ஏன் முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம்? –மருத்துவர் கூறும் ஆலோசனைகள்

11 to 16 years

Radha Shri

4.6M பார்வை

4 years ago

ஏன் முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியம்? –மருத்துவர் கூறும் ஆலோசனைகள்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு போடப்பட்டது. இருந்தாலும், இந்த வைரஸுக்கு  பல லட்சம் பேர் பாதிப்படைந்தனர். பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். குறிப்பாக முதியவர்கள் அதாவது ரத்தகொதிப்பு, நீரழிவு, இதய நோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் இதற்கு அதிமாக உநிரிழந்தனர். இப்போது மறுபடியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கின்றனர்.

Advertisement - Continue Reading Below

எவ்வளவோ போராட்டத்திற்கு பிறகு கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இப்போது போடப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு போடப்பட்டது. இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேலுள்ள முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த தடுப்பூசியை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் இது மேலும் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஒருப்புறம் கொரோனா வைரஸ் பற்றிய பயம். மற்றொரு புறம் இந்த தடுப்பூசியை பற்றி வரும் தவறான தகவல்களால் முதியவர்கள் பலர் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள பயப்படுகிறார்கள்.

நம் வீட்டு பெரியவர்களை பாதுகாப்பது என்பது நமது கடமை. எவ்வளோ பேர் தங்களுடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என மிக நெருக்கமானவர்களை இழந்த துயரத்தில் இருக்கின்றனர். இப்போது கிடைத்திருக்கும் இந்த தடுப்பூசி மூலம் பாதுகாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா தடுப்பூசியை நம் வீட்டு பெரியவர்களுக்கு போடுவதற்கான தகவல்கள், விளைவுகள் மற்றும் ஆலோசனைகளை பற்றி தெளிவாக விளக்குகிறார் பொது நல மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். விக்னேஷ்.

முதியவர்களில் எந்த மாதிரி உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்?

எல்லாவிதமான உடல்நலப் பிரச்சனைகள் இருப்பவர்களும் போட்டுக் கொள்ளலாம். குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்று நோய், சிறுநீரக சம்பந்தபட்ட பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாக நேரிடும் என்பதால் தடுப்பூச்சி போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேலுள்ளவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வது பாதுகாப்பானது.

என்னென்ன கொரோனா தடுப்பூசிப் போடப்படுகின்றது?

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றது. அரசு மருத்துவமனைகளில் இரண்டு தடுப்பூசிகளும் போடுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு மட்டுமே போடப்படுகிறது.

தடுப்பூசி போடுவதற்கு முன் ஏதாவது பரிசோதனை இருக்கின்றதா?

  • உடல் வெப்பநிலை பரிசோதனை
  • இரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை. (இதன் அளவு அதிகமாக இருந்தால் கட்டுப்படுத்தப்பட்டவுடன் போட சொல்கிறார்கள்)
  • தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை
  • தடுப்பூசி போடப்படுபவர்கள் அடையாள அட்டை பரிசோதனை

எத்தனை தடவை போட வேண்டும்?

இந்த தடுப்பூசி இரண்டுமுறை போடபப்டுகின்றது. முதல் டோஸ் போட்ட ஒரு மாதத்திற்கு பிறகு அடுத்த டோஸ் போடுப்படும்ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்தவர்களும் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

பக்க விளைவுகள் இருக்குமா?

இதுவரை எந்த பக்க விளைவுகளும் பதிவாகவில்லை. அதற்கான ஆராய்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தடுப்பூசி போட போட இதன் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது தான்.

Advertisement - Continue Reading Below

தடுப்பூசி போட்ட பின் எந்த மாதிரி அறிகுறிகள் தெரியும்?

தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் வெகு சிலருக்கு மட்டுமே உடல் வலி மற்றும் லேசான காய்ச்சல் உண்டாகிறது. அதுவும் ஓரு நாளில் சரியாகிவிடும். இந்த அறிகுறிகள் எல்லாருக்குமே வருவதில்லை.

இந்தியாவில் ஆபத்தான அறிகுறிகள் என்று இதுவரை வந்ததாக பதிவாகவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அசொளகரியமாக உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பார்க்கலாம். எல்லா மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் 30 நிமிடம் கண்காணிப்பு அறையில் இருக்க வைத்து பரிசோதித்த பின்னரே அனுப்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போட்டவர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம் என்ன?

ரத்தகொதிப்பு, நீரழிவு உள்ளவர்கள் தடுப்பூசி போட்ட பிறகு 42 நாட்களுக்கு அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு  பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம் என்பது எதுவும் இல்லை.

கொரோனா தடுப்பூசி  பாதுகாப்பானதா?

இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. இதவரை எந்த பக்க விளைவுகளும் பதிவாகவில்லை. பயப்பட வேண்டாம். தைரியமாக போட்டுக்கொள்ளலாம். இது பாதுகாப்பனது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அப்படியே ஏதாவது சந்தேகத்துக்குரிய அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகலாம்.

தடுப்பூசி போட்டால் மறுபடியும் கொரோனா வராதா?

கொரோனா வராது என்று உத்தரவாதம் இல்லை. ஆனால் தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லலாம். இந்த நோய் வந்தே ஒரு வருடம் தான் ஆகின்றது. இன்னும் இந்த வைரஸ் பற்றிய விவரங்களே நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. இது ஒரு நீண்ட கால மதிப்பீட்டின் அடிப்படையில் தான் கூற முடியும். இதுவரையும் எந்த பிரச்சனையும் இல்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்வது மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

SARS- Cov -2 வைரஸுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வளர்ப்பதன் விளைவாக, COVID-19 தடுப்பூசிகள் நோயிலிருந்து பாதுகாப்பை உருவாக்குகின்றன. தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்வது என்பது நோயையும் அதன் விளைவுகளையும் உருவாக்கும் ஆபத்தை குறைக்க உதவும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி வைரஸுக்கு எதிராக போராட உதவுகிறது. தடுப்பூசி போடுவது உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் தொற்றுநோயிலிருந்து மற்றும் நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் வேறொருவருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

சுகாதார வல்லுநர்கள், களப்பணியாளர்கள், வயதானவர்கள் போன்றோர் COVID-19 இலிருந்து நேரடி ஆபத்தில் உள்ளவர்களை பாதுகாக்க இது மிகவும் முக்கியமானது.

தடுப்பூசியின் விலை

கொரோனா தடுப்பூசிக்கு அரசு நிர்யிணத்த விலை 250 ரூபாய் மட்டுமே.

எங்கெல்லாம் தடுப்பூசி போடப்படுகின்றது

தமிழ்நாடு முழுவதும் இப்போது கொரோனா தடுப்பூசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சுகாதார மையங்களில் போடப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் போடப்படுகின்றது. சென்னையில் 10-ஆக இருந்த தடுப்பூசி முகாம்கள் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 47 முகாம்கள் செயல்பாட்டில் உள் ளன. இந்த எண்ணிக்கை மேலும் படிப்படியாக உயர்த்தப்படும்.தடுப்பூசி போடுவதற்காக சென்னையில் இதுவரை 1.46 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்த தடுப்பூசி சிறிது ஆறுதலை தருகின்றது. அதனால் இந்த நோய்க்கு எளிதில் பாதிப்படையும் முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் முதன்மையாக போட்டுக் கொள்வதன் மூலம் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஏன்னென்றால் குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பெரியவர்கள் இதை தைரியமாக போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாக்கப்படும். நம்முடைய நெருங்கிய சொந்தபந்தங்களை பாதுகாப்பது நமது கடமை தானே! 

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...