தேசிய கல்விக் கொள்கை 2022 – 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, தேர்வு முறையில் மாற்றம்

தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2022 -ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் கல்வி கற்பார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். NEP பாடத்திட்டத்தைக் குறைத்து அடிப்படைக் கற்றலில் கவனம் செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை மதிப்பெண் சார்ந்த கல்வியிலிருந்து கற்றல் சார்ந்த கல்விக்கு அழைத்து செல்லும்.
மேலும் பழைய கொள்கைக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட NEP இன் கீழ்வரும் புதிய தேசிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இந்த மாற்றங்கள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வளர உதவுதாக குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சகம் முந்தைய கல்விக் கொள்கையை புதிய தேசிய கல்விக் கொள்கையாக மாற்றியுள்ளது. இப்போது மனிதவள மேலாண்மை அமைச்சகம் கல்வி அமைச்சகமாக மாறும். 2022 கல்வியாண்டிற்கு தேசிய கல்விக் கொள்கையில் என்னென்ன புதிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை விரிவாகப் பார்க்கலாம்:
34 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைக்கு பதிலாக மாற்றப்பட்டது
தேசிய கல்விக் கொள்கை 29 ஜூலை 2020 அன்று இந்திய மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இது 1986 இல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் தற்போதைய கல்விக் கொள்கைக்குப் பதிலாக மாற்றப்பட்டது. இந்தக் கொள்கை இந்திய கல்வியில் ஒரு பெரிய நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் தொழில் பயிற்சியை உள்ளடக்கிய உயர்கல்வி வரை தொடக்கக் கல்விக்கான ஒரு வடிவமைப்பாகும்.
தேசிய கல்விக் கொள்கை 2022 இன் முக்கிய நோக்கம்
தேசிய கல்விக் கொள்கை 2022 இன் முக்கிய நோக்கம் இந்தியாவின் கல்விக் கொள்கையை மறுவடிவமைப்பதாகும். இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி,
- எந்த ஒரு மொழியையும் யாரும் கட்டாயம் படிக்க வேண்டியதில்லை. இப்போது மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மொழியை தேர்வு செய்யலாம்.
- தேசிய கல்விக் கொள்கையானது பாலர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான கல்வியை உலகமயமாக்கும்.
- முன்பு 10 + 2 என்ற முறை பின்பற்றப்பட்டு தற்போது 5 + 3 + 3 + 4 ஆக மாறியுள்ளது.
- பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மொழி தேர்வு
குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சியில் மொழி முக்கியமானது. அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழி மற்றும் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்கும் போது பாடங்களை புரிந்து கொள்ளவும், தெளிவாக கற்கவும் முடியும்.
குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது. மாணவர்கள் விரும்பிய மொழியில் கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கையில் எந்தவித தடையும் இல்லை.
நர்சரி முதல் மேல்நிலைப்பள்ளி வரை வயது 5 கட்டங்களாக பிரிப்பது
10+2 பள்ளிக் கல்வி முறைக்கு மாற்றாக 5 + 3 + 3 + 4 ஆக மாறியுள்ளது.
தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும். புதிய கல்வி முறை, 3 ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.
8 வயது வரையுள்ள கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும். விரிவாகப் பார்க்கலாம்.
அடித்தள நிலை 5 years Fundamental
அடிப்படை கட்டத்தில் மூன்று வருட பள்ளி அல்லது அங்கன்வாடி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் 1 மற்றும் 2 வகுப்புகள் படிப்பது அடங்கும். அதாவது நர்சரி முதல் 2 ஆம் வகுப்பு வரை அடித்தள நிலை. இந்த நிலை 3 முதல் 8 வயது வரை இருக்கும். செயல்பாடு சார்ந்த கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆயத்த நிலை - 3 Years Preparatory
3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான படிப்பை உள்ளடக்கியது. இந்த நிலை 9 வயது முதல் 11 வயது வரையுள்ள இந்த கட்டத்தில் பேசுதல், படித்தல், எழுதுதல், உடற்கல்வி, மொழிகள், கலை அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் அடங்கும்.
நடுத்தர நிலை- 3 Years Middle
இந்த கட்டத்தில் 11 மற்றும் 14 வயதுடைய மாணவர்களும் 6 முதல் 8 ஆம் வகுப்புகளை உள்ளடக்கியுள்ளனர். இந்த கட்டத்தின் கீழ் உள்ள பாடங்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம்.
இரண்டாம் நிலை - 4 Years Secondary
14 முதல் 18 வயது வரையிலான மாணவர் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான படிப்பை இரண்டாம் நிலை உள்ளடக்கியது. 9 மற்றும் 10 ஆம் வகுப்பு முதல் கட்டத்தையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு இரண்டாம் கட்டத்தையும் உள்ளடக்கியது.
தேர்வு முறை
பள்ளி மாணவர்கள் இப்போது 2, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மறுவடிவமைப்பு தேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு நடத்தும் தேர்வுகள் அவர்களின் அறிவாற்றலைப் பரிசோதிக்கும் வகையில் இருக்கும். இதனால் இந்தக் கொள்கையானது மாணவர்களின் சுமையைக் குறைக்க உதவும்.
இதனுடன் 6ம் வகுப்பு முதல் மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள். அனுபவ கற்றலுக்காக ஒலிப்பதிவு அறிமுகப்படுத்தப்படும்.
மதிப்பெண் மற்றும் அறிக்கையாக மாணவர்களின் ரிப்போர்ட் கார்டு இருப்பதற்குப் பதிலாக, மாணவர்களின் திறன், திறமையை வெளிப்படுத்துவதாக அமையும்.
மாணவர்களின் விருப்ப பாடத்திற்கு முன்னுரிமை
தற்போதைய கல்விமுறையில் கணிதம், அறிவியல், வணிகம என சில பாடங்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் பாடத்திட்டத்தின் மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடத்தையும் தேர்வு செய்து படிக்க முடியும். தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் தங்களின் விருப்ப பாடத்தை முன்னதாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கும்.
மேற்படிப்பு
தேசிய கல்விக் கொள்கையின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒரு சான்றிதழுடன் 4 ஆண்டு பல்துறை இளங்கலை பட்டம் வழங்கப்படும். எம்.பில் பட்டப்படிப்பு நிறுத்தப்படும். மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து உயர் கல்வியையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர இந்திய உயர்கல்வி ஆணையம் (ஹெச்இசிஐ) உருவாக்கப்படும்.
தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை குழுவானது, மருத்துவம் மற்றும் சட்டக் கல்வியை தவிர்த்து, ஆசிரியர்களை உள்ளடக்கிய உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும். நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும்.
IIT களின் கீழ் மாற்றங்கள் கற்றலின் பன்முகத்தன்மையைப் பொறுத்து செய்யப்படும். மாணவர்களுக்கு இந்தியாவில் சர்வதேச கல்வி வழங்கப்படும்.
பல்வேறு உயர்கல்விகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க அகாடமி ஆஃப் கிரெடிட் என வங்கி உருவாக்கப்படும். மாணவர்கள் பல்வேறு நிலைகளில் பெறும் மதிப்பெண்கள் அவர்களின் கல்வியாண்டின் இறுதியில் சேர்க்கப்படும்.
பள்ளிப் பையின் எடை குறையும்
இத்திட்டத்தின் கீழ், 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் பள்ளி பையின் எடையை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் டிஜிட்டல் எடை இயந்திரம் இருக்கும். எனவே அனைத்து குழந்தைகளின் பள்ளி பைகளின் எடை கண்காணிக்கப்படும். பள்ளிப் பைகளில் குழந்தைகளின் தோள்களுக்கு ஏற்றவாறு சரிசெய்யப்பட்ட டேபிள் ஸ்ட்ராப்புகள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்களின் கல்வித் தகுதி
ஒரு சிறந்த ஆசிரியராக நான்கு வருட இளங்கலைப் பட்டம் அவசியம். 2030-ம் ஆண்டுக்குள் பள்ளியில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது 4-ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட் முடித்து இருப்பது கட்டாயமாக்கப்படும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம், மாணவர்கள் ஆர்வமுள்ள, ஊக்கமளிக்கும், உயர் தகுதி வாய்ந்த தொழில்முறை மற்றும் திறன் வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதாகும். ஆசிரியர் கல்விக்கான புதிய, முழுமையான தேசிய அளவில் பாடத்திட்டம் (என்சிஎப்டிஇ) வகுக்கப்படும்.
பள்ளிகளில் டிஜிட்டல் வசதி
ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கோடிங்(coding) முறை கற்பிக்கப்படும் அனைத்துப் பள்ளிகளிலும் டிஜிட்டல் வசதி ஏற்படுத்தப்படும். கற்றலை எளிதாக்க செயற்கை நுண்ணறிவு மென்பொருளும் பயன்படுத்தப்படும்
மாணவர்களின் உடல்/மன நலம்
மாணவர்களின் உடல்நலம், குறிப்பாக மனநலம் மற்றும் ஆலோசகர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை பணியமர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக மதிய உணவு காலை உணவு சேர்க்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கையில் சிறப்பு குழந்தைகளுக்கான முன்னுரிமைகள்
- மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தரமான மற்றும் சமமான கல்வி கிடைப்பதில் பல சவால்கள் கல்விமுறையில் இருக்கின்றது. மாற்று திறனாளி குழந்தைகளின் கல்வி தடைப்படாமல் இருக்கும் வகையில் அனைத்து கல்வி வசதிகளையும் பெற முடியும்.
- புதிய தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்ட குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எவ்வாறு பயிற்றுவிப்பது தொடர்பாக அனைத்து ஆசிரியர் கல்வித் திட்டத்திலும் பாடமாகச் சேர்க்கப்படும்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஒருங்கிணைத்தல், அவர்களுக்காகச் சிறப்பு பயிற்றுனர்களைச் சேர்த்தல் மற்றும் வளர்ச்சிக்கான மையங்களை உருவாக்குதல் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
- சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கற்பதற்காக பிரத்தேய கருவிகள், தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள், மொழி அடிப்படையில் கற்றல் கருவிகள் வழங்கப்படும்.
- குறைபாடுள்ள குழந்தைகள், வழக்கமான பள்ளிக்கு செல்வது, அல்லது சிறப்புப் பள்ளிக்கு சென்று படிப்பதை மாற்றுத்திறனாளி உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களின் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.
பெருந்தொற்று காலத்திலும் ஆன்லைன் கல்வியை மேம்படுத்த
கொரோனோ போன்று பெருந்தொற்று நோய் காலத்தில் அல்லது தொற்று நோய் காலத்தில் குழந்தைகளின் கற்றல் தடைப்படுவதை தடுக்கும் விதமாக நேரடி கல்விமுறை சாத்தியமில்லாதபோது, தரமான மற்றும் தடையில்லா கல்வியை உருவாக்க, ஆன்லைன் கல்வியை மேம்படுத்த முழுமையான பரிந்துரைகள் உருவாக்கப்பட உள்ளன.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...