உங்கள் குழந்தைக்கு ஃபுட் பாய்சனா? அறிகுறிகள் மற்றும் தீர்வு

அசுத்தமான உணவு அல்லது நீர் உடலில் நுழைந்து நச்சுகளை வெளியிடும் போது ஃபுட் பாய்சன் அதாவது உணவு நஞ்சாகி குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உணவு நச்சுத்தன்மை பொதுவானது, ஏனெனில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃபுட் பாய்சன் காரணங்கள் - பல்வேறு வகையான பாக்டீரியாக்களால் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வது மூலமா இது ஏற்படலா. இருப்பினும், இந்த பாக்டீரியாக்கள் உங்கள் குழந்தையின் வயிற்றில் நுழைய பல வழிகள் இருக்கலாம், அதாவது,
- பழங்கள் அல்லது காய்கறிகளை கழுவாமல் இருப்பது
- அழுக்கான அல்லது அசுத்தமான பாட்டில்களிலிருந்து தண்ணீர் குடிப்பது
- சாப்பிடுவதற்கு முன்பு உணவை சரியாக சூடாக்காமல் இருப்பது
- உணவை சரியாக பாதுகாக்காமல், அல்லது சரியான வெப்பநிலையில் வைக்காமல் இருப்பது
- குழந்தைக்கு உணவளிக்கும் முன் கைகளை கழுவாமல் இருப்பது
- விலங்குகளின் மலம் கொண்ட அழுக்குகளில் விளையாடுவது
- இறைச்சி மற்றும் கோழி கறி போன்றவை நன்றாக கழுவப்படாமல் இருந்தால், பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்
- சமைக்கும் போது அசுத்தமான பாத்திரங்கள் அல்லது கழுவப்படாத கைகளைப் பயன்படுத்துதல்
ஃபுட் பாய்சன் அறிகுறிகள் -
உங்கள் பிள்ளைக்கு ஃபுட் பாய்சன் இருப்பதை எவ்வாறு கண்டறிவது? அசுத்தமான உணவுப் பொருட்கள் அல்லது தண்ணீரை உட்கொண்ட இரண்டு முதல் 48 மணி நேரத்திற்குள் ஃபுட் பாய்சனால் ஏற்படும் விளைவுகள் பொதுவாக காணப்படுகின்றன. பின்வரும் அறிகுறிகள், உங்கள் குழந்தைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உங்களை தயார்ப்படுத்தும்.
- காய்ச்சல்
- வாந்தி
- குமட்டல்
- தலைவலி
- வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி மற்றும் பிடிப்புகள்
- பொதுவான உடல் பலவீனம்
எவ்வாறு குணப்படுத்துவது -
நஞ்சான உணவு உடல் அமைப்பிலிருந்து வெளியேற தக்க நேரத்தை எடுக்கும், எனவே உங்கள் குழந்தைக்கு ஃபுட் பாய்சன் இருந்தால் என்ன செய்வது?
உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்வது முக்கியம். மருத்துவர்கள் பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கிறார்கள், அது நிலைமையை மோசமடையாமல் பார்த்துக் கொள்ளும். இருப்பினும், உங்கள் குழந்தையை ஆற்றுவதற்கு உதவும் சில ஃபுட் பாய்சன் வீட்டு வைத்தியங்களும் உள்ளன. குழந்தை நலமாக இருக்கும் வரை குழந்தை ஓய்வெடுக்கட்டும். பால் அல்லது திட உணவுகளை தவிர்க்கவும். சர்க்கரை மற்றும் உப்பு கரைசல் அல்லது எலக்ட்ரோலைட் கரைசல் வாந்தியை கட்டுப்படுத்தும்
குழந்தைகளுக்கான இந்த பிரச்சனை வீட்டு வைத்தியம் மூலம் அணுகலாம். இருப்பினும் உங்கள் குழந்தை சாதாரணமான உணவை உட்கொள்ள ஆரம்பிக்க சில நாட்கள் ஆகும். ஃபுட் பாய்சனுக்கான சிகிச்சையானது ஒரு நீண்ட சோதனையாகும், அதில் உங்கள் பிள்ளை ஆரோக்கியமான, சுத்தமான மற்றும் வயிற்றுக்கு எளிதான உணவை மட்டுமே சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். சுத்தமான திரவங்களை தவறாமல் உட்கொள்வதும் விரைவான தீர்வை உறுதி செய்யும்.
குறுநடை போடும் குழந்தைகளின் ஃபுட் பாய்சன் Vs காய்ச்சல்(ஃபுளு)
ஃபுட் பாய்சன் மற்றும் ஃபுளு காய்ச்சலின் அறிகுறிகள் மிகவும் ஒத்துப்போகும் இதனால் வித்தியாசத்தை சாதாரணமாக புரிந்துகொள்வது கடினம். இருப்பினும், ஃபுட் பாய்சனுக்கு மாறாக வயிற்று காய்ச்சல் வைரஸால் ஏற்படுகிறது, இது பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகள், சால்மோனெல்லா, ஈ-கோலி, நோரோவைரஸ் போன்றவற்றால் ஏற்படும்.
ஃபுட் பாய்சன் என்பது அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வது, அதேசமயம், வைரஸ் உணவு வழியாக நுழையும் போது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மற்றொரு நபருடன் நேரடி தொடர்பு மூலமாகவும் ஃபுளு காய்ச்சல் ஏற்படுகிறது. பெரும்பாலும் கைக்குழந்தைகள் பல்வேறு வகையான நோய்களால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும், இவை அனைத்தும் குழந்தை வளர்ந்து வரும் ஒரு பகுதியாகும், அப்படி இருந்தால் கூட, நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...