அம்மாக்களுக்கான சிறப்புத் தொகுப்பு: சரும பளபளப்பைப் பெறுங்கள்: எங்கள் தோல் நிபுணர் 5 ரகசியங்களை உங்களுக்காக சொல்கிறார்

வயதாவது பெண்ணின் மிகப்பெரிய அச்சங்களில் ஒன்றாகும். வயதாகும் முதல் அறிகுறிகள் - அந்த சுருக்கம், புன்னகை கோடுகள், தோல் தளர்ந்து இளமை பளபளப்பைப் இழப்பதன் காரணமாக எந்தவொரு பெண்ணும் கால நேரத்தைத் திருப்ப விரும்புகிறார்கள். ஒரு தேவதை தனது மந்திரக்கோலைப் பயன்படுத்தி உங்களை எப்போதும் இளமையாகவும் அழகாகவும் ஆக்கும் என்று நீங்கள் எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா? சரி, உங்கள் விருப்பங்கள் எல்லாம் வழங்கப்பட உள்ளது! முன்னணி தோல் மருத்துவரான டாக்டர் தீபாலி பரத்வாஜ், இளமையாக நீங்கள் இருக்க தனது 5 ரகசிய பொருட்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
1. சன்ஸ்கிரீன்: ஒரு நல்ல சன்ஸ்கிரீன் எப்போதும் நீங்கள் வாங்க வேண்டிய முதல் முக்கியமான விஷயம், ஏனெனில் சூரிய வெளிச்சத்திற்கு உங்களை வெளிப்படுத்துவது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் மூலம் தோல் வயதாவதற்கு முக்கிய வெளிப்புற காரணியாகும். புற ஊதா கதிர்களுக்கு நீண்ட காலமாக நம்மை வெளிப்படுத்துவதால் சருமத்திற்கு ஏற்படும் சேதம் ஃபோட்டோ ஏஜிங் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நல்ல சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி போதுமானதாகக் கூறப்பட்டாலும், ‘எப்படி, எப்போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது’ என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். பெரும்பாலான மக்கள் தங்கள் டோனர் அல்லது மாய்ஸ்சரைசர் மீது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறார்கள், இது அதன் நோக்கத்தை நிறைவேற்றாது. உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க விரும்பினால், சன்ஸ்கிரீனை உங்கள் முகத்தை கழுவிய பின் முதலில் அதைப் பயன்படுத்த வேண்டும்- மாய்ஸ்சரைசருக்கு முன்பே. மாய்ஸ்சரைசருக்குப் பிறகு நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினால், அது மாய்ஸ்சரைசரை பாதிப்பில் இருந்து தடுக்கிறது, தோலை அல்ல, மற்றும் உங்கள் விலையுயர்ந்த சன்ஸ்கிரீனின் பெரும்பாலான நன்மைகள் இழக்கப்படுகின்றன.
2. சூப்பர்ஃபுட்ஸ்: நீங்கள் சாப்பிடுவதை உங்கள் தோல் நேரடியாக பிரதிபலிக்கிறது, அதனால்தான் உங்கள் தாய்மார்கள் மற்றும் பாட்டிகள் குறைந்த அழகுசாதன பொருட்கள்/சிகிச்சைகளை எடுத்துக் கொண்டும் மற்றும் மிகவும் கடின உழைப்பு இருந்தபோதிலும் மிக அழகான தோலைக் கொண்டிருந்தனர். ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி ஊதா, மஞ்சள், பச்சை நிற உணவுகளை பச்சையாக அல்லது வதக்கி சாப்பிடவும். ஒரு நாளைக்கு ஓரிரு அக்ரூட் பருப்புகளை எடுத்துக்கொள்வது உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவும், ஏனெனில் அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலாஜன் உற்பத்தியில் உதவும் தாமிரத்தால் நிறைந்துள்ளன. சுருக்கமில்லாத சருமமே உங்கள் நோக்கம் என்றால், உங்கள் உணவில் ஏராளமான பூசணிக்காய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பூசணிக்காயில் கரோட்டினாய்டுகள் (சுருக்கம் மற்றும் பருவை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்) எனப்படும் உயிர் நிறமி உள்ளது. மாதுளை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டிருக்கும் மற்றொரு சூப்பர்ஃபுட் ஆகும்.
3. உங்கள் சமையலறையை அலசுங்கள்: உங்கள் அழகு சிகிச்சை உங்கள் சமையலறையில் உள்ளது, மேலும் உங்கள் சமையலறையில் உள்ள பொருட்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் அதிசயங்களைச் செய்யலாம். அடுத்த முறை நீங்கள் எலுமிச்சை அல்லது வாழைப்பழத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் தோலை தூக்கி எறிய வேண்டாம். ஒரு சிட்ரஸ் பழத்தில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் அதன் தோலில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இயற்கை ப்ளீச் செய்ய உங்கள் முகத்தில் எலுமிச்சை தோலால் தேய்க்கவும். வாழைப்பழத் தோலை உங்கள் தோலில் தேய்த்தால் ஹைட்ரேட் செய்யலாம், வடுக்கள் குணமாகும், புதிய முகப்பருவைத் தடுக்கலாம்! ஆரஞ்சு தோலை 2-3 நாட்கள் வெயிலில் காயவைத்து 100% இயற்கையான ஸ்க்ரப் செய்ய அதை அரைக்கவும். அரை எலுமிச்சை அல்லது தக்காளியின் சாற்றை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். உங்கள் சருமம் வறண்டிருந்தால் அரை தேக்கரண்டி தேனைச் சேர்க்கவும், சருமத்தில் எண்ணெய் இருந்தால் முல்தானி மட்டி மற்றும் சிறிது சந்தனப் பொடியை இந்த கலவையில் சேர்த்து மென்மையான மற்றும் ஒளிரும் சருமத்தை பெருங்கள். உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளும்போது, கண்களை மறந்துவிடாதீர்கள். பாதாம் எண்ணெய் ஒரு துளி உங்கள் கண்களை சுற்றி பூசி இரவு முழுவதும் வைத்திருந்தால் உங்கள் கண்களில் அந்த பிரகாசத்தை மீண்டும் கொண்டு வர முடியும்.
4. ஈரப்பதம் சரியானது: தேங்காய் எண்ணெய் அல்லது, கடுகு எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர் போன்ற ஒரு க்ரீஸ் எண்ணெயைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு சில துளிகள் குழந்தை எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ குளித்த பின் உங்கள் சருமத்தை மென்மையாகவும், எப்போதும் மிருதுவாகவும் வைத்திருக்கும். நேரம் இல்லாமல் இருந்தால், வாளியில் 4-5 சொட்டு எண்ணெயைச் சேர்த்து, அதை உடலில் பயன்படுத்தி குளிக்கவும் அல்லது கடைசி குவளை தண்ணீரில் சில துளிகளை சேர்த்து பயன்படுத்தவும், நீங்கள் விரும்பினால் குறிப்பாக இடுப்பு மற்றும் தொடைகளில், ஸ்க்ரப்பரை பயன்படுத்துங்கள். (வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் சருமத்திற்கும் மற்றும் உலர்ந்த சருமத்திற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை ஸ்க்ரப்பரரை பயன்படுத்தலாம் )
5. ஹெட் ஓவர் ஹீல்ஸ்: நம் முகத்தில் 43 தசைகள் உள்ளன. நம் முகத்தில் நாம் பயன்படுத்தும் கிரீம்களை கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உள்ளே இருந்து முக தசைகளை உடற்பயிற்சி செய்வதும் சமமாக முக்கியம். முகத்தை நோக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சர்வங்காசனா (தோள்பட்டை நிலை) ஒரு சிறந்த வழியாகும். ஒரு வழக்கமான ஹெட்ஸ்டாண்ட்(தலைகீழ் நிற்பது) அல்லது ஹேண்ட்ஸ்டாண்ட்(கையால் தலைகீழ் நிற்பது) முகத்தை நோக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது உங்களுக்கு உடனடி பிரகாசத்தை தருகிறது. இளமை சருமத்திற்கு 3-5 நிமிடங்கள் இந்த ஆசனத்தை நீங்கள் தினமும் செய்யலாம். இருப்பினும், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மருத்துவரை அணுகவும், இதை முயற்சிக்கும் முன் உங்களுக்கு அருகிலுள்ள யோகா நிபுணரிடமிருந்து சரியாக கற்றுக்கொள்ளுங்கள்! இதைத் தவிர நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் உங்கள் தோலில் அந்த இளமை பிரகாசத்திற்காக சிரித்துக் கொண்டே இருங்கள் ...
உங்களுக்கு இந்த வலைப்பதிவு பிடித்திருக்கிறதா? உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்பதால், கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் கருத்துகளையும் பார்வைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...