குழந்தைகள் உயரமாக வளர உதவும் உணவும், உடற்பயிற்சியும் - சிறந்த வழிகள்

குழந்தைகள் வளர்ச்சி என்பது முக்கியமான ஒன்று. வயதிற்கு ஏற்ப வளர்ச்சி இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வயது முடிவில் இருந்தே வளர்ச்சியின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும்.
வளர்ச்சிக்கான காரணங்களில் முதல் இடம் வகிப்பது மரபுவழி..பெண் குழந்தைகள் அப்பா வழி உடன் பிறந்தவர்கள் போல் இருப்பார்கள். ஆண் குழந்தைகள் தாய் மாமன் போல் இருப்பார்கள் என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்தது உணவு பழக்கம், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் இவை எல்லாம் குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
குழந்தைகள் உயரமாக வளர உதவும் உணவு மற்றும் ஊட்டச்சத்து
பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகி றார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.
அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு வைட்டமின்களின் பங்கு மிக முக்கியம். அவை நம்முடைய உணவிலேயே அதிகமாக இருக்கின்றது. என்னென்ன வைட்டமின்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதை பார்க்கலாம்.
புரோட்டீன்
புரோட்டீன் என்பது புரதச்சத்து. புரதச்சத்து குழந்தைகள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதச்சத்து எலும்புகள் வலுவடைய தேவையான என்சைம்களை உற்பத்தி செய்கிறது.
வைட்டமின் டி
நாம் அனைவரும் அறிந்த ஒன்று விட்டமின் டி எலும்புகள் வலுவடைய உதவுவதோடு மட்டும் இல்லாமல் நீளமாக வளரவும் உதவி செய்கிறது.
வைட்டமின் ஏ
விட்டமின் ஏ மிகவும் தேவையான ஒன்று. இது தான் உடலில் கால்சியம் சத்தை தக்க வைத்து எலும்பு நீட்சிக்கு உதவுகிறது.
கால்சியம்
கால்சியம் சத்து எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கும் வேலையை செய்கிறது. இது வளர்ச்சியை வேகப்படுத்த உதவுகிறது.
எந்தெந்த உணவுகள் வளர்ச்சிக்கு உதவுகிறது?
பால்
பால் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். பாலில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்து உள்ளது. பால் சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அப்போது மாற்று உணவாக பாலில் இருந்து கிடைக்கும் பன்னீர், தயிர் இவற்றை கொடுத்து பழக்கலாம்.
பச்சை காய்கறிகள்
பீன்ஸ் அதிகமாக எடுக்கும் போது எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்.முட்டைகோஸ் சாப்பிட்டால் நெட்டையாக வளரலாம்.இதர காய்கறிகள் அனைத்தும் உணவில் சேர்ப்பதை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்த வேண்டும். நாவில் சுவை அரும்புகள் வளர்வதற்கு முன்பே அனைத்து காய்கறிகள் கொடுத்து பழக்கி விட வேண்டும். குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட ஊக்கப்படுத்த வேண்டும்
கீரைகள் மற்றும் பயறு வகைகள்
கீரைகள் பல விதங்களில் நமக்கு பயன்படுகிறது. குறிப்பாக முளைக்கீரை குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதே போல் பயறு வகைகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.சாயங்கால சிற்றுண்டி சுண்டல், வாரம் இரு முறை கொடுக்கலாம்.
முட்டை
உயரமாக வளர முட்டை எடுத்து கொள்வது சிறப்பு. இது புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளின் இதர வளர்ச்சியிலும் இது பங்கு அளிக்கிறது. உங்கள் குழந்தைக்கு பிடித்த வகையில் முட்டையை சமைத்துக் கொடுக்கலாம்.
கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது உடலால் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. கேரட்டை உணவில் சேர்ப்பது உடல் கால்சியத்தை மிகவும் திறமையாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது எலும்பு மறு உருவாக்கத்தை பாதித்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சாலட்களில் கேரட்டைச் சேர்க்கவும் அல்லது உங்கள் குழந்தைகளுக்கு புதிய கேரட் சாறு தயாரித்து நீங்கள் கொடுக்கலாம்.
தூக்கம்
பிள்ளைகள் தூங்கும் போது தான் வளர்வார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மைதான். தூங்கும் போது உடலில் பிட்யூட்டரி சுரப்பி நன்றாக வேலை செய்யும். உடலில் திசுக்கள் புதுப்பிக்கப்பட்டு உடல் வளர்ச்சி சீராகும். அதனால் பிள்ளைகளை போதுமான நேரம் உரிய நேரத்தில் உறங்க செய்வது அவர்களது உயரத்தை அதிகரிக்க கூடும். சிறு வயது முதலே குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைத்து பழக்கவும்.
போதுமான அளவு தூங்குவது மிகவும் முக்கியமானது. அதே போல் இரவு உணவு முக்கியம்.இரவு சாப்பாடு சாப்பிடவில்லை என்றால் ஒரு நாள் வளர்ச்சி போய்விடும் என்று என் பாட்டி கூறுவார்கள். தூங்கும் போது கால்களை நன்றாக நீட்டி தூங்க வேண்டும். அப்போது தான் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். எலும்புகள் வலுவடைய தேவையான அளவு இரத்த ஓட்டம் அவசியம்.
குழந்தைகள் வளர உதவும் விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள்
- பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம். உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.
- ஆண் குழந்தைகள் பார் என்று சொல்லப்படுகிற ஹேங்கிங் செய்யலாம். இது உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.
- கூடைப்பந்து விளையாட்டை தினமும் பயிற்சி செய்து வரலாம்.
- அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அதிக தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
- சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- நீச்சல் பயிற்சி செய்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்...
- நேராக நின்று கொண்டு பின் குனிந்து கால் பெருவிரல் தொடும் பயிற்சி உதவும்.இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.
பிள்ளைகளை விளையாட செய்வது குறித்து பார்த்தோம். அதை வெயிலில் விளையாட செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். கால்சியம் நிறைந்த உணவு பொருள்களை உடல் எடுத்துகொண்டாலும் அதை உடல் உறிஞ்சுகொள்ள வைட்டமின் டியின் உதவி தேவை.
எதுவாக இருந்தாலும் உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும். இதெல்லாம் ஒரு முயற்சிக்காக. என்னுடைய தோழி ஸ்கிப்பிங் பயிற்சி செய்து உயரமாக வளர்ந்தை பார்த்து இருக்கிறேன்.. நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்..
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...