3 வயதாகியும் குழந்தை சரியாக பேசவில்லையா? அறிகுறிகள் மற்றும் ஊக்கப்படுத்தும் பயிற்சிகள்

குழந்தைகளின் பேச்சு தாமதத்திற்கு கொரோனா தொற்று காலத்தின் பங்கு முக்கியமானது. சிறு குழந்தைகளிடையே இந்த பிரச்சனை அதிகரிப்பதை நிபுணர்கள் கவனித்துள்ளனர். குழந்தைகளில் முன்பு காணப்பட்டதை விட நடத்தைப் பிரச்சினைகள், வளர்ச்சிப் பிரச்சினைகள் ஆகியவற்றில் 2.5 மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் பேச்சு ஒலி குறைபாடுகள் (SSD), திணறல், அப்ராக்ஸியா, சமூக தொடர்பு இல்லாமை மற்றும் பிற குறைபாடுகள் போன்றவை சுமார் ஒன்பது சதவீத குழந்தைகளை பாதிக்கின்றன. ஏறக்குறைய ஐந்து முதல் எட்டு சதவீத பாலர் பள்ளிகளில் மொழி வளர்ச்சியில் தாமதங்களை சந்திக்கின்றனர். இது அவர்களின் அடுத்தடுத்த பள்ளி ஆண்டுகள் வரை தொடர்கிறது, அதே நேரத்தில் இரண்டு வயது குழந்தைகளில் 15-20 சதவீதம் பேர் வெளிப்படையான மொழி வளர்ச்சியில் தாமதமாக உள்ளனர்.
பயப்பட வேண்டாம்! குழந்தைகளின் பேச்சு திறனை ஊக்கப்படுத்தும் ஆக்டிவிட்டீஸ், நிபுணரின் உதவி மற்றும் பெற்றோரின் பங்களிப்போடு இந்தப் பிரச்சனையை எளிமையாக தீர்க்க முடியும். குழந்தையின் பேச்சு திறனில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? வீட்டிலேயே குழந்தைகளுக்கு எப்படி ஊக்கம் கொடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
கொரோனா தொற்று என்னென்ன தாக்கங்களை குழந்தையின் பேச்சு திறனில் ஏற்படுத்தியுள்ளது பாதித்துள்ளது
நீங்கள் விரும்புவதை விட அதிக நேரம் திரையில் இருப்பதால் பேச்சு திறன் பாதிக்கிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் முகபாவனைகளை குழந்தைகளால் கவனிக்க முடியவில்லை. அதிக நேரம் முகமூடி அணிந்த பெரியவர்களுடன் பேசுவதற்கு கடினமானது. இது ஆரம்பத்தில் இருந்தே, பேச்சு வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
குழந்தைகளில் முன்பு காணப்பட்ட நடத்தை பிரச்சினைகள், வளர்ச்சிப் பிரச்சினைகள் 2.5 மடங்கு அதிகரித்துள்ளன. முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற அதாவது நடத்தை பிரச்சினைகள், மொழி வளர்ச்சி, பேச்சு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை மருத்துவர்கள், நிபுணர்கள் (வாரத்திற்கு ஒரு முறை) பார்க்கிறார்கள்.
உங்கள் குழந்தைக்கு பேசுவதில் தாமதம் ஏற்பட்டால் எவ்வாறு கண்டுபிடிப்பது
பேச்சு திறன், மொழி வளர்ச்சி, எழுதும் திறன் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டால், அறிகுறிகள் மூலம் பெற்றோர்கள் அடையாலம் காண முடியும். அதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.
- பெற்றோர்களும், பராமரிப்பாளர்களும் ஒரு குழந்தையின் பேச்சில் 2 ஆண்டுகளில் 50% வளர்ச்சியும் மற்றும் 3 ஆண்டுகளில் 75% வளர்ச்சியும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- 4 வயதிற்குள், குழந்தைக்கு பரிட்சயம் இல்லாதவர்கள் பேசுவதை கூட பற்றி தெரியாதவர்களால் கூட, குழந்தையால் புரிந்து கொள்ள முடியும்
நான்கு வயதுக்குட்பட்டவர்களுக்கு பேச்சு திறனில் தாமதம் எற்பட்டால் அதாவது Speech Therapist உதவியை பெறுவதற்கான அறிகுறிகள்
- பேச்சுத் திறன் குறைதல் அல்லது தெளிவற்ற பேச்சு
- சைகை அல்லது பின்பற்றுதலில் சிரமம்
- பேச்சைப் புரிந்து கொள்ளவோ அல்லது நன்றாக கேட்கவோ ஆர்வம் காட்டாதது
- மற்றவர்கள் சொல்வதைத் திரும்பத் திரும்ப சொல்வதை தாண்டி வார்த்தைகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது ஆகியவை அடங்கும்.
காரணங்கள்
பேச்சு தாமதம் உள்ள பல குழந்தைகளுக்கு வாய்வழி-மோட்டார் பிரச்சனைகள்(oral-motor) உள்ளன. பேச்சுக்கு ஆதாரமான மூளையின் பகுதிகளில் சிக்கல் இருக்கும்போது இவை நிகழ்கின்றன. இது பேச்சு ஒலிகளை உருவாக்க உதடுகள், நாக்கு மற்றும் தாடையை ஒருங்கிணைப்பதை கடினமாக்குகிறது. இந்த குழந்தைகளுக்கு உணவளிக்கும் பிரச்சினைகள் போன்ற பிற பிரச்சனைகளும் இருக்கலாம்.
உடல் செயல்பாடு இல்லாதது, தனிமையில் இருப்பது, அதிக திரை நேரம் ஆகியவை வளர்ச்சி சிக்கல்களுக்கு காரணமாகின்றது. சரியான ஆலோசனை மற்றும் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை முன்கூட்டியே அடையாளம் கண்டால் தாமதமான வளர்ச்சியுடன் வளரும் குழந்தையிடம் முன்னேற்றம் கொண்டு வர முடியும். இப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்க வேண்டும், இயல்பான வளர்ச்சிக்கான குழு நடவடிக்கைகள் மிக அவசியம்.
பேச்சு தாமதமாவது காது கேளாமையும் காரணமாக இருக்கலாம் என்பதால், உங்களின் குழந்தை சாதாரணமாக பதிலளிக்கவில்லை என்றால், செவிப்புலன் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால், பேச்சு மொழி சிகிச்சை நிபுணரை அணுகவும்.
எவ்வளவு சீக்கிரம் இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டு குழந்தைக்கு உதவுகிறோமோ அந்த அளவுக்கு அவர்களின் பேச்சு அல்லது மொழிப் பிரச்சனையால் ஏற்படக்கூடிய சுயமரியாதை குறைவு, நடத்தைப் பிரச்சனைகள் போன்ற மற்ற பாதிப்பு தரும் விஷயங்களையும் குறைக்க முடியும்.
வீட்டில் நீங்கள் கொடுக்க வேண்டிய பயிற்சிகள்:
உங்கள் குழந்தையின் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சியை அதிகரிக்க ஒரு தொடக்கமாக நீங்கள் இதையெல்லாம் செய்ய முடியும்.
- நீங்கள் ஏதாவது ஒரு செயலை செய்யும் போதும், மற்ற இடங்களுக்கு செல்லும் போதும் பேசுங்கள்.
- வார்த்தைகளில் விரிவாக்குங்கள். உதாரணமாக, உங்கள் குழந்தை "கார்" என்று சொன்னால், "நீங்கள் சொல்வது சரிதான்! அது ஒரு பெரிய சிவப்பு கார்.
- ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையுடன் படிக்க நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் பெரிய படங்கள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் அல்லது ஒரு எளிய சொற்றொடர் அல்லது வாக்கியம் கொண்ட புத்தகங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள படங்களைப் பெயரிட்டு விவரிக்கவும்.
- நீங்கள் பெயரிடும் படங்களை உங்கள் பிள்ளைக்கு சுட்டிக்காட்டுங்கள்.
- குடும்பப் படங்களை காட்டி, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் விளக்கி பின் உங்கள் குழந்தையை விளக்க சொல்லுங்கள்.
- இடஞ்சார்ந்த பெயர்கள் அல்லது திசைகள் (முதல், நடுத்தர மற்றும் கடைசி; வலது மற்றும் இடது) மற்றும் எதிர் (மேலே மற்றும் கீழ்; பெரிய மற்றும் சிறிய) பற்றி பேசுங்கள்.
- எப்படி செய்வது என்று உங்கள் குழந்தைக்கு விளக்கும் போது, அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- உங்கள் குழந்தையின் சொற்களஞ்சியத்தை அதிகரிக்கும் சூழலை உருவாக்குங்கள். புதிய சொற்களுக்கான வாய்ப்புகளை வழங்கவும். உதாரணத்திற்கு ஒரு படத்தைக் காட்டி அந்தப் பொருளை வீட்டில் எங்கு இருக்கும் என்று கண்டுபிடிக்க சொல்லுங்கள். அதை விளக்கவும் சொல்லுங்கள். இதற்கு நீங்கள் முதலில் அவர்களுக்கு உதவ நேரிடும்.
- ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கும்போது "யார், என்ன, எப்போது, எங்கே, அல்லது ஏன்" என்ற கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் அவரது பதிலைக் கண்காணிக்கவும்.
உங்கள் குழந்தையின் பேச்சு தாமதத்திற்கு கொரோனா தொற்றுநோய் பங்களித்திருக்கலாம். ஆனால் பேச்சு அல்லது மொழி தாமதத்தை கண்டறிவது மற்றும் மொழி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு வீட்டில் உங்கள் குழந்தையுடன் இணைந்து பணியாற்றுவதற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின் மொழி மற்றும் பேச்சு திறனில் நல்ல முன்னேற்றம் கொண்டு வர முடியும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...