். கடவுளுக்கு முன் எதுவுமே பெரிதல்ல. இது நமக்கு ஒரு ஞான அறிவைத் தருகிறது. இதனால்தான் முடி காணிக்கை செலுத்துவதை ஒரு முக்கிய சடங்காக நாம் பின்பற்றுகிறோம்.

எந்த வயதில் மொட்டை போடுவது?

Advertisement - Continue Reading Below

இது பலரின் சந்தேகம். ஒரு வயதிலா இரண்டு வயதிலா பிறந்த ஒரு மாதத்திலா ? எந்த வயதில் மொட்டை அடிப்பது ? இப்படியும் கேட்பதுண்டு... பின்னர் எத்தனை முறை போட வேண்டும் என்று கேட்பவரும் உண்டு... இதற்கு எல்லாம் விடை அவரவர் விருப்பம் மற்றும் குடும்ப வழக்கப்படி என்று தான் சொல்ல வேண்டும்...

பொதுவாக குழந்தைகளுக்கு தலை நன்றாக நின்ற பின் போடுவது நல்லது.. எங்கள் குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஒரு வயது முடிவில் குல தெய்வ கோவிலுக்கு சென்று முடி காணிக்கை செலுத்துவது வழக்கம்...ஒரு மதத்தினர் பிறந்து ஒரு மாதத்தில் அல்லது 45 நாட்களில் முடி எடுக்கின்றனர்...

எங்கள் ஊர்களில் குடும்பங்களில் குழந்தைகளுக்கு மூன்று மொட்டை அடிப்பது வழக்கம். அதுவும் முதல் முடி திருச்செந்தூர் செந்தில்நாதருக்கு. அதன் பின்னர் குல தெய்வம் இஷ்ட தெய்வம் என்று மூன்று மொட்டை போடுவதை வழக்கமாக நாங்கள் பின்பற்றுகின்றோம்.

குறிப்பு: ஒற்றை படை வரிசையில் தான் மொட்டை போடுவது நலம்.(1,3,5,..) இரண்டு தடவை போட்டு நிறுத்தாமல் மூன்றாவது முறையாகவும் போடுவது வழக்கம்.

மொட்டையின் பொழுது கவனிக்க வேண்டியவை:

குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கும் முன், குழந்தை சரியான மன நிலையில் இருக்கிறதா, அமைதியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்; பின், குழந்தையின் கையில் விளையாட்டு சாமான்களை கொடுத்து அதை திசை திரும்பியவாறு குழந்தை அசையாமல் இருக்கும் வண்ணம் பிடித்துக் கொள்ள வேண்டும். பின் குழந்தையின் தலையில் உள்ள முடியை மெதுவாக, பகுதி பகுதியாக மொட்டை அடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தைக்கு நீளமான முடி இருந்தால், நன்கு கத்திரியால் முடியை ஓட்ட வெட்டி விட்டு, பின் மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க பிளேடு, ரேசர் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கு மொட்டை எடுக்க ட்ரிம்மர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது நல்லது; இதனால், குழந்தையின் தலையில் காயங்கள், கீறல்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

குழந்தைக்கு மொட்டை எடுத்து முடித்த பின், குழந்தையை வெதுவெதுப்பான, மிதமான சூடு கொண்ட நீரால் நன்கு குளிப்பாட்ட வேண்டும்.

மொட்டை போட்ட பிறகு எப்படி குழந்தைகளை பராமரிக்க வேண்டும்?

  1. முதலில் மொட்டை போட்டு முடித்தப்பின்னர் குளிப்பாட்டி, தகப்பனார் குழந்தையின் தலையில் சந்தனம் தடவ வேண்டும். அன்று முழுவதும் சந்தனம் காய காய போட்டுவிட்டால் குளிர்ச்சியாக இருக்கும்.
  2. மொட்டைப் போட்டப் பின்னர் வீட்டில் குழந்தைகளை கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
  3. காலை மாலை ‌என இரு வேளையும் தேங்காய் எண்ணெய் தடவி விடுவது நல்லது.
  4. மிதமான ஷாம்பு போட்டுக் கொள்வது நல்லது.. அடிக்கடி ஷாம்பு போட வேண்டாம்.
  5. சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும்.தினமும் ஒரு பச்சை நிற காய்கறிகள், பருவக்கால பழங்கள் மற்றும் ஏதேனும் ஒரு கீரை வகைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

”ஆயிரம் மடங்கு அறிவியல் வளர்ந்து இருந்தாலும் முன்னோர்களின் அறிவார்ந்த கருத்துக்களுக்கு ஈடு இணை இல்லை”. முன்னோர்கள் ஒன்றும் பொழுதுப்போக்குக்கு சொல்லிப் போகவில்லை. முடிந்த வரையில் அவர்களைப் பின்பற்ற முயற்சி செய்வோம். 

உங்களுக்கு நிச்சயமாக பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். நன்றி! அடுத்த பதிவில் உங்களுடன் இணைகிறேன்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...