• உள்நுழை
  • |
  • பதிவு
கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

பொங்கள் தின சிறப்புகள் - அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 13, 2022

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.

போகிப் பண்டிகை:

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை, வீட்டை சுத்தம் செய்து வண்ணம் பூசுவர், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் சிறப்பு ஆகும்.

பொங்கள் தின சிறப்புகள்:

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் பண்டிகை, உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது ' பொங்கலோ பொங்கல்' என மகிழ்ச்சியுடன் ஓசை எழுப்புவர்.

மாட்டுப்பொங்கல்

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து வழிபடுவதுதான் மாட்டுப்பொங்கல்,

பொங்கள் தினத்தில் ஸ்பெஷல் உணவே சர்க்கரைப் பொங்கல் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவு. உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுவது இந்த தினத்தை மேலும் சிறப்பானதாக்கும்.

சர்க்கரைப் பொங்கள் செய்முறை:

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

1. அரிசி – 1 கப்

2. பாசிப்பயறு – 1/4 கப்

3.பால் – 4 கப்

4.வெல்லம் – 2 1/2 கப்

5.முந்திரி – 3 தேக்கரண்டி

6.உலர்திராட்சை – 3 தேக்கரண்டி

7.ஏலக்காய் – 5

8.நெய் – 1/4 கப்

9.தேங்காய் – 1/2 கப்

ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

முதலில் வெண்கல பானை அடுப்பில் வைத்து ததும்ப ததும்ப பால், அரிசி களைந்த தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

அது பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கலோ என்று குல விட வேண்டும்.

கொஞ்சம் தண்ணீர் எடுத்து வைத்து விட்டு களைந்து வைத்த அரிசி மற்றும் பருப்பைய அதில் சேர்த்து நன்கு வேக வைத்து விடவும்.

பின்னர் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.அவ்வப்போது நெய் சேர்க்கவும்.

நன்கு பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்துவது பொங்கல் திருநாள் ஆகும். நண்பர்களையும் உறவினர்களையும் உபசரித்தல், உழவுத்தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்பண்புகளின் அடையாளமே பொங்கல் பண்டிகையாகும்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக கடந்த கால பயம், துக்கம், துயரம், ஏமாற்றம், மன அழுத்தம் என அனைத்தையும் கழித்து, இப்போது இந்த வருட பொங்கள் திருநாளோடு, தை மாத தொடங்கும் இந்த நாளில் ஆரோக்கியம், நம்பிக்கை, செல்வம், மகிழ்ச்சி என இவை அனைத்தையும் நம் வாழ்வில் நிலைநிறுத்துவோம்…

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}