உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எவ்வளவு ஈடுபாடாக உள்ளீர்கள் ?

All age groups

Parentune Support

5.1M பார்வை

5 years ago

உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எவ்வளவு ஈடுபாடாக உள்ளீர்கள் ?

"அம்மா, அம்மா, அம்மா" என்று மகன், வாட்ஸ்அப் பை பார்த்துக்கொண்டிருக்கும் தனது அம்மாவை கூப்பிட்டான்.

“ஹ்ம் .. என்ன?” என்று அம்மா குழந்தையை பார்க்காமல் மொபைலைப் பார்த்துக்கொண்டே கேட்டார்.

“நான் என்ன செய்தேன் என்று பாருங்கள், ஒரு டைனோசர் வரைந்திருக்கிறேன்.” என்று மகன் தனது தாயை இழுத்துக்கொண்டே கூறினான்.

"ஆமாம், நல்லது-நல்லது, போய் இப்போது ஒரு பூனையை வரைந்து வா" என்று அம்மா கூறினார், மகன் மனமுடைந்தான்.

தனது மகன் கத்த தொடங்கும் வரை தாய் தனது தொலைபேசியை பார்க்க தொடர்ந்தார், பிறகு அவரும் கத்தி சத்தம் போட ஆரம்பித்தார்.
இருவரும் உருக்குலைந்தார்கள். இதை நீங்கள் அனுபவித்துள்ளீர்களா ? இங்கே என்ன பிரச்சனை உள்ளது ? எது தேவை ? ஈடுபாடு!

​​வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் மற்றும் நகைச்சுவைகளைப் படிப்பது முக்கியமல்ல என்பதையும், அதற்கு பதிலாக சிறிது நேரம் குழந்தையின் மேல் கவனம் செலுத்துவது, பிரச்சினைகள் மற்றும் கவலைகளை தவிர்க்க உதவுகிறது என்பதை மெதுவாகவே உணர்கிறோம். எப்போது, ஒரு பிரளயத்திற்கு பின்!

எனவே நாம் எவ்வாறு ஈடுபாடுடன் இருக்க முடியும்? இதன் பொருள் நாம் ‘நிகழ்காலத்தில்’ இருக்க வேண்டும். நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்றால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் அல்லது கவனமாக இருக்க வேண்டும். இதற்கு முயற்சி மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. அனைத்து கடின உழைப்பிற்கும் பிறகு விரும்பிய கனி கிடைக்கும். உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை!

Advertisement - Continue Reading Below

குழந்தை பருவத்தில் (0-12 மாதங்கள்):

நாங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை அணைத்து, அவரை / அவளை முத்தங்களால் அன்பை பொழிகிறோம். குழந்தை மூன்றாவது மாதத்தைக் கடக்கும்போது நாம் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறோமா? கன்னங்களில் முத்தமிடுவது நல்லதல்ல என்று பெற்றோர்கள் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதைத்தான் ‘அவர்கள்’ சொல்கிறார்கள். ‘அவர்கள்’ யார்? தெளிவற்ற பதிலைக் கூறும் அவர்களின் பெற்றோர் / தாத்தா, பாட்டி / உறவினர்கள்.

முத்தங்கள் ஒருபோதும் தவறாக இருக்க முடியாது, எனவே உங்கள் குழந்தைக்கு எண்ணற்ற முத்தங்களை கொடுங்கள். உங்கள் குழந்தை ஒரு பூ போல் அழகாக ஆனந்தமாக மலர்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அந்த தருணத்தை அனுபவிக்கவும், அவர்களின் கண்ணில் உள்ள பிரகாசம், அவர்களின் புன்னகை மற்றும் அவர்கள் உற்சாகமாக கையை அசைப்பது அல்லது கால்களை உதைப்பது போன்ற செயல்பாடுகளை நீங்கள் பார்க்க முடியும்.

இதேபோல் அவர்கள் அழத் தொடங்கும் போது- கவனிக்கவும். அவர்கள் புகார் செய்கிறார்களா அல்லது அழுகிறார்களா? ஒரு கணம் உங்களை நிறுத்துங்கள். அவர்கள் ஏன் அழுகிறார்கள் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் தூண்டுதலைப் புரிந்து கொள்ளுங்கள்- இது பசி / டயப்பர் மாற்றம் / தூக்கம்? அருகில் சென்று, அவர்களை கொஞ்சி, வசதியாகப் பேசுங்கள், அவர்ளை உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையானதை கொடுப்பதற்கு முன்பு முத்தமிடுங்கள் (உணவு / டயபர் மாற்றம் / தூக்கம்). அந்த இடைநிறுத்தம் உங்களை விழிப்புணர்வு மண்டலத்தில் வைத்திருக்கும்.

Advertisement - Continue Reading Below

குழந்தைகள் மற்றும் குழந்தைப் பருவம்

இது நிலையான இயக்கம் மற்றும் ஆராயத் தொடங்கும் வயது. நிறைய கேள்விகள் இருக்கும். நீங்கள் பதில்களை மீண்டும் மீண்டும் கூற வேண்டியிருக்கும்.

இடைநிறுத்துங்கள், கவனியுங்கள் சிந்தியுங்கள். இவை உங்கள் மந்திர கருவிகள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குழந்தை ஒரு விஞ்ஞானி / மருத்துவர் / பொறியியலாளர் / பத்திரிகையாளர் / அல்லது எதுவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ... அவர்களுடைய ஆர்வத்தை நீங்கள் எவ்வாறு உருவாக்க முடியும்? எதிர்காலத்தில் நீங்கள் அவருடைய படிப்பை எவ்வாறு சுவாரஸ்யமாக்க முடியும்? ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் …… மேலும் இது கேள்விகளை ஊக்குவிப்பதன் மூலம் அடையப்படுகிறது. ஆமாம், இது நேரத்தை எடுத்துக்கொள்கிறது, ஆனால் உங்கள் குழந்தையை விட வேறு என்ன முக்கியம்.

உங்கள் உடல் தொடர்பு அவர்களுக்கு தேவைப்படும் வயது இதுவாகும். கட்டிப் பிடியுங்கள், பிடித்து முத்தமிடுங்கள். இரண்டு வயதில் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள், எனவே கவனிக்கவும். அந்த நேரத்தில் அவர்கள் அதை விரும்பவில்லை என்றால், சிறிது நேரம் காத்திருங்கள்- ஒருவேளை படுக்கை நேரத்தில் நீங்கள் முயற்சி செய்யலாம்.

குழந்தைகள் விளையாடிட்டு வீட்டிற்கு வரும் போது அழுக்கான ஆடைகளுடன் வருவார்கள். மற்றும் கலரிங்,  கிராப்ட் போன்றவற்றில் ஈடுபடும் போது குழந்தைகள் தங்கள் அறையை குப்பையாக ஆக்கிவிடுவார்கள்.  அதற்கு நீங்கள் கோபப்படுவதற்கு  முன்பு - உங்களை  இடைநிறுத்தி- ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்- அவர்களைப் பார்த்து, அவர்களின் கண்களை ‘பாருங்கள்’. அவர்களின் முயற்சி, செயல்முறையைப் பாராட்டுங்கள். அவர்களை கட்டிப்பிடிக்கவோ இறுக்கமாக பிடிக்கவோ மறக்காதீர்கள். உங்கள் பாராட்டு வார்த்தைகளின் மூலம் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சி வரம்பற்றது. நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள், அவர்களின் சுயமரியாதையை வளர்க்க உதவினீர்கள். ஒரு எளிய கருத்து அவர்களுக்குத் தேவை. ஒரு அழுக்கான உடை, ஒரு சுத்தமற்ற அறை? மீண்டும், உங்களை இடைநிறுத்தி சிந்தியுங்கள். அழுக்கான உடையையும், ஒரு சுத்தமற்ற  அறையையும், சரி செய்து மற்றும் சுத்தம் செய்து விடலாம். உங்கள் கடுமையான வார்த்தைகள் அல்லது கோபம் அவர்களின் வாழ்க்கையை குழப்பக்கூடும்.

பயிற்சி இல்லாமல் ஈடுபடுவது கடினம். எனவே இப்போதே தொடங்குங்கள். உங்கள் குழந்தையுடன் உணவளிக்கும் போது, ​​குளிக்கும் போது, ​​உடை மாற்றும் போது, ​​ஒரு கதையைப் படிக்கும்போது / சொல்லும்போது ஈடுபாடுடன் செய்யுங்கள். எல்லா நடவடிக்கைகளையும் முழு மனதுடன் செய்யுங்கள்.

ஈடுபாடுடன் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது:

  • உங்களை நேசிக்கவும் = உங்கள் மீது கவனம் செலுத்துங்கள் = உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்
  • உங்கள் குழந்தையை நேசிக்கவும் = மதித்து ஏற்றுக்கொள்வது
  • உங்கள் கடந்தகால கற்றலைத் தூக்கி எறிந்து, புதியதைத் தழுவுங்கள் = உங்கள் குழந்தையுடன் ஒவ்வொரு கணமும் ஒரு கற்றல் தான், எனவே அதை பெற உங்கள் மனதை திறந்து வையுங்கள்.
  • பாருங்கள், பாருங்கள், பாருங்கள் = உங்கள் குழந்தையின் கண் / கண்ணோட்டத்தில் வழியாக விஷயங்கள் / சூழ்நிலைகளைப் பாருங்கள்.
  • ஒரு பிரதிபலிப்பாக இருங்கள்

3 வாரங்கள் ஈடுபாடுடன் இருங்கள், பின்னர் அது ஒரு பழக்கமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள். மகிழ்ச்சியான மற்றும் அமைதியான குழந்தை வளர்ப்பு  பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்களுக்கு வலைப்பதிவு பிடித்ததா? கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களிடமிருந்து கேட்க நாங்கள் விரும்புகிறோம் ... எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள், மேலும் ‘ஈடுபடலாம்’

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...