உங்கள் குழந்தைக்கு தூங்குவதில் ஏன் சிரமம்? தீர்க்கும் வழிகள்

நல்ல தூக்கம் ஒரு குணப்படுத்துபவர் போன்றது. இது உடலை உற்சாகப்படுத்துகிறது மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இளம் குழந்தைகளில், குறிப்பாக 6 மாதங்கள் முதல் குழந்தைகளுக்கு சரியான அளவு மற்றும் தூக்கத்தின் தரம் இன்னும் முக்கியமானது. குழந்தை பிறந்த ஆரம்ப நாட்களில் ஒரு தாய் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் தூக்கமில்லாத இரவுகள். எனவே நடு இரவில் அடிக்கடி எழுந்திருப்பது வேதனையானது மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்களை உண்மையில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தையினால் பகல் மற்றும் இரவு ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இது 4 மாதத்திலிருந்து ஒரு குழந்தை இயற்கையாகவே தூங்க விரும்புகிறது மற்றும் ஒரு மாதிரியை பின்பற்றுகிறது. குழந்தையின் தூக்கம் அதன் வயது, எடை, குடும்பம் மற்றும் சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் பொறுத்தது.குழந்தையின் தோராயமான தூக்கத் தேவைகள் காலப்போக்கில் சீராகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
- ஒரு வார குழந்தைக்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 16-18 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது.
- 6 மாத குழந்தைக்கு இரவு முழுவதும் 10 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான தூக்க சிக்கல்கள்
இரவு முழுவதும் தூங்குவதற்கான மைல்கல் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். ஆரம்பத்திலிருந்தே சிலர் அதை அடைகிறார்கள், மற்றவர்கள் இதை அடைய நீண்டகாலம் எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தைகளில் கண்டறியப்பட்ட சில பொதுவான தூக்கப் பிரச்சினைகள் அல்லது சிக்கல்களைப் பற்றி கீழே படியுங்கள்.
- சரியான தூக்க அட்டவணை இல்லாதது: பகல் முழுவதும் தூங்கி இரவில் விழித்திருக்கும் குழந்தைக்கு தூக்க சிக்கல்கள் உள்ளது என்பதை குறிக்கிறது
- தாலாட்டும் கைகளில் மட்டுமே தூங்குகிறது: குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு இரவு முழுவதும் கடந்து செல்ல வேண்டியது பற்றி ஒரு தாயிடம் கேளுங்கள். அவள் படுக்கையில் குழந்தையை வைத்த தருணமே குழந்தை விழித்துக் கொள்கிறது.
- குறுகிய தூக்கங்கள்: குழந்தை குறுகிய நேரம் மட்டுமே தூங்கும்போது விரைவாக எழுந்திருக்கும்.
- தூக்கத்தை மறுப்பது: உங்கள் குழந்தை ஒருபோதும் படுத்து தூங்க தயாராக இல்லாதபோது இது வருகிறது. மேலும் நீங்கள் அமைதி சூழலை உருவாக்கி,குழந்தைகளைத் தூங்க வைக்க முயற்சித்தாலும் அவர்கள் விளையாடுவதில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் .
உங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களை எவ்வாறு கையாள்வது?
குறுகிய நேர தூக்கம் மற்றும் உறக்கத்தௌ மறுக்கும் நிலைக்கு பல காரணங்களால் இருக்கலாம். மற்றும் பொதுவாக புதியதாக பிறந்த குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தான் இதை எதிர்கொள்கிறார்கள். இந்த சிக்கல்களை கையாள்வது எளிதாக செய்ய முடியும்.
- சுய தூக்கத்தைத் தூண்டுவது குறிப்பிடத்தக்க வகையில் உதவும். குழந்தை இரவில் எழுந்து தாய்மார்களின் கையை தேடுகிறதென்றால், ஒரு மென்மையான பொம்மை அல்லது மென்மையான தலையணையை அறிமுகப்படுத்த முயற்சிக்கவும். இவை குழந்தைகளை தனியாக தூங்க வைக்க உதவும்.
- படுக்கையில் இசை: இது ஒரு சிறந்த நுட்பமாகும், இது குழந்தையை ஆற்றவும் தூக்க சூழலை உருவாக்கவும், குழந்தைகளின் தூக்கத்தை தொந்தரவு செய்யக்கூடிய வெளிப்புற சூழலிலுள்ள தேவையற்ற சத்தங்களிலிருந்து திசைத்திருப்பவும் உதவுகின்றது.
- படுக்கை நேர நடைமுறைகளைப் பின்பற்றுதல்: ஒரு இளம் குழந்தை இரவு 8 மணியளவில் தூங்க அறிவுறுத்தப்படுகிறது. எனவே அந்த நேரத்தில் ஒரு நல்ல இரவு சூழ்நிலையை உருவாக்க உங்களால் முடிந்தவரை முயற்சிக்கவும். உங்கள் செல்ல குழந்தை தூங்காமல் விளையாட்டு நேரத்தை கேட்டால், அமைதியாக அவர்களது விளையாட்டை புறக்கணிக்கவும்.
- படுக்கை அத்தியாவசியங்கள்: சீர்குலைந்த தூக்கம் மற்றும் அதிகாலை 2 மணிக்கு எழுந்திருப்பது, அசௌகரியமான படுக்கையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். உங்கள் பிள்ளையுடன் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல வசதியான மெத்தை மற்றும் கட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- இரவு தூக்கத்தை தடுக்கும் விஷயங்களை கண்டறிந்து கொள்ளுங்கள்: நீண்ட பகல் நேர தூக்கத்தைத் தவிர்ப்பதும், தாமதமாக எழுந்திருப்பதும் மற்றும் வீட்டு சூழ்நிலைகள் போன்றவை.
- வீட்டில் மட்டுமே தூங்க வைப்பது: ஒவ்வொரு பெற்றோரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான தீர்வுகளில் ஒன்று வீட்டில் மட்டுமே தூங்க வைப்பது. கார்களில் தூங்குவது அல்லது வீடுகளுக்கு வெளியே தூங்குவதை ஊக்கப்படுத்த வேண்டாம். மெதுவாக உங்கள் குழந்தையை சாதாரண வழிகளில் கொண்டு வாருங்கள். அழுகையும் எதிர்ப்பும் காலப்போக்கில் மங்கிவிடும்.
- அடிக்கடி உணவளிப்பதை தவிர்க்கவும்: உங்கள் குழந்தையை நீங்கள் பசியுடன் வைத்திருப்பதற்கு அல்ல, இருப்பினும் உணவளிக்கும் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் அது அடிக்கடி எழுந்திருப்பதை கட்டுப்படுத்துகிறது. படுப்பதற்கு முன் உங்கள் குழந்தைக்கு நன்றாக உணவளிக்கவும், நீண்ட தூக்கங்களை கொண்டிருக்கும் போது இடையில் ஒரு முறை உணவளிக்கவும்.
- குடும்ப / வெளிப்புற தடைகளை அகற்றுவது: ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பதற்கு முழு குடும்பத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது, எனவே அனைவரும் சரியான சூழ்நிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகள் இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
தூக்க சிக்கல்களைத் தூண்டும் காரணங்கள்
தூக்கப் பிரச்சினைகளைத் தூண்டும் சாத்தியமான காரணங்கள் பற்றி கீழே படியுங்கள் ...
- குளிர் அல்லது சூடாக இருப்பது.
- பசி
- தாயிடமிருந்து பிரிக்கும் கவலை
- நிரம்பி வழியும் டயப்பர் அல்லது ஈரப்பதம் சங்கடமான படுக்கை
- சாதகமற்ற சூழல்
- குடும்ப நடவடிக்கைகள் அல்லது ஆரோக்கியமற்ற நடைமுறைகள் வெளிப்புற சூழல் / தேவையற்ற ஒலிகள்
சிறந்த நல்ல இரவை அடைய வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகும். ஆகவே, குழந்தை அழும்போது பொறுமையாக இருங்கள், நிலைமையை சரி படுத்துவதற்கு குழந்தையை வெளியில் அழைத்து செல்லவோ அல்லது இழுவண்டியில் அழைத்துச் செல்லவோ வேண்டாம் அதேபோல் பீதி அடையவும் வேண்டாம். நீங்கள் மிகவும் அமைதியாக வழக்கத்தை பின்பற்றுங்கள், விரைவில் பழகிக் கொள்வார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த தூக்கத்தை கொடுக்க எல்லா அம்மாக்களையும் வாழ்த்துகிறேன்,.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...