• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

வைட்டமின் டி இருந்தால் கொரோனா பாதிப்பு குறையுமா ?

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 20, 2022

கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு சிகிச்சையாக வைட்டமின் டி பல நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சருமம் சூரிய ஒளியில் படும் போது வைட்டமின் டி உடலில் உற்பத்தியாகிறது.

வீட்டுக்குள்ளேயே இருப்பது உடலில் வைட்டமின் டி அளவைத் தடுக்கிறது. கோவிட்-19 பரவலின் போது, அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பரிந்துரைக்கப்படும்போது, உடலில் வைட்டமின் டி அளவை சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வைட்டமின் டி ஊட்டச்சத்தை உணவில் கூடுதலாகச் சேர்ப்பதன் மூலம் COVID-19 ஐ ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.  

வைட்டமின் டி கிடைப்பதன் மூலம் கொரோனா பாதிப்பு குறையுமா?

கோவிட்-19 சிகிச்சையில் வைட்டமின் D இன் தாக்கம் குறித்த நேரடி ஆதாரம் இல்லை என்றாலும், வீரியத்தைக் கட்டுப்படுத்துவதில் அதன் பங்கு இருப்பதாகவும், தடுப்பு சிகிச்சையாகவும் செயல்படுவதாக கருதப்படுகிறது. கோவிட்-19 தொற்று மயோர்கார்டிடிஸ், மைக்ரோவாஸ்குலர் த்ரோம்போசிஸ் மற்றும்/அல்லது சைட்டோகைன்  வழிவகுக்கிறது. வைட்டமின் D இன் முதன்மைப் பங்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதும் நோயின் தீவிரத்தைக் குறைப்பதும் ஆகும், அதனால்தான் COVID-19 ஐத் தடுக்க வைட்டமின் D உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் உள்ளன.

அரசாங்க உத்தரவுகளாலும், ஓரளவுக்கு தங்கள் உடல் நலனில் அக்கறையாலும், இந்த நாட்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகின்றனர். ஒருபுறம், கொரோனா வைரஸின் சமூகப் பரவல் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்படுவதால் இது ஒரு ஆசீர்வாதம், ஆனால் மறுபுறம் இது உடலில் வைட்டமின் டி அளவைக் குறைக்க்கிறது.

வைட்டமின் டி ஊட்டச்சத்தை மட்டும் குறிப்பாக சொல்வதற்கு காரணம் என்ன?

நம்முடைய உடலில் வைட்டமின் டி ஆரோக்கியமான அளவில் இருந்தால், ஒருவரின் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் (immune system) ஆரோக்கியமாக இருக்கும் என்றும், சுவாச நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடும் என்றும் சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

சமீபத்திய ஆய்வில் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் போதுமான அளவு வைட்டமின் டி இருந்தவர்களுக்கு நோய் தீவிரமாகமல் இருப்பதும், இறப்புக்கான ஆபத்து குறைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

வைட்டமின் டி செல்கள் மற்றும் மேக்ரோபேஜ்கள் உள்ளிட்ட நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். அவை நமது உடலை நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். 

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிமோனியா/ARDS, அழற்சி, அழற்சி சைட்டோகைன்கள் மற்றும் த்ரோம்போசிஸ் போன்றவற்றில் கோவிட்-19 இன் தீவிரத்தை வைட்டமின் D உண்மையில் குறைக்கிறது, ஏன்னென்றால் தொற்றுநோய்களின் தாக்கத்தைக் குறைக்க, ஒப்பிட்ட அளவில் எளிதான  சப்ளிமெண்ட்ஸ் வழங்கும்..

குறைந்த வைட்டமின் டி அளவுகள் அழற்சி சைட்டோகைன்களின் அதிகரிப்புடன் தொடர்புடையது மற்றும் நிமோனியா மற்றும் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. வைட்டமின் டி குறைபாடு த்ரோம்போடிக் எபிசோட்களின் அதிகரிப்புடன் தொடர்புடையது, இது கோவிட்-19 இல் அடிக்கடி காணப்படுகிறது. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரமாகின்றது. இதனால் கொரோனாவால் இறப்பது அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

வைட்டமின் டி சுவாசக்குழாய் நோய்த்தொற்றைக் குறைக்கின்றது

 2009 ஆம் ஆண்டில் H1N1 வைரஸால் ஏற்படும் பருவகால மற்றும் தொற்றுநோய்க் காய்ச்சலின் போது, வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸ் கடுமையான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளை உருவாக்கும் வாய்ப்புகளை 12% முதல் 75% வரை குறைத்தது. "அனைத்து வயதினரிடமும், மற்றும் ஏற்கனவே இருக்கும் நாட்பட்ட நோய்களைக் கொண்ட நபர்களிடமும் கூடுதல் நன்மை பயக்கும் விளைவு காணப்பட்டது.

 பாதிக்கப்பட்டவர்களில், காய்ச்சல் அறிகுறிகள் குறைவாகவே இருந்தன, மேலும் அவர்கள் 1000 IU க்கும் அதிகமான வைட்டமின் டி அளவைப் பெற்றிருந்தால், அவர்கள் குணமடைவார்கள். வைட்டமின் டி போதுமான அளவு உள்ளவர்களை விட வைட்டமின் டி குறைபாடு உள்ள நபர்களுக்கு நன்மைகள் அதிகமாக இருந்தன..

என்னென்ன வழியில் வைட்டமின் டி ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகளை ஒருவர் எடுக்க வேண்டும்.

  • ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் சூரிய ஒளியில் தோலை வெளிப்படுத்த வேண்டும்.கர்ப்பிணிகளுக்கு சூரிய நமஸ்காரம் பல நன்மைகளை தருகிறது.
  • தினசரி உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த மீன்களான சால்மன், காட் லிவர் ஆயில், காளான், பசும்பால், சோயா பால் மற்றும் முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
  • வயதானவர்களுக்கு எப்போதும் நுண்ணூட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது பொதுவாகக் காணப்படுகிறது. இந்த வயதினருக்கு கூடுதல் தேவை.
  • பால் பெரும்பாலும் வைட்டமின் டி மற்றும் பல நேரங்களில் ரொட்டி, பழச்சாறுகள் மற்றும் பிற பால் பொருட்கள் வைட்டமின் டி உடன் பலப்படுத்தப்படுகிறது.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

வைட்டமின் டி உள்ள உணவு வகைகள் எல்லாமே உங்களுக்கு வேண்டிய வைட்டமின் சத்தை கொடுக்க கூடியதுதான். ஆனால் பைசா செலவில்லாமல் தேவைக்கேற்ப வைட்டமின் டி சத்து தருவது சூரிய ஒளி மட்டுமே. பிள்ளைகள் வளரும் போதே அவர்களை சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள் வளர்ப் பதை தவிர்த்து திறந்த வெளியில் விளையாட அனுமதியுங்கள். தினமும் காலை 10 .30 மணி முதல் 12 மணிக்குண்டான நேரத்தில் பத்துநிமிடங்களாவது உடலில் வெயில்பட அனுமதியுங்கள். இது தவிர பால், காளான், ஆரஞ்சு, முட்டை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது...

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}