வளர்ச்சி-மைல்கற்கள்
குழந்தைகள் எந்த மாதத்தில் குப்புற விழுவார்கள்?
வெளியிடப்பட்டது: 13 நவ., 2025
புதியதாக பெற்றோர் ஆனவர்கள் குழந்தைகள் சரியாக வளர்கிறதா என்று கவலை வளர்ச்சி மைல்கற்கள் சரியானதாக உள்ளதா என்று கவலை மற்றும் பதற்றம் அடைவார்கள். எப்போது தலை நிற்கும் எப்போது உட்கார்வார்கள் எப்போது குப்புற விழுவார்கள் என்பது போன்ற சந்தேகங்கள் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் குழந்தைகள் எந்த மாதம் குப்புற விழும் என்று பார்ப்போம்.
எப்படி குப்புற விழ முயற்சி செய்வார்கள்?
உங்களுடைய குழந்தை, மூன்றாவது மாத இறுதியில் அல்லது நான்காவது மாதத் தொடக்கத்தில், பக்கவாட்டில் திரும்புவதையும், தலையை சிறிது தூக்கி, படுக்கை முழுவதும் சுற்றி வருவதையும் நீங்கள் காணலாம். குழந்தைக்கு இரண்டாவது மாதம் ஆகும் பொழுது பெற்றோர்கள் அவர்களுடைய தலையை மிக மெதுவாக இடது புறத்தில் இருந்து வலது பக்கம் திருப்ப வேண்டும். இது குழந்தையின் தலை உருளையாக இருக்க உதவும்.
எந்த மாதத்தில் குப்புற விழுவார்கள்?
- இரண்டாம் மாத முடிவில் குழந்தை மல்லாந்து படுத்தபடி பக்கவாட்டில் படுக்க முயற்சிப்பார்கள். அப்படியே தலையை தூக்க முயற்சிப்பார்கள்.
- மூன்றாம் மாத தொடக்கத்தில் குழந்தை தலையை தூக்கி பார்க்கும் போது நீங்கள் அதை ஊக்குவிக்கலாம்.
குழந்தையின் தலை கழுத்து இரண்டையும் சேர்த்தாற் போன்று மடியில் அமர்த்தி கொள்வதன் மூலம் குழந்தையின் தலை நிற்க தொடங்கும். மடியில் குழந்தை அமர்ந்திருக்கும் போது அவர்கள் அம்மாக்களின் குரலை கேட்டு தலையை திருப்புவார்கள். படிப்படியாக அண்ணாந்து பார்ப்பார்கள். அருகில் இருக்கும் அப்பாவின் குரலையும் உணர்ந்து திரும்புவார்கள்.
<div style="padding:56.25% 0 0 0;position:relative;"><iframe src="https://player.vimeo.com/video/723296114?h=a9cba455ec&badge=0&autopause=0&player_id=0&app_id=58479" frameborder="0" allow="autoplay; fullscreen; picture-in-picture" allowfullscreen style="position:absolute;top:0;left:0;width:100%;height:100%;" title="Dr Meena roll over"></iframe></div><script src="https://player.vimeo.com/api/player.js"></script>
குழந்தைகள் குப்புற விழ அறிகுறியாக நாம் படுக்க வைத்த உடன் உடலை ஒரு பக்கமாக திருப்பி தலைக்கு மேலே இருக்கும் பொருட்களை எடுக்க முயற்சி செய்வார்கள். நாம் அவர்கள் அவ்வாறு தலையை திருப்பி பார்க்க முயற்சி செய்யும் போது அவர்கள் குப்புற விழ வசதியாக இருக்க நிறைய பொம்மைகளை சத்தம் வரும் பொம்மைகளை எடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவர்கள் அதை பார்த்து இன்னும் நன்றாக முயற்சி செய்வார்கள்.
உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்
Your All-In-One Baby Toolkit
Monitor milestones, growth, and discover unique baby names easily
Be the first to support
Be the first to share



