கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற பொதுவான 5 பதற்றங்களை நான் எப்படி சமாளித்தேன் ?

பொதுவாக புதிதாக கருவுற்ற பெண்களுக்கு நிறைய கவலைகளும், பயங்களும் இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. முன்னாடி எல்லாம் கூட்டு குடும்பமா இருந்தாங்க என்ன சந்தேகங்களா இருந்தாலும் பிரச்னைகளா இருந்தாலும் பக்கத்துல இருக்குற பெரியவங்க பார்த்து என்னன்னுசொல்லிடுவாங்க. ஆனா இப்போ வேலை காரணமா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருக்க வேண்டியதா இருக்கு.
நானும் கல்யாணம் ஆனதும் என்னோட ஹஸ்பண்டோட வெளியூருக்கு வந்துட்டேன். வந்த கொஞ்ச நாள் ரொம்ப நல்லாவே இருந்தது.அதுவே நான் முதல் முறை கருவுற்ற போது மகிழ்ச்சியை தாண்டி ஒரு வித பயம் ஏற்பட ஆரம்பிச்சது. எனக்குள் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட எனக்கு பல கேள்விகளை எழுப்பியது. இது சரி தானாஎல்லோருக்கும் இப்படித் தான் இருக்குமா? இல்லை எனக்கு மட்டும் இப்படி இருக்கிறதா? இது போன்று பலகேள்விகள் இருந்தது. எனக்கு தெரிஞ்சு புதிதாக கருவுற்ற எல்லா பெண்களுக்கும் கண்டிப்பா இந்த மாதிரி கவலை இருக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற பொதுவான 5 பதற்றங்களை நான் எப்படி சமாளித்தேன் ?
பெரும்பாலும் கர்ப்ப காலத்தில இந்த ஐந்து விஷயங்களை பற்றிய பதற்றம் வருவது ஒயல்பு தான். ஆனால் அதோட விளக்கம் நமக்கு கிடைக்கிற வரைக்கும் நிம்மதி இருக்காது. எப்போதுமே கர்ப்ப கால சந்தேகங்கள், பயங்களை உடனே கேட்டு தீர்த்துக்கிறது நல்லது. இது நம்ம மனநிலைக்கும் குழந்தையோட மனநிலைக்கும் நல்லது. என்னோட அனுபவத்தில் 5 விஹயங்களை நான் எப்படி சமாளித்தேன்னு என்பதை உங்களோட இந்த பதிவு மூலமா பகிர்ந்துகிறேன்.
உடல் எடை குறைவு: கருவுற்ற முதல் மூணு மாதங்கள்ல என்னோட எடை குறைய ஆரம்பிச்சது. பொதுவா கர்ப்ப காலத்துல எடை ஏறும்னு சொல்லுவாங்க அதனால என்னோட எடை குறைஞ்சப்போ ரொம்ப கவலைப்பட்டேன். ஆனா அதுக்கு கவலைப்பட அவசியம் இல்லைன்னு அப்புறம் தான்புரிஞ்சுது. முதல் மூணு மாசத்துல எதுவும் சரியா சாப்பிட முடியாது. அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும்.சாப்பிட்டது கூட சில சமயங்கள்ல அப்படியே வெளில வந்திடும். இதனால தான் நாம முதல் மூணு மாதத்துலஎடை குறையுறோம். அதுவே 4வது மாதத்துல இருந்து சரி ஆயிடும். ஆட்டோமேட்டிக்கா எடை ஏறஆரம்பிச்சுடும்.
ஸ்பாட்டிங் : கருவுற்ற முதல் மூணு மாதங்கள்ல இயல்பா எல்லா பெண்களுக்கும் இருக்கிற கருக்கலைவு கவலை எனக்கும் இருந்துச்சு. அதுவும் நான் 8 வாரங்கள் கர்ப்பமா இருக்கும் போது சிறிது அளவு இரத்தம் வந்ததை பார்த்ததும் மாதவிடாய் வந்து விட்டதாகவும், கரு கலைந்து விட்டதுன்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டேன். உடனேஎன்னோட டாக்டரை கேட்டப்போ தான் அவங்க அதுக்கு சரியான விளக்கம் கொடுத்தாங்க. அதை இப்போ நான் உங்களோட பகிர்ந்துக்கிறேன்.
இதை ஸ்பாட்டிங்னு சொல்லுவாங்க. பொதுவா கருவுற்ற 7,8 வாரத்துல இருக்குற பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாதிரி இருக்கும். அது இயல்பானது தான். அதுக்காக பயந்திட வேண்டாம்னு அவங்க சொன்னதை கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு உயிரே வந்துச்சு. இந்த மாதிரி பிரச்னை உங்களுக்கு இருந்தா அதுக்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. உங்களுக்கு ரொம்ப அதிகமா மாதவிடாய் போல இருந்தா மட்டும் உடனே டாக்டரை போய் பாருங்க.
அடிவயிற்று வலி: 8 வாரங்களுக்கு மேல் அடிக்கடி எனக்கு அடி வயிறு வலிக்கிற மாதிரி தோணும். சில சமயத்துல அதிகமாவே வலி இருக்கும். அந்த நேரத்துல ஒருவேளை நம்ம கரு சரியா வளரலையோ ஏதோ பிரச்னையா இருக்குமோன்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம் எங்க அம்மாவுக்கு போன் பண்ணி கேட்டேன் அப்போ அவங்க குழந்தை வளரும் போது நம்மோட வயிறு விரியுறதால வர்ற வலி தான் இது. எல்லா பெண்களுக்கும் இந்த வலி ஏற்படும்னு சொன்னாங்க.
கால் வீக்கம்: எனக்கு 5 மாதத்துல இருந்ததே கால் வீங்க ஆரம்பிச்சுடுச்சு. சில சமயங்கள்ல நடக்க கூட முடியாது.நான்அப்போ வேலைக்கு வேற போயிட்டு இருந்ததால அது எதுவும் பிரச்னையோன்னு நினைச்சேன். டாக்டர் என்னசொன்னாங்கன்னா நீர்ச்சத்து அதிகமா இருந்தா இப்படி இருக்கும். அந்த நேரங்கள்ல நடக்கிறது ரொம்ப நல்லது. கால் வீக்கம்னு வீட்டுல உட்கார்ந்தே இருந்தா இன்னும் அதிகமாகும்னு சொன்னாங்க. இந்த பிரச்னைகள்எல்லாம் குழந்தை பிறந்ததும் சரி ஆகிடும்.
குழந்தையின் மூவ்மென்ட்ஸ்: 7 மற்றும் 8 மாதங்கள்ல என்னோட குழந்தையோட மூவ்மென்ட்ஸ் நல்லா இருந்துச்சு.எப்போதும் வயிற்றுல கை வச்சு குழந்தையோட பேசிட்டே இருப்பேன். ஆனா 9 மாதங்கள்ல குழந்தையோட மூவ்மென்ட்ஸ என்னாலஉணர முடியல. அப்போ நான் ரொம்ப பயந்து போயிட்டேன். அடுத்த செக் அப் போகும் போது குழந்தை பெரிதா ஆனதால மூவ் பண்ண இடமில்லன்னு டாக்டர் சொன்னாங்க. என்னோட பயங்களை பத்தி இப்போ நினைச்சா ஒரு வித சிரிப்பாகவும், குழந்தையை பார்க்கும் போது சந்தோஷமாகவும் இருக்கு.
என்னோட அனுபவங்களைப் பத்தி நான் சொல்லிட்டேன். இந்த மாதிரி நீங்க எதையெல்லாம் நினைச்சு பயந்தீங்கன்னு கீழ ஷேர் பண்ணுங்க. நான் சொன்னதுல உங்களுக்கு எந்தெந்த விஷயங்கள் எல்லாம் நடந்துச்சு அதை நீங்க எப்படி எடுத்துகிட்டீங்கன்னும் கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. உங்களோட பங்களிப்பும் ஆலோசனைகளும் நம்மைப் போன்ற பல பெண்களுக்கு பயனளிக்கக் கூடியதா இருக்கும்!
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...