கரோனா வைரஸ் (COVID-19) - குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

All age groups

Radha Shri

5.4M பார்வை

5 years ago

கரோனா வைரஸ் (COVID-19) - குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

கரோனா வைரஸ் (2019 nCov அல்லது COVID-19)  என்பது ஒரு புதிய மர்ம வைரஸ். சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கியது. இது கொடிய SARS வைரஸை போல  (கரோனா வைரஸ் குடும்பத்திலிருந்து) பல செயல்பாடுகள் ஒத்துப்போகும் தொற்று என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். SARS வைரஸால் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கானவர்கள் அழிந்த 2003 ஆம் ஆண்டின் நினைவுகளை மீண்டும் கொண்டு வரத் தொடங்கியுள்ளது இந்த COVID-19 வைரஸ் . கடந்த சில நாட்களாக, இந்த சம்பவத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இது பயங்கரமான SARS வைரஸைப் போன்றது என்று கண்டறிந்துள்ளனர்.. இந்த புதிய வைரஸ் இந்த குடும்பத்திலிருந்து SARS க்குப் பிறகு மனிதர்களைப் பாதிக்கும் இரண்டாவது வைரஸாகும்.

Advertisement - Continue Reading Below

கரோனா வைரஸ் பற்றிய செய்திகள்:

  1. பிரபல டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் மற்றும் இங்கிலாந்து சுகாதார மந்திரி நாடின் டோரிஸ் ஆகியோருக்கு கரோனா வைரஸால் இருப்பதாக கண்டறியப்பட்டனர்.
  2. இந்தியாவில் புதிய கரோனா வைரஸ் அதிகரிப்பு.
  3. ஒரு விளையாட்டு வீரருக்கு தொற்று இருப்பது உறுதியான பிறகு NBA  மற்றும் IPL போன்ற மிகப்பெரிய டோர்னமெண்ட் தள்ளி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
  4. இந்தியாவில் கரோனா வைரஸ்: மூன்று பேர் மரணம் அடைந்த நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

நாவல் கரோனா வைரஸ் (COVID-19) என்றால் என்ன?

கடுமையான சுவாச நோய்க்குறி இருக்கும். கரோனா வைரஸ் (WHO: SARS-COV) என்பது இந்த  வைரஸுக்கு வழங்கப்பட்ட பெயர், இது சீனாவை தொடர்ந்து  உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பாதித்தது மற்றும் 2003 ஆம் ஆண்டில் 700 க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். புதுமையான செயல்பாடுகளை கொண்ட வைரஸால் அதிகமாக   நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால்  சுகாதார வல்லுநர்களுக்கு  தொற்று பரவாமல் தடுக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது..

புதிய நோய்த்தொற்றின் அறிகுறிகள் SARS வைரஸைப் போன்ற ஒரு வடிவத்தையும் காட்டுகின்றன. இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவக்கூடிய திறன் உள்ளதா என்பதிலும் எதிர்மறை கருத்துக்கள் விஞ்ஞானிகளிடம் நிலவுகிறது. nCoV / Covid-19 வௌவால்கள்  அல்லது பிற காட்டு விலங்குகளிலிருந்து தோன்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இறைச்சியைத் தவிர்ப்பதும் உதவியாக இருக்கும்.

SARS-Coronavirus 2003 என்றால் என்ன?

Advertisement - Continue Reading Below

SARS நோய்த்தொற்று காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் நடுக்கம் போன்றவை இருக்கும். இருப்பினும், இந்த அறிகுறிகளின் இருப்பு SARS நோய்த்தொற்றின் அறிகுறியாக இல்லை. கரோனா வைரஸின் குடும்பம் பொதுவாக விலங்குகளை பாதிக்கிறது மற்றும் அவற்றில் சில மனிதர்களைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன; SARS மற்றும் MERS (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி). இந்த வைரஸ் குடும்பத்தின் தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி விலங்குகளுடன் பாதுகாப்பான தொடர்பைப்  பேணுவதாகும். ஏதேனும் விலங்குகளைத் தொட்டால் உங்கள் முகத்தையும் வாயையும் தொடும் முன் கைகளை நன்கு கழுவுங்கள் .

கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பாதுகாப்பாக இருக்க நீங்கள் முதலில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் நோய் மற்றும் வதந்தி இரண்டிற்கும் பலியாகாமல் இருக்க வேண்டும். இந்த வகையான நோய்த்தொற்றுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து  விலகி இருப்பதாகும் . எடுத்துக்காட்டாக, பொது இடங்களில், போக்குவரத்தில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு சுவாச முகமூடிகளைப் பயன்படுத்துவது நல்லது.

பிற முன்னெச்சரிக்கைகள் பின்வருமாறு:

  • மீன்கள் கடல் உணவு மற்றும் அசைவத்தைத் தவிர்க்கவும்
  • வீட்டை சுத்தமாக வைப்பதை உறுதிசெய்யவும்.  நீங்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் எதையும் கழுவி  சுத்தம் செய்து பயன்படுத்துவது சிறந்தது.
  • அடிக்கடி  சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை தவறாமல் கழுவுதல் வேண்டும்
  • காய்ச்சல், இருமல், தும்மல், சளி  போன்ற அறிகுறிகளைக் காட்டும் நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்
  • குழந்தைகளுக்கு சுத்தமான துண்டுகள் மற்றும் துடைப்பான்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • குழந்தைகள் வெளியில் அதிகமாக விளையாட அனுப்பாமல் வீட்டிலேயே அவர்களை ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துங்கள்.
  • கூட்டமாக சேர்ந்து இருக்கும் தருணங்களை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.
  • விரைவான பயன்பாட்டிற்கு சானிடைசரை  உபயோகப்படுத்துங்கள்.

நாவல் கரோனா வைரஸ் சிகிச்சை முன்னெச்சரிக்கைகள்

 கரோனா வைரஸுக்கு (கோவிட் 2019) என்ன சிகிச்சை? NCoV என்பது முற்றிலும் புதிய வைரஸ் மற்றும் இன்னும் ஆய்வின் கீழ் உள்ளது. NCoV க்கு  தடுப்பூசி கண்டுபிடிக்க வில்லை  என்றாலும், தனிப்பட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. முடிந்தவரை இதன் அறிகுறிகள் தெரிந்தால் உடனே சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்துவதன் மூலம் நீங்கள் நலம் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கலாம்.

பீதி அடைய இது நேரமல்ல, உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை கரோனா வைரஸ் (கோவிட் -19) மற்றும் பன்றிக் காய்ச்சல் (எச் 1 என் 1) நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க சில எளிய வழிமுறைகளை விழிப்புணர்வுடன் பின்பற்றுவதன் மூலம் அனைவரும் நலமாக இருக்கலாம்.

இந்த உள்ளடக்கம் Parentune நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது..

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...