நவராத்திரி 9 நாள் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அக்டோபர் 26 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் இவ்வருடத்தின் நவராத்திரி விழா. இந்த ஒன்பது இரவுகளும் தெய்வீகப் பெண்மையை கொண்டாடும் விழாவாக நம் நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்தும், நம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இது எவ்வாறு கொண்டாடப் படுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி துவங்குகிறது. புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது. இது முழுக்கமுழுக்க பெண் தெய்வங்களுக்கான பண்டிகை அதாவது இறைமையின் பெண்தன்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகை.
நவராத்திரி பலன்கள்
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.நவராத்திரி விரதமிருந்து வழிபட்டால் நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனதின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோஷங்களையும் நீக்கும். எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபடவேண்டும்.
சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று இரண்டு நவராத்திரிகள் பிரதானமாகக் கொண்டாடப் படுகின்றன. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாள்கள் கொண்டாடுவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாள்கள் சாரதா நவராத்திரி. சாரதா நவராத்திரி தமிழகத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்களும் சிறப்பும்
நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்களும், மூன்று அடிப்படை குணங்களான 'தமஸ், ரஜஸ், சத்வ' வை பொருத்து வகைபடுத்தப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தமஸ். அன்று தேவி உக்கிரமாக இருப்பாள், துர்கா, காளி போன்று. அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியை சார்ந்தவை. இவள் கொஞ்சம் மென்மையானவள், ஆனால் செல்வ வளத்தை ஒத்தவள். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை சார்ந்தது, அதாவது சத்வ குணம் நிறைந்தது. இது ஞானம், ஞானமடைதலை ஒத்தது.
துர்க்கைக்கு சிறப்பு : இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.
துர்க்கை மகிசா சூரனை அழித்தொழித்த நாளே விஜயதசமி என்பது, வடக்கே உள்ள ஐதிகம். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தரசா விழாவில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.
கொலுவைத்து கொண்டாட்டம்
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்க ரித்து வைப்பதே. ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.
விஜயதசமி
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.
என்ன செய்ய வேண்டும்?
- நவராத்திரிக்கு முதல் நாள், அதாவது அமாவாசை தினத்தன்றே பூஜைக்கு வேண்டியதை சேகரிக்க வேண்டும். அன்றே பூஜையரையைக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். மறுநாள் பிரதமை அன்று, அதிகாலையில் நீராடி, பூஜையறையில் அம்பாளின் திருவுருவம் அல்லது உருவப் படத்தை வைத்து மலர்களால் அர்ச்சித்து,
- பூஜை செய்ய வேண்டும். தங்கள் இல்லத்திகு அம்பாளின் திருவருள் பூரணமாகக்கிட்ட மனமாரப் பிரார்த்திக்க வேண்டும்.
- நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
- நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
- நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
- ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
- தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்
- நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
- நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்
- நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
- ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்..
பொதுவாக, ஒவ்வொருபடியிலும் என்னென்ன பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது குறித்துக் கூறும்போது, உயிர்களின் அறிவின் அடிப்படையில் பொம்மைகளின் வரிசை அமைய வேண்டும் என்று சொல்வதுண்டு.
ஒன்பது படிகள் எதற்காக?
- முதல் படியில் ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவரப் பொம்மைகள்.
- இரண்டாம் படியில் இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.
- மூன்றாம் படியில் மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.
- நான்காவது படியில் நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.
- ஐந்தாம் படியில் ஐந்து அறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.
- ஆறாம் படியில் ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.
- ஏழாம் படியில் சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.
- எட்டாம் படியில் தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.
- ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதிக்கும் - லட்சுமிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்குமாறு வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பலருக்கும் அவ்வாறு அமைக்க இயலாது.
இனிதாக நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.. உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சானிடைஸர் பயன்படுத்துதல் என அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்...(நவராத்திரி முதல், இரண்டாம் நாள் பிரசாத வகைகளும் நன்மைகளும் - http://www.parentune.com/parent-blog/types-and-benefits-of-first-and-second-day-reciepes-of-navratri/6807)
உங்கள் ஆலோசனைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறப்பாக மாற்ற முடியும், பின்னர் தயவுசெய்து கருத்து தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்ட தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், கண்டிப்பாக மற்ற பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...