உங்கள் குழந்தை நீச்சல் கற்கும் போது பாதுகாப்பாக வைப்பது எப்படி?

All age groups

Radha Shri

3.8M பார்வை

3 years ago

உங்கள் குழந்தை நீச்சல் கற்கும் போது பாதுகாப்பாக வைப்பது எப்படி?

நம்முடைய குழந்தைகளுக்கு கோடை காலத்தில் தண்ணீரில் விளையாட வேண்டும் என்றால் அவ்வளவு ஆசை. அதிலும் நீச்சல் போன்ற பயிற்சிகளை கற்க அனுப்பும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். இது ஒரு பயிற்சியாக மட்டுமில்லாமல் அவர்களுக்கு உடலில் குளிச்சியையும், மனதில் குதூகலத்தையும் உருவாக்குகிறது. நீச்சல் குளத்தை பார்த்தவுடன் உற்சாகமாகும் உங்கள் குழந்தையின் பாதுகாப்பும் மிக அவசியமாகிறது. இதற்கு உங்கள் குழந்தை நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தை மகிழ்ச்சியான, பாதுகாப்பான நீச்சல் பயிற்சியை மேற்கொள்வார்கள்.

Advertisement - Continue Reading Below
Advertisement - Continue Reading Below

நீச்சல் கற்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்

  • உங்கள் குழந்தையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அல்லது பயிற்சியாளராவது குழந்தையுடன் இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தையை குளத்தில் தனியாக விடாதீர்கள்.
  • குளங்களில் மூடியிருக்கும் எந்தக் கேட்களிலும் அதாவது ஆபத்தான இடங்களுக்கு செல்லாதபடி உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். கூடவே பாதுகாப்பாக இருக்கவும் வெளியேறவும் கற்றுக் கொடுப்பது நல்லது.
  • நீச்சல் பயிற்சிக்கான உபகரணங்கள் தரமாக உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதனை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் பிள்ளையின் நீச்சல் பயிற்சியாளரின் உதவியை நாடலாம்.
  • நீச்சல் குளத்தில் அதிகம் ஈரமான மேற்பரப்பு இருப்பதால் உங்கள் குழந்தையை ஓட வேண்டாம் என்றும், மெதுவாக நடந்து செல்லவும் சொல்லிக் கொடுங்கள்.
  • உங்கள் பிள்ளை  பாதுகாப்பான ஆழத்தில் நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். நீந்த கற்றுக்கொள்ளும்போது ஆழம் குறைந்த பகுதியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
  • நீந்தும் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் உணவு தொண்டையில் அடைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அதனால் நீந்துவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ ஸ்னேக்ஸ் சாப்பிடுவது உகந்தது. 
  • வாட்டர் ப்ரூப் சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்துவதால் தோல் கருப்பாவதில் இருந்து பாதுகாக்க உதவும்.
  • உங்கள் பிள்ளைக்கு மற்றவர்களை தள்ளிவிடவோ மற்றவர் மீது  குதிக்கவோ கூடாது என்று சொல்லிக்கொடுங்கள். இதனால் இருவருக்கும்  காயம் ஏற்படாமல் இருக்கும்.
  •  குழந்தைகளுக்காக மிதக்கும்  டாய்ஸ் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் (ஒரு உள் குழாய், காற்று மெத்தை, அல்லது கடற்கரை பந்து) வந்துள்ளது. , நீந்திக் கற்றுக் கொள்ள உதவும், அவை மிதந்து போகவும் காற்று வெளியேறவும் வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • தண்ணீருக்குள் செல்லும் போது மெதுவாக செல்லக் கற்றுக் கொடுங்கள். திடீர் குளிர்ச்சி காரணமாக உடலின் வெப்பநிலை திடீரென மாறும் போது நலக்குறைவு ஏற்படலாம்.
  • நீச்சல் குளத் தண்ணீரை அதிகமாக குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த தண்ணீரில் இருக்கும் சிறு கிருமிகளால் வயிற்றிப் போக்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
  • நீச்சல் குளத்திற்கு செல்லும் முன் சோப்பு போட்டு குளித்துவிட்டு செல்லக் கற்றுக் கொடுங்கள். கைகளையும் நன்றாக கழுவ சொல்லுங்கள். இதே போல் குளத்திற்கு சென்று வந்த பின் சோப்பு போட்டு குளிக்க சொல்லுங்கள். இது அவர்களுக்கும், குளம் அசுத்தப்படாமல் பாதுகாக்கவும் உதவுகின்றது.
  • நீச்சல் தொப்பி அணிந்து கொள்வதன் மூலம் குழந்தைகளின் முடியும், உச்சந்தலையையும் பராமரிக்க முடியும்.
  • குளம் வழக்கமாக சுத்தம் செய்யப்படுகிறதா (குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை) மற்றும் சுகாதாரம் தரநிலைகள் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை சோதித்துக் கொள்வது அவசியம்.

குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தரும் விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளில் பெற்றோர் நம்முடைய பொறுப்பு அதிகமாக இருக்கின்றது. குழந்தைகள் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் போது அது அவர்களுக்கு பாதுகாப்பாதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்படி அமைத்துக் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் சிறந்த கற்றலைக் கொடுக்கும்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...