குழந்தைகளுக்கான குளியல் பொடி bath powder வீட்டில் செய்வது எப்படி?

பிறந்த குழந்தைக்கு பேபி சோப்பு, பேபி ஆயில், பேபி ஷாம்பு இவையெல்லாம் விட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் மூலிகை குளியல் பொடி. என் பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்டேன். என் குழந்தைகளுக்கும் இதை தான் பயன்படுத்துகிறேன். பிறந்த குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ரசாயனம் கலந்த சோப்புகளை விட இந்த மாதிரி நாமே தயாரிக்கும் குளியல் பொடி மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கிறது. வீட்டில் தயாரிக்கும் குளியல் பொடியின் நன்மைகளும் அதன் தயாரிக்கும் முறையையும் இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வீட்டில் குளியல் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
- பாசிப்பயறு - அரை கிலோ
- கார்போக அரிசி - 50கிராம்
- ஆவாரம் பூ - 50கிராம்
- பூலாங்கிழங்கு - 50கிராம்
- கோர கிழங்கு - 50கிராம்
- வெட்டி வேர் - 50கிராம்
- ஆரஞ்சு பழத் தோல் - 50கிராம்
- ரோஜா இதழ்கள் - 20 கிராம்
- கசகசா - 50கிராம்
- பாதாம் பருப்பு - 25கிராம்
- வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- துளசி - சிறிதளவு
- கற்றாழை - ஒரு துண்டு
- விரலி மஞ்சள்
- (அ) கஸ்தூரி மஞ்சள் – ஆண் குழந்தைகளுக்கு 15 கிராம், பெண் குழந்தைகளுக்கு 25 கிராம்
செய்முறை
- முதலில் பாசிப்பயறை நன்கு காய வைக்கவும்.
- அதே போல் ஆரஞ்சு பழத் தோலை நன்கு காய விடவும்.
- மீதி அனைத்து பொருட்களும் ஒரு பெரிய தட்டில் காய வைத்து எடுக்கவும்.
- கற்றாழை அப்படியே காய வைத்து எடுக்கவும்.இது காய இரண்டு மூன்று நாட்கள் வரை ஆகும்.
- பின்னர் காய வைத்த அனைத்தும் மிஷினில் கொடுத்து அரைத்து வாங்கிஅ வைத்துக் கொள்ளவும்.
- குளிக்கும் போது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் கலந்து பூசி குளித்து வந்தால் எந்தவித தோல் பாதிப்பும் ஏற்படாது.
ஹோம் மேட் மூலிகை குளியல் பொடியின் நன்மைகள்
இந்த மூலிகை குளியல் பொடியின் மூலம் சரும நோய்கள் மற்றும் நோய் தொற்றுகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுகின்றனர்
- கார்போக அரிசி சேர்த்து இருப்பதால் தோலில் எந்த வித நோயாக இருந்தாலும் குணமாகும்.
- பாசிப்பயிற்றில் வைட்டமின் A மற்றும் C நிறைந்துள்ளது
- கற்றாழை குளிர்ச்சி தரும்.
- வேப்பிலை , மஞ்சள் இயற்கை கிருமி நாசினி. சருமத்திலுள்ள எண்ணெய் பசையைப் போக்க உதவுகிறது
- வெட்டி வேர் கிருமிநாசினியாகவும், வாசனைக்கும், சரும மென்மைக்கும் பயன்படும்.
- பூலாங்கிழங்கு – வாசனைக்காகவும், சரும நிறத்தை அதிகரிக்கவும், சரும பிரச்சனைகளிலிருந்து காக்கவும் பயன்படும்.
- ஆவாரம் பூ – உடலில் பொலிவைத் தருவதோடு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்
- கஸ்தூரி மஞ்சள் – சருமத்தில் தேவையில்லாத முடிகளை அகற்ற பயன்படும்
- பாதாம் தோல் பளபளப்பாக உதவும்.
குளியல் பொடியை பயன்படுத்தும் முறை:
இந்த குளியல் பொடியை 6 மாசத்துக்கு மேல் உள்ள குழந்தைக்கு பயன்படுத்தலாம்.
குளிக்கும் போது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் கலந்து பூசி குளித்து வையுங்கள்.
குழந்தைகள் வளர வளர இந்த பொடியைப் பயன்படுத்தலாம். குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த பொடி வகைகள் பயன்படுத்தி வந்தால் வளர்ந்த பிறகும் அவர்களுக்கு சரும நோய்கள் அண்டாது. வயதிற்கேற்ப சரும பாதுகாப்பை அளிக்கும் மற்ற பொருள்களையும் சேர்க்கலாம். உங்கள் குழந்தையின் நிறம் என்னவாக இருந்தாலும் அவர்கள் சருமம் பொலிவு பெறுவதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள்.
இதை முயற்சி செய்து பாருங்கள். நம் முன்னோர்கள் கொடுத்த இந்த அற்புதமான மூலிகை பொடியை பயன்படுத்துவதன் மூலம் நாம் எண்ணற்ற பலன்களை பெற முடியும். எங்கள் வீட்டில் இது தான் குளியல் பவுடராக பயன்படுத்துகிறோம். உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...