குழந்தை நடக்க தயாராக உள்ளது என்பதற்கான பொதுவான அறிகுறிகள்

0 to 1 years

Radha Shri

5.0M பார்வை

6 years ago

 குழந்தை நடக்க தயாராக உள்ளது என்பதற்கான பொதுவான அறிகுறிகள்

குழந்தை பிறந்த முதல் வருடத்தில் அவர்களின் ஒவ்வொரு அடுத்த கட்ட முன்னேற்றங்களும், இயக்கங்களும் நம்மை வியக்க வைக்கும். என்னுடைய குழந்தை குப்புற விழ தாமதமானது. ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன், ஆனால் அதை பற்றி தெளிவாக தகவல்கள் தெரிந்த பின் இதில் கவலை கொள்ள அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டேன். இதில் அம்மாக்களுக்கு நம் குழந்தை வளரும் போது இன்னும் குப்புற விழவில்லையே, தவழவில்லையே, நடக்கவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்விலும் வெவ்வேறு காலகட்டங்களில் நேரங்களில் அவர்களின் மைற்கல்லை அடைவார்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு நாம் வருத்தம் அடைய அவசியமில்லை.

Advertisement - Continue Reading Below

உதாரணமாக இந்த பதிவில் குழந்தையின் நடையை பற்றி குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். அதாவது குழந்தை நடக்க தயாராக இருப்பதற்கான அறிகுறிகளை பார்க்கலாம்.

உங்கள் குழந்தை நடக்க போகிறது என்பதை எவ்வாறு அறியலாம்?

குழந்தை ஒன்பதாம் மாதத்தை கடந்து செல்லும் போது பல அறிகுறிகள் காணலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதால், அறிகுறிகள் மாறுபடலாம்.

Advertisement - Continue Reading Below
  1. மேலிருந்து இழுப்பது – உங்கள் குழந்தை நடை போட முயற்சிக்கும் போது, அருகில் உள்ள மர பெஞ்ச், கட்டில் போன்ற மரச்சாமான்களை பிடித்து கொண்டு எழுந்து நிற்க பப முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் குழந்தை ஒரு மாத காலத்திற்குள் நடக்க முயற்சிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  2. வட்டம் அடிப்பது  - உங்கல் குழந்தை 7 அல்லது 8 மாதம் இருக்கும் போது சுற்றுவார்கள் அதாவது வட்டம் அடிப்பார்கள். இது குழந்தைகள் நடை பழக தொடங்குவதற்கான அறிகுறிகளில் ஒன்று. சில குழந்தைகள் 10 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
  3. கைகளை பயன்படுத்தி படிகளில் ஏறுவது – சில குழந்தைகள் தங்கள் கைகளை பயன்படுத்தி மாடிப்படிகளில் ஏற முயற்சி செய்வார்கள். இந்த குழந்தைகள் தங்கள் கால்களை வைத்து வேகமாக நகர்வார்கள். இதை நீங்கள் காணும் போது உங்கள் குழந்தை சீக்கிரமே முதல் படி எடுத்து வைக்க போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
  4. உடல் அறிகுறிகள் – நிச்சயமாக அம்மாக்களுக்கு தெரியும், குழந்தைகள் ஒரு மைற்கல்லை அடையும் போது அடத்தை காட்டுவது காரணம் இல்லாமல் அழுவது, சாப்பிட அடம் பிடிப்பது, அதிக நேரம் தூக்கம் அல்லது ஓய்வு போன்ற அறிகுறிகளை காணலாம். இதன் மூலம் இந்த உலகத்தை அவர்களின் கால்களால் ஆராய தொடங்கப்போகிறார்கள். அதனால் வீட்டை பாதுகாப்பான சூழலாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  5. பிடித்து செல்வது – அதாவது குழந்தை அருகில் இருக்கும் நாற்காலி அல்லது சோஃபா போன்ற பொருட்களை பிடித்து இரண்டு மூன்று அடி எடுத்து வைப்பார்கள். கனமான பொருட்களை பிடித்து முன்னேறி செல்ல தொடங்குவார்கள்.
  6. முழங்கால்களை வைத்து சமநிலைப்படுத்துவது – பல குழந்தைகள் தங்களின் முழங்கால்களை வைத்து சமநிலையாக்கி குனிந்து எழுந்து நின்று நடக்க தொடங்குவார்கள். முதல் ஒரு காலை வைத்து ஊன்றி நின்று பின்பு அடுத்த காலை அடி எடுத்து வைத்து நடக்க பழகுவார்கள்.
  7. கிராப் வாக் – குழந்தை நண்டு போல் ஊர்ந்து செல்லும் என்று சொல்வார்கள். அது தான் கிராப் வாக். அவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் பயன்படுத்தி ஊர்ந்து வேகமாக ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றுவிடுவார்கள். சீக்கிரமே உங்கள் குழந்தை நடை பயில தொடங்க போகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
  8. உதவியுடன் நடப்பது – சுவற்றை பிடித்து அல்லது பெரியவர்கள் கையை பிடித்து நடக்க தொடங்குவார்கள். இது அவர்களுக்குள் நடப்பதற்கான தன்ன்மபிக்கையை கொடுக்கிறது. அவர்களின் இரண்டு கைகளையும் நாம் பிடித்து நடக்க உதவி செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஊக்கமாகவும் எண்ணுவார்கள். அதன் பிறகு ஒரு கையை விட்டு விட்டு நடக்க விட வேண்டும் இப்படியே தொடரும் போது அவர்கள் தாங்களாகவே நடை பயில தொடங்கிவிடுவார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். சில நேரங்களில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது நீங்கள் அவர்களோடு ஒப்பிட்டு வருத்தம் அடைவீர்கள். ஆனால் 15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை நடை பயிலும் போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது

  • வாக்கரை தவிர்த்து விடுங்கள். உங்கள் குழந்தையின் இயல்பான, சீரான, நிலையான வளர்ச்சி தடைப்படும்.
  • குழந்தைகள் நடை பயில்வதில் அவர்களின் எடை ஒரு காரணமாக இருக்கின்றது. குழந்தைகள் பருமனாக இருந்தால் சிறிது தாமதமாகலாம்.
  • முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை வேகமான நடை பயில்கிறார்கள் என்று நம்பப்படுகின்றது. இதற்கு காரணம் உடன்பிறந்தவர்களின் ஊக்கத்தால் சீக்கிரமே நடை பயில்கிறார்கள்
  • சில குழந்தைகள் நடக்க ஆரம்பித்த பிறகும், வேகமாக செல்ல தவழ்வார்கள். இது முற்றிகும் இயல்பானது. தங்களுக்கு பிடிமானம் கிடைக்கும் வரை இதை பின்பற்றுவார்கள் அதன் பிறகு எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகள் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை நிறுத்தவே முடியாது. நிறுத்தவும் கூடாது. வீட்டில் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை எடுக்க முடியும். அதனால் குழந்தையின் செயலையும், இயக்கத்தையும் தடுக்காமல் வீட்டை அவர்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொடுப்பதே அவர்கள் வளர்ச்சி சிறப்பாக அமைய வழிவகுக்கும்.

குறுநடையின் அழகை ரசிக்கவும், படம் பிடிக்கவும் தயாராக இருங்க

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...