தாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டுக் குறிப்புகள்

குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால். குழந்தைக்குப் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும். குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம் மட்டுமில்லாமல் தாய் – சேய் பந்தத்தையும் நெருக்கமடைய செய்யும்.
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்
- தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
- குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதால் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் வயிற்றுப் பாகம் கருவுறுவற்கு முன்பாக இருந்த பழைய வடிவத்தை சீக்கிரமே பெறுகிறது. கர்ப தொப்பை மற்றும் ஊளச்சதை குறைகிறது.
- அமெரிக்காவில் உள்ள வடக்கு கரேலினா பல்லைகழகமானது 56000 தாய்மார்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் தாய்ப்பால் கொடுக்காத 8900 பேருக்கு இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுருப்பதை கண்டறிந்துள்ளனர். அதே சமயம் தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.
- தாய்பால் கொடுப்பதன் மூலம் தாயின் உடலில் உள்ள கொழுப்பு குழந்தைக்கு சத்தாக மாறுவதால் இதயம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
- பால் நெறி கட்டுவது இயற்கையாக சரியாகும்.
தாய்ப்பால் அதிகரிக்க உதவும் எளிய வீட்டு உணவுகள்
குழந்தை பெற்ற ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக தாய்மார்கள் தினமும் சுமார் 600 கலோரியை இழக்க வேண்டியது இருக்கிறது. தாங்கள் சாப்பிடும் உணவே பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்க வேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.
1. பூண்டு - வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
2. பசலைக் கீரை & முருங்கைக்கீரை – கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.
முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ , சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம்.இதை சரியான் முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு
3. பால் சுறா – பால் சுறா என்னும் கருவாடு, மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
4. பழங்கள் மற்றும் காய்கறிகள் – வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.
5. பசும்பால் – தினமும் உணவில் 500 மில்லி டேர்த்துக் கொள்வது அவசியம்.
6. கருப்பட்டி - இதிலுள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.
6. கிழங்கு வகைகள் - நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர;க்கவும்.
தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும். மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.
குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...