கொரோனா LOCKDOWN – வீட்டில் என் மகள் என்ன செய்கிறாள்?

இந்த இக்கட்டான காலகட்டத்தில் வேலைக்கு போகும் அம்மாக்கள் வீட்டில் இருந்து வேளையும் பார்க்க வேண்டும் அதே நேரத்தில் குழந்தையையும் ஈடுபாட்டோடு வைக்க வேண்டும். இது மிகப்பெரிய சவால். குறிப்பாக, கேட்ஜெட்ஸ் இல்லாமல் என் குழந்தையை ஈடுபடுத்த எனக்கு உதவியாக இருந்ப்பது பொறுமையும், கருணையும் தான். நமக்கு இந்த சூழலை புரிந்து கொள்ள முடியும்., ஆனால் குழந்தைகளின் பார்வையில் இது விடுமுறையாகவே அவர்களுக்கு தோன்றும். அதனால் மகிழ்ச்சியாகவே இருக்கவே ஆசைப்படுவார்கள். அந்த மகிழ்ச்சியை என் பயத்தை கொண்டு தடுக்க விரும்பவில்லை.
என்னுடைய அலுவலக பணி எவ்வளவு முக்கியமோ அதே போல் என் மகள் அஜிதாவை பாதுகாப்பாகவும், மகிழ்சியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியதும் என் கடமையாக நினைக்கிறேன். என்னால் முடிந்த சிறந்த தருணங்களை ஒவ்வொரு நாளும் அவளுக்கு உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். இந்த lockdown காலகட்டத்தில் நான் எப்படி என் மகளை மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறேன். என் அலுவலக பணியையும், குழந்தையையும் எப்படி balance செய்கிறேன் என்பதை இந்த வீடியோ பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இதே போல் அம்மாக்கள் உங்கள் பிள்ளைகளோடு இருக்கும் தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கொரோனா lockdown கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும். என் குழந்தையோடும், குடும்பத்தோடும் நேரம் செலவு செய்ய எனக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நான் திருப்தியாக கழிக்கவே விரும்புகிறேன்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...