• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

உங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்கு உதவும் வழிகள்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019

இன்றைய பெற்றோருடைய மிகப்பெரிய கவலை என் குழந்தையின் பல் ஆரோக்கியமாக உள்ளதா? என்ன பற்பசை வாங்குவது ? என்ன மாதிரியான ப்ரெஷ் வாங்குவது ? ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டுமா? சாக்லேட் சாப்பிடலாமா ? எவ்வளவு சாப்பிட வேண்டும் ? 

என  ஒவ்வொரு நாளும் நம் குழந்தையின் பல் பாராமரிப்பு பற்றி எப்போதும் பல கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். இதே கவலை தான் எனக்கும் அடிக்கடி வரும், என் மகள் அடிக்கடி சாக்லேட் சாப்பிடாவிட்டாலும், அவள் சாக்லேட் சாப்பிடும் போதெல்லாம் சிறிது வருத்தமாக இருக்கும். என்னுடைய குழந்தை பல் மருத்துவரிடம் கேட்ட போது அவர் சில ஆலோசனை தந்தார். எனக்கு அது மிக ஆறுதலாக இருந்தது. அந்த குறிப்புகளை இங்க்ற் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

பல் முளைக்கும் முன்பே பராமரிக்க தொடங்குங்கள்

குழந்தைகளுக்கான சரியான பல் பராமரிப்பு என்னென்ன உள்ளது மற்றும் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதே அவர்களின் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி.

குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் பருத்தி துணியால் ஈரம் செய்து ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும். முதல் பல் முளைக்கும் வரை இதையே பின்பற்ற வேண்டும். பல் முளைத்தவுடன் ஹேண்ட் ப்ரெஷஸ் கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி விரல்களில் மாட்டிக் கொண்டு குழந்தைக்கு ப்ரெஷ் பண்ணலாம். ஒரு வயது வரைக்குமே குழந்தைகளுக்கு ப்ரெஷ், பற்பசை எதையும் உபயோகபப்டுத்த கூடாது. ஒரு வயதுக்கு மேல் கடவா பால் வரத் தொடங்கும். அப்போதும் கூட குழந்தைகளுக்கான பற்பசை மற்றும் ப்ரெஷை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

அதே போல் இரவில் குழந்தைகள் தூங்கும் போது பாட்டிலில் பால் குடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் பல் முழுவதும் சொத்தைகள் ஏற்படும். இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகளுக்கு இதுவே பிரச்சனையாக இருக்கின்றது. அப்படியே இரவில் பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை என்றால் அதன் பிறகு பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கலாம். 

பற்பசையும், ப்ரெஷும் எப்படி இருக்க வேண்டும்

பெரியவர்கள் பயன்படுத்தும் பற்பசையை குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு வாங்கும் பற்பசையில் பிளோரைடு அளவு மாறுபடும். பிளோரைடு அளவு கூடினால் பிளோரோஸிஸ் என்கிற பல் பிரச்சனை ஏற்படும். இதனால் குழந்தைகளின் பற்களின் வலிமை குறையும். மற்றும் பல்லின் நிறம் மஞ்சள் அல்லது பழுப்பாக மாறும். குழந்தைகளுக்கு 12 வயதாகும் போது தான் நிரந்தரமாக பல் முளைத்து முடியம். அதனால் குறைந்தது 10 வயது வரையாவது குழந்தைகளுக்கான பற்பசையை பயன்படுத்துவது நல்லது.

இனிப்பு எவ்வளவு கொடுக்கலாம்

குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை குறைக்க உதவும் ஒரு டயட் அட்டவணை போட்டுக் கொள்ளலாம். ஒரு வாரத்திற்கு எவ்வளவு இனிப்புகள் சாப்பிடுகிறார்கள் என்பதை அவர்களையே குறிக்க சொல்லலாம். ஒரு வாரத்திற்கு 5 சாக்லேட் அல்லது இனிப்புகளுக்கு மேல் கொடுப்பது பல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு நீ குறைவாக இனிப்பு சாப்பிட்டால் அதனை பாராட்டும் விதமாக, ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பிடித்ததை செய்யும் போது குழந்தைகள் பின்பற்றுவார்கள்.

பற்களை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்?

 • கண்டிப்பாக தினமும் இரண்டு முறையேனும் பல் துலக்க வேண்டும்
 • உணவருந்திய ஒவ்வொரு முறையும் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்
 • குழந்தைகளின் பற்களுக்கான மிருதுவான பல் துலக்கியை பயன்படுத்துங்கள்
 • நார் சத்துமிக்க பழங்களான ஆப்பிள் ஆரஞ்சு கேரட் வெள்ளரிக்காய் அதிகமாக சாப்பிட வேண்டும்.
 • ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். முக்கியமாக மென்னு சாப்பிட வேண்டும்.
 • ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
 • வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை சாப்பிடுவதில் மூலம் பற்கள் ஆரோக்கியம் அடைகிறது.

செய்யக் கூடாதவை

 • குழந்தை தூங்கும்போது பாட்டிலில் பால் கொடுக்காதீர்கள்
 • பல்லில் ஒட்டிக்கொள்ளும் தின் பண்டங்களான குக்கீஸ், சாக்லெட்,குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது
 • மவுத் வாஸ்களை பயன்படுத்த தேவையில்லை கொப்பளிக்க தண்ணீர் தான் சிறந்தது.
 • குழந்தைகளுக்கு முழுமையாக கொப்பளிக்கும் ஆற்றல் வரும் வரை பிளோரைட் கலந்த பற்பசையை பல் துலக்க கொடுக்க வேண்டாம் 
 • வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது சிறந்தது
 • அவ்வப்போது பல் துலக்கியை மாற்றுங்கள்

சிறு வயதிலிருந்தே சாக்லெட், கிரீம் பிஸ்கட் போன்றவற்றை குறைவாக சாப்பிடும் வழக்கத்தை உருவாக்க வேண்டும். பற்களை பராமரிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பற்களின் ஆரோக்கியத்தை பற்றி பெற்றோர்கள் நாம் அடிக்கடி கவலைப்பட தேவையில்லை.

 

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Jun 13, 2019

i have 1. 6yrs son.. he has tooth decay

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}