• உள்நுழை
 • |
 • பதிவு
குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

0-1 வயது குழந்தையின் கோடை கால சரும நோய்களை தீர்க்க

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 25, 2020

0 1
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கோடை வெயிலின் வெப்பம் குழந்தைகளின் மிருதுவான, மென்மையான சருமத்தை அதிகமாகவே பாதிக்கும். வெப்பக் கதிர்களின் தாக்கம் காரணமாக வியர்க்குரு, வேனல் கட்டி, அலர்ஜி, அம்மை நோய் எனப் பல நோய்கள் வருகின்றன. சன்ஸ்கிரீன் லோஷன்ஸ் மூலம் மட்டும் இந்த கோடை வெயிலை சமாளிக்க முடியாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்து கொண்டாலே குழந்தைகளின் சருமத்தை வெப்ப நோய்களிலிருந்து பாதுகாப்பது எளிது.

குழந்தைகளுக்கு இரண்டு விதமான சருமம் இருக்கின்றது

அதிக எண்ணெய் பதமும் இல்லாத அதிக வறட்சியும் இல்லாத சமநிலையான தோலை நார்மல் சருமம் என சொல்லப்படும்.

இந்த வகை சருமம் இயல்பாகவே கோடை மற்றும் பனிக் காலங்களில் எளிதாக வறண்டுவிடும். இந்த மாதிரி சருமம் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும். தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய், ph சமநிலையுடைய பேபி லோஷன்ஸ் தேய்த்துவிடலாம். உடல் சூட்டை தணிக்கும் உணவுகளை வழங்கலாம்.

வியர்க்குரு, தோல் வறட்சி,  அரிப்பு, வேனைக் கட்டி, அலர்ஜி, அம்மை தடிப்புகள் போன்றவற்றுகான தீர்சு காணும் வழிகள்

தோல் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்:

தோல் வறட்சியை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் அலர்ஜி அதிகமாகிவிடும். சூரிய ஒளியின் தாக்கத்தினால் சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து வறட்சி உண்டாகிறது. மற்றும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்காவிட்டாலும் வறட்சி ஏற்படும். இரசாயன பொருட்களின் பயன்பாட்டினாலும் வறட்சி அதிகமாகும்.

தீர்வு

 • இரசாயனம் கலந்த குளியல் சோப், ஷாம்பூ, சலவை சோப் மற்றும் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதற்கு பதிலாக இப்போது கடைகளில் குழந்தைகளுக்கான Ph balance soaps கிடைக்கின்றது. இந்த சோப் குழந்தையின் உடலுக்கு தேவையான ஈரப்பத்தை சமநிலையில் வைக்க  உதவுகின்றது.
 • பேபி ஷாம்பூவை பயன்படுத்தலாம். மேலும் வீட்டில் தயாரித்த குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். வறட்சியை போக்க கண்டிப்பாக குழந்தைகளை குளிப்பாட்டும் முன் தேங்காய் எண்ணெய் தேய்த்துவிடலாம்.
 • மிருதுவான பருத்தித்துணியால் ஆன ஆடைகளை அணிந்துவிடவும். சரும நோய்களை தடுக்க உதவும் தேங்காய் எண்ணெய் /ஆலிவ் எண்ணெய்களை கை, கால், முகத்தில் தடவிக் கொள்ளலாம்.
 • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நீர்சத்து அதிகமுள்ள சுரக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்களை சமைத்து சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கும்.

வியர்க்குரு

வெப்பநிலை 45 டிகிரியைத் தொடுவதால் உடலின் வெப்பநிலை சமநிலையில் இல்லாமல் இருப்பதால் குழந்தைகளின் கழுத்து, அக்குள், அல்லது டயப்பர் மாட்டும் பகுதிகளில் ஏற்படும் வியர்வை காரணமாக இளஞ்சிவப்பு நிறத்தில் சருமத்தில் திட்டுத்திட்டாக வரும். அவ்வப்போது இந்த வியர்வையைத் துடைத்து உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். அரிப்பு ஏற்படும். அதிக நேரம் ஏ.சி யில் இருப்பது, பருத்தியில்லா ஆடைகளை அணிவது, ஃபேனுக்கு அடியில் வெகு நேரம் படுக்க வைத்திருப்பது, காற்றோட்டம் இல்லாத இடத்தில் இருப்பது, உச்சி வெயிலில் பயணம் செய்வது போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை வரும்.

தீர்வு

 • குழந்தைகள் குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு பிறகு குளித்தவுடன் சிறிதளவு குழந்தைகளுக்கான மிதமான பாடி லோஷன்ஸ் பயன்படுத்தலாம். வியர்வைக்குரு அதிகமாக இருந்தால் சோப்பை தவிர்த்து பயத்தமாவை பயன்படுத்தலாம். இந்த நேரங்களில் கடலை மாவு அரிப்பை மேலும் கூட்டும் என்பதால் பயத்தமாவு சிறந்தது.
 • வெயில் காலத்தில் குழந்தைகளை தினமும் இரு வேளை குளிக்க வைப்பது/ பச்சிளம் குழந்தைகளை பருத்தி ஈரத்துணியால் தொடைத்துவிடலாம். உடலுக்கு குளிர்ச்சியை தருகின்ற உணவுகளை சேர்த்துக் கொள்வது, எண்ணெய் மசாஜ், இயற்கையான சருமப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவது மூலம் வியர்வைக்குரு பிரச்சனையை சரி செய்யலாம்.  

வேனல் கட்டி

வேனல் கட்டியை சூட்டுக் கொப்பளம் என்றும் கூறுவார்கள். சருமத்தின் மூலம் வெளியேறும் உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அங்கு பாக்டீரியா உருவாகி அந்த இடம் வீங்கிப் புண்ணாகி கொப்புளங்களாக மாறிவிடும். உடலின் அதீத உஷ்ணம் காரணமாகவும் ஏற்படும்.

தீர்வு

 தண்ணீர் நிறைய குடிக்கவும். வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தேங்காய் எண்ணெய், சந்தனம் அல்லது வேப்ப இலை பேஸ்ட் தடவினால் வேனல் கட்டி மறையும். எண்ணெய் குளியல் செய்யலாம். வலி மிகுதியாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகளை பெறலாம்.

அம்மை நோய்கள்

பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகைகள் உண்டு. வெயில் காலத்தில் அதீத உஷ்ணம் காரணமாக நிலத்தில் உள்ள குப்பை, கூளங்களில் இருக்கும் பல்வேறு கிருமிகள் காற்றின் மூலம் பரவுகின்றன. இந்த நோய் பரவுவதற்கான முக்கிய வைரஸ் கிருமியின் பெயர் 'வேரிசெல்லா ஜாஸ்டர்'. சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பிறகு அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்துக் காணப்படும். உடலில் அரிப்பு, சோர்வு,  தாங்க முடியாத வலி, தொடர்ந்து லேசான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்நேரத்தில் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.

தீர்வு

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். எண்ணெய், மசாலா, காரம் தொடவே கூடாது. அசைவ உணவை சூப்பாக அருந்துவது நல்லது. மேலும் அம்மை நோய் தாக்குவதை தடுக்க குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும். போட்டால் வராது என்று அர்த்தமில்லை, வருவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார் மருத்துவர். அம்மை நோயின் அறிகுறிகளை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி நோயின் தீவிரத்தை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்

 • பச்சிளம் குழந்தைகளுக்கு எல்லா நேரங்களிலும் பயத்தம் பருப்பு மாவே சிறந்தது. இது பச்சிளம் குழந்தைகளின் தோலை சீராக்குவதோடு சரும பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றது.
 • குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரை அதிகம் பவுடர் போடுவதை தவிர்த்துவிடுவது நல்லது.
 • மிருதுவான பருத்தி துணிகளை பயன்படுத்துவதன் மூலம் சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
 • பகல் நேரங்களில் டயப்பர் அணியாமல் இருப்பது சிறந்தது. டயப்பர் இறுக்கமாக இருக்கும் போதும், அதை நீண்ட நேரத்திற்கு மாற்றாமல் இருக்கும் போதும் குழந்தைகளின் தோலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே டயப்பரை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் சில மிதமான கிரீம்களைப் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
 • வாசனை வெட் டிஷ்யுவின் பயன்பாட்டை குறைத்து, சின்ன சின்ன பருத்தி பந்துகள் கொண்ட பேக்கெட் கடைகளில் கிடைக்கும், அதை தண்ணீரில் நினைத்து சுத்தம் செய்யலாம். தடிப்புகள் இருந்தால் குழந்தைகள் அரிக்காமல், எரியாமல் இருக்கும்.

வீட்டில் தயாரிக்கும் பாரம்பரிய குளியல் பொடி செய்முறை

பாசிப்பயறு - 200 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்/ ஆண் குழந்தைகளுக்கு – 25 கிராம்
ரோஜா இதழ் -  25 கிராம்,  வசம்பு – 10 கிராம், பூலாங் கிழங்கு – 20 கிராம்
சந்தனக்கட்டை - 50 கிராம், ஆவாரம் பூ இதழ் -  தலா 25 கிராம்
வேப்பிலைக் கொழுந்து - 20 கிராம்

இந்த பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து மெஷினில் கொடுத்து பொடியாக அரைத்து வாங்கவும். அரைத்த பொடியை வெள்ளை பருத்தி துணியில் சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும். இந்தப் பொடியில் சிறிது தண்ணீர் கலந்து குழந்தையின் கண், காது தவிர மற்ற இடங்களில் பொடியை நன்கு தடவி குளிப்பாட்டவும்.

உங்கள் கருத்துக்களையும், குழந்தையின் சருமத்தை எப்படி பாதுகாக்கிறீர்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}