• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளுக்கு பசி எடுக்க என்ன செய்யலாம்? வீட்டு வைத்தியம்

Bharathi
0 முதல் 1 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 11, 2022

எப்போதுமே பெற்றோர்களுக்கு குழந்தையின் பசியை கண்டுபிடிப்பது என்பது மிகப் பெரிய சவால் தான். அவர்களுக்கு எப்போது பசி எடுக்கும், எந்த நேரத்தில் நல்ல சாப்பிடுவார்கள் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள விரும்பிவோம். பசி இல்லாத சமயங்களில் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருப்பது  தாய்மார்களுக்கு மிகவும் கவலை தரும்.  சில குழந்தைகளுக்கு பசி எடுக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே ரொம்ப சிரம்மமாக இருக்கும். 

எப்படியானாலும் குழந்தைக்கு நல்ல பசி எடுக்கனும், அவர்கள் நன்றாக சாப்பிடனும் அதான் தாய்மார்களாகிய நமக்கு வேண்டும். அதற்கு முன் சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஏன் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள்?  அவர்களுக்கு பசிக்குமா இல்லையா என்று யோசிக்கிறோம். நன்கு பசி எடுக்க சில குறிப்புகள் உங்களுக்காக..

குழந்தையின் பசியின்மைக்கான காரணங்கள்

குழந்தைகள் உணவை தவிர்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதற்கு மூலம் அவர்களுக்கு பசியின்மையாக இருக்கலாம். 

 • Junk food என்று சொல்லப்படும் உணவுகளை
 • எண்ணெய் பலகாரங்கள்
 • ஒரே வேளையில் அதிக உணவு எடுத்துக் கொள்வது
 • இடைவெளி நேரத்தில் பழங்கள், காய்கள், சூப் கொடுக்கலாம். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது
 • வயிற்றில் பூச்சி வந்தால்

பசியின்மையை போக்கும் வழிகள்

 • பாக்கெட் உணவுகளை தவிர்த்தல்
 • சிறிது உணவு சிறிது இடைவேளை அவ்வாறு உணவு எடுத்துக் கொள்வது
 • இனிப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்தல்

எவ்வாறு பசியை தூண்டுவது?

1. இஞ்சி சாறு

 இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால் நன்றாக உணவு செரித்து பசி எடுக்கும். வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு (2 வயது) அரை பங்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொடுக்கலாம்.வளர்ந்த குழந்தைகளுக்கு ஒரு பங்கு கொடுக்கலாம்.பெரியவர்கள் 1/4 டம்ளர் குடிக்கலாம்.

2. புதினா இலை

 புதினா இலை நன்கு பசி தூண்டும். புதினா இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதித்து வற்றியதும் இறக்கவும்.. அந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

3. சீரக ஓம கசாயம்

சீரகம், ஓமம் இவை இரண்டும் செரிமானத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும். இந்த கஷாயத்தை செய்ய 1/4 டீஸ்பூன் சீரகம், 5-6 மிளகு, சிறிதளவு ஒமம், சிறிய துண்டு இஞ்சி, ஒரு பூண்டு பல், மஞ்சள் எல்லாவற்றையும் நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு ஒரு பங்காக சுண்டியபின் ஆறவைத்து 6 மாத குழந்தைக்கு 1/4 பாலாடை, 1 வருட குழந்தைக்கு ஒரு பாலாடை எனவும் வெறும் வயிற்றில் கொடுக்கலாம். வயதிற்கேற்ப அளவை அதிகரித்து கொள்ளலாம்.

4. வேப்பிலை சாறு

வேப்பிலை சாறு குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.

கொழுந்து இலைகளை பறித்து தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு நல்லது.

5. பசியைத் தூண்டும் பொடி

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய ஐந்தும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.

சுக்கை மேல் தோல் நீக்கி, லேசாகப் பொன் நிறமாக வறுக்க வேண்டும்.

இதை அனைத்தையும் நன்றாக சேர்த்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பொடி அளவுக்கே ஆர்கானிக் வெல்லம் இருந்தால், அதை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான்… பசியைத் தூண்டும் பொடி ரெடி.

எப்போது கொடுக்க வேண்டும்?

குழந்தைகளின் காலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், அரை டீஸ்பூன் இந்தப் பொடி எடுத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வெல்லம், தேன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் பசியை தூண்ட சில குறிப்புகள்

 • விதவிதமான உணவுகளை குழந்தைகளுக்கு விரும்பிய சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
 • சாப்பிடும் போது எக்காலத்திலும் நீர் அல்லது பானங்கள் எதுவும் கொடுக்க வேண்டாம்.
 • காலை உணவை சாப்பிட கட்டாயப்படுத்துங்கள்.நாளடைவில் அது பழக்கமாகி விடும்.
 • தினமும் ஒரே நேரத்தில் உணவு கொடுத்து பழக்கினால் அதே நேரத்தில் பசி எடுக்க ஆரம்பித்து விடும்.
 • குழந்தைகளை தானாக எடுத்து சாப்பிட பழக்கினால் ஆர்வத்துடன் தானாக சாப்பிட முயலும்.

இதுமட்டுமில்லாமல் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லும் போது வயிற்றுப் பூச்சிப் பற்றி விரிவாக கேட்டு ஆலோசனைப் பெறுங்கள். 

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| May 22, 2022

Nenga kudukka sollura marunthaiyea sapida mattangiranga enna pandrathu..

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}