குழந்தைகளின் வாயு எளிதாக வெளியேற உதவும் பாட்டி வைத்தியம்

All age groups

Bharathi

3.0M பார்வை

4 years ago

குழந்தைகளின் வாயு எளிதாக வெளியேற உதவும் பாட்டி வைத்தியம்

பிறந்த குழந்தைகள் முதல் 1 வயது வரையுள்ள குழந்தைகள் சிரமப்படுவதில் வாயுத் தொல்லை ஒரு முக்கிய பிரச்சனையாகும். திடீரென இரவில் குழந்தைகள் பீறிட்டு அழுவார்கள். காரணம் என்னவாக இருக்கும் என்று வீட்டிலேயே அனைவரும் எழுந்து விடுவார்கள். எவ்வளவு சமாதானம் செய்தாலும் அழுகையை நிறுத்த முடியாது. கடைசியில் அதற்கு காரணம் வாயு தொல்லையாக இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement - Continue Reading Below

குழந்தைகளுக்கு ஏன் வாயுத் தொல்லை வருகிறது?

குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை ஏற்படும்போது அவர்களுக்கு அதை சொல்ல தெரியாது. அதனால் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். பொதுவாக தாய்ப்பால் அல்லது பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் காற்றை அதிகமாக உள்ளிழுக்கும் போது வாய்வு தொல்லை ஏற்படலாம்.

  • செரிமான மண்டலம் சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பது தான் இதற்கு காரணம். பற்கள் முளைக்கும்போது சில குழந்தைகளுக்கு இந்த தொந்தரவு ஏற்படும்.
  • தாய் வாயூவை உண்டாக்கும் உணவுகளை உண்ணும் போது தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை ஏற்படும்
  • குழந்தைகள் நாள் முழுதும் உணவு அருந்திக் கொன்டே இருப்பதால் குடல் அதிக அளவு வாயுவை உற்பத்தி செய்கிறது.

எவ்வாறு கண்டறிவது?

குழந்தையின் வயிற்று தொந்தரவுகளை கண்டறிவது என்பது சற்று கடினமான விஷயன் தான் என்றாலும், சில அறிகுறிகள் மூலம் அவர்களின் வயிற்றுப் பிரச்சனைகளை கண்டறியலாம். இதை காண்க:

  • குழந்தையின் வயிற்று பகுதி மிகவும் சூடாக உணரப்பட்டால், வயிற்று வலியினால் தான் குழந்தை அழுகிறது என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
  • வயிறு உப்பி கொண்டு இருக்கும்.
  • காலை தூக்கி வயிறு வரை கொண்டு சென்று குழந்தை அழும்.
  • எவ்வளவு சமாதானம் செய்தாலும் அழுகையை நிறுத்த முடியாது.
Advertisement - Continue Reading Below

வாயுத் தொல்லைக்கான வீட்டு வைத்தியம்

குழந்தைகளை பொறுத்த வரையில் இந்த மாதிரி வாயுத் தொல்லைகள் வருவது இயல்பு தான். அதற்கான எப்போதும் அலோபதி மருந்து கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. எப்போதும் நம் பாட்டிமார்கள் கையிருப்பில் வைத்திருக்கும் வைத்தியங்கள் இதற்கு பக்க பலமாக இருக்கும். வீட்டு வைத்தியத்தை தாண்டியும் குழந்தை தொடர்ந்து  அழுது கொண்டே இருந்தால் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். வீட்டிலேயே குழந்தையின் வாயித் தொல்லையை தீர்க்கும் சில வைத்திய முறைகள்...

  • தாய்ப்பால் கொடுக்கும் போது தலை பகுதி சற்று உயர்வாக இருக்க வேண்டும். வயிற்றுப் பகுதி கீழே இறங்கி இருக்க வேண்டும்.
  • பால் குடித்து முடித்ததும் உடனே படுக்க வைக்கக் கூடாது. முதுகை மேல் பகுதியில் இருந்து கீழே வரை தட்டி கொடுத்து ஏப்பம் வந்து பிறகு படுக்க வைக்க வேண்டும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வாயு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.
  • தினமும் ஒரு சங்கு வெந்நீர் கொடுக்கலாம்.
  • குழந்தைகளின் கால்களை சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்ற வேண்டும். இதனால் வாய்வு வெளியேறும் , வலிகளும் குறையும்.
  • ஒரு காட்டன் துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நன்றாக பிழிந்தபின், அந்த துண்டை குழந்தையின் வயிற்றில் போடலாம்.
  • தாய்மார்கள் சீரக தண்ணீர் அருந்துவது நல்லது. உணவில் பெருங்காயம், பூண்டு, ஓமம் சேர்த்துக் கொள்ளலாம். இவை குழந்தையின் உணவு செரிமான தொல்லையையும், வாயு தொல்லையையும் போக்கும்.

சிறந்த பாட்டி வைத்தியம்

இன்னொரு சிறந்த வைத்தியம் என்னுடைய பக்கத்து வீட்டு பாட்டி சொன்னது,  வெள்ளை துணி குழந்தைகளுக்கு வைத்து இருப்போம் அல்லவா அதில் சிறிதளவு தாய்ப்பால் எடுத்து குழந்தையின் வயிற்றில் போட்டால் உடனே குழந்தையின் அழுகை நின்று விடும்.

வயிற்றில் நல்எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் போடலாம். எண்ணெய் விட்டு வட்ட வடிவில் தொப்புளைச் சுற்றி சுழற்சி முறையில் தடவி வந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு நன்றாக மஸாஜ் செய்து விட வேண்டும்.

குழந்தைகள் வாயுத்தொல்லையினால்தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத்தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.

  • பெருங்காயம் - வெந்நீரில் கட்டி காயம் சிறிது கரைத்து அதை அரை முதல் ஒரு சங்கு கொடுத்தால் பெரிய ஏப்பம் வந்து உடனடியாக சரியாகும்.
  • ஓமம் - ஒரு கனமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் ஓமம் போட்டு வறுத்து பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து அரை டம்ளர் ஆக வற்ற வைத்து வடிகட்டி கொள்ளவும்.அதை ஒரு சங்கு வயிறு வலிக்கும் போது கொடுத்தால் சரியாகி விடும்.
  • சீரகம் - தண்ணீரில் ½ ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை தொடர்ந்து சில இடைவெளியில் கொடுத்து வருவதால் வாய்வு தொல்லை நீங்கும்.
  • துளசி நீர் - துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அது ஆறிய பிறகு குழந்தைக்குச் சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். இது குழந்தைக்கு வாயு தொல்லை ஏற்படாமல் தடுக்கும்.

பெரும்பாலும் சாதரணமான வயிறு மற்றும் வாயுப் பிரச்சனைகள் வீட்டு வைத்திய முறைகளின் மூலம் குணமடையும். இதை எல்லாம் முயற்சி செய்தும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...