என் குழந்தைக்கு ஆர்கானிக் உணவு கொடுப்பதற்கான 5 காரணங்கள்

நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாம் உண்ணும் உணவு வரை இன்றைக்கு எல்லாவற்றிலும் நச்சுக்கள் இருப்பதை நம்மால் புறக்கணிக்க முடியாது. இருப்பினும் அவைகளுடான தொடர்பை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். முக்கியமாக நம்முடைய குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்கும் எல்லாவற்றிலும் நச்சுக்கள் இருப்பதை குறைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
குழந்தைகள் இரண்டு முதல் ஐந்து வயதிற்குள் இருக்கும் போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி நிலையில் இருக்கும். அதனால் தொற்றுநோய்கள் மற்றும் மாசுக்கள் இவைகளுடன் போராடும் சக்தி குழந்தைக்கு குறைவாக இருக்கும். எனது மகன் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதை கண்டு வருத்தம் கொள்வதுண்டு. அவனுக்கு கொடுக்கும் உணவில் இன்னும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அதனால் நான் அவனுக்கு தேர்ந்தெடுத்து வாங்கும் ஒவ்வொரு உணவுப் பொருட்களையும் ஆராய்ந்து பார்த்து வாங்க தொடங்கினேன். அவருடைய அன்றாட உணவின் தரம் குறையாமலும் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது.
ஒரு சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணராக இருந்ததால் எனது குறுநடை போடும் குழந்தைக்கு கொடுக்கும் உணவு குறித்து நான் கவனமாக இருக்கிறேன். பதப்படுத்தப்பட்ட, செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் செயர்க்கை நிறமூட்டிகளை பற்றி குறிப்பிடுகிறேன்.. பொதுவாக பாக்கெட் உணவுப் பொருட்கள் தயாரிப்பதும் மற்றும் அந்த உணவில் நச்சுக்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகங்கள் பதப்படுத்திகள், பிற ரசாயனங்கள் போன்றவற்றின் தொடர்பு அதிகமாக இருப்பதையும் நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய குழந்தைக்கு எப்போதும் நான் ஆர்கானிக் உணவையே அதிகமாக தேர்ந்தெடுக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தைக்காக ஆர்கானிக் உணவை நான் தேடிக் கொண்டிருந்தேன் இதை பற்றி என்னுடைய மகனின் மருத்துவரிடமும் நான் பேசினேன். இயற்கையான உணவுப் பொருட்கள் குறித்த எனது நம்பிக்கைக்கு மருத்துவரிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது.
குழந்தைகள் நல மருத்துவர் எனது குழந்தைக்கு முற்றிலும் ஆரோக்கியமான ஆர்கானிக் உணவை பரிந்துரைத்தார். அதன் பெயர் ஆர்கானிக் Ceregrow. இது ஒரு சான்றளிக்கப்பட்ட தயாரிப்பு என்றும் தீங்கு விளைவிக்கும் செயற்கை பொருட்கள் மற்றும் நச்சுக்கள் இல்லாமல் இருப்பதையும் அவர் என்னிடம் கூறினார். அதுமட்டுமில்லாமல் நானும் எ ஆராய்ச்சி செய்து மேலும் இதுபற்றி அறிந்து கொண்டேன்.
இது டாட்லர் என சொல்லப்படும் குறுநடை போடும் குழந்தைகளுக்கான முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் உணவு
Ceregrow ஆர்கானிக் (NPOP) தரங்களை பூர்த்தி செய்த பிறகு சான்றளிப்படுகின்றது. செயற்கை உள்ளீடுகள் அல்லது தூண்டுதல்கள் இல்லாமல் இயற்கையாகவே வளர்க்கப்படும் தயாரிப்புகளாக “சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக்”” உணவை வரையறுக்கும் NPOP ஐ இந்தியா செயல்படுத்தியுள்ளது. இந்த தயாரிப்புகள் ஜெய்விக் பாரத் மற்றும் இந்தியா ஆர்கானிக் சின்னங்களையும் பெற்றுள்ளது. சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் என்றால் 95% + ஆர்கானிக் பொருட்கள் என்பதே அர்த்தம். ‘ஆர்கானிக் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது’ என்று அறிவிக்கும் ஒவ்வொரு தயாரிப்பும் உண்மையில் ஆர்கானிக் இல்லை, குறிப்பாக குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களுக்கு என்பதை நினைவில் கொள்க. சந்தையில் குழந்தைகளுக்கென்று ஒரு சில சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுகள் மட்டுமே உள்ளன.
இது என் குழந்தைக்கு பாதுகாப்பானது
இதில் பலவகை தானியங்கள், பால் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் நன்மைகள் நிறைந்துள்ளது. செயற்கை நறுமணம் மற்றும் பதப்படுத்துதல் சேர்க்கப்படாதது. இது இரண்டு முதல் ஐந்து வயது உடைய குழந்தைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பான நுகர்வு.
இதில் இருக்கும் பொருட்கள் (அரிசி, கோதுமை மற்றும் தானியம்) அனைத்துமே இயற்கை வேளாண்மை முறையில் வளர்க்கப்படுகின்றது. இது மண்ணுக்கு ஊட்டச்சத்து அளித்து பூச்சியிலிருந்து தாவரங்களை பாதுகாக்கின்றது. இருப்பினும் இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் தாவரங்களை பாதுகாக்க பொங்கமியா/லகுண்டி எனப்படும் இயற்கை வழிமுறையில் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கின்றனர்
இயற்கை உரங்களை பயன்படுத்தி இலைகள், வேர்கள், பூச்சிகள் மற்றும் மண்புழுக்கள் போன்ற கரிம வளங்களுடன் மண்ணை உயிர்ப்போடு வைக்கின்றனர். இந்த செயல்முறை மண்ணில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை இயற்கையாக வளரச் செய்து பாதுகாக்கின்றது.
இது இயற்கையான பாலின் தன்மையை கொண்டுள்ளது
டாட்லர் என சொல்லப்படும் குறுநடை போடும் குழந்தைக்கு கொடுக்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளில் முக்கியமானது பால். இந்த பால் எவ்வாறு தயாரிக்கப்பட்டு நம்மை வந்தடைகிறது என்பதில் புரிதல் அவசியம். இதைப்பற்றி நான் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ததில் கரிமா பண்ணைகளில் மாடுகளுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் தீவனம் அழிக்கப்படுவதை அறிந்தேன் இந்த பசுக்களுக்கு எந்த வளர்ச்சி ஹார்மோன்களையும் பயன்படுத்தாமல் இயற்கையான பால் தருகின்றன. நான் என் குழந்தைக்கு ஆர்கானிக் பால் தருகிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது குழந்தைக்கு ஒரு சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் ஊட்டச்சத்தை உணவாக தேர்ந்தெடுத்து கொடுப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் தரத்தை நீர்த்துப்போக செய்வதால், ஒரு அம்மாவாக நான் செய்யக்கூடியது என்னவென்றால் வளர்ச்சி நிலையில் இருக்கும் என் குழந்தைக்கு தூய்மையான மற்றும் கலப்படமற்ற உணவை வழங்குகிறேன். இயற்கைக்கு மாறுவதன் மூலம் நான் இப்போது என் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் இயற்கை பாதுகாப்பு பற்றிய நேர்மறையான மதிப்புகளையும் என் குழந்தையிடம் வளர்த்துக் கொள்கிறேன்.
இந்த அம்சத்தைப் பற்றி எல்லா பெற்றோர்களும் சிந்திக்கவும் மற்றும் இயற்கையான தேர்வு செய்வதன் மூலம் தங்கள் பங்களிப்பை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன். கீழே உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...