18 மாத குழந்தைகளுக்கான சிறந்த 10 பொம்மைகள்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Aug 30, 2021

குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு தேடித் தேடி வாங்கி கொடுப்பதில் முக்கியமானது பொம்மைகள். பெற்றோராகிய நாம் இப்போதெல்லாம் பொம்மைகள் வாங்கும் போது அது விளையாட்டாக மட்டுமில்லாமல் அவர்களுடைய ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். குழந்தைகளுக்கு ஒரு வயது ஆனவுடன் அவர்களுடைய வெளியுலகை ஆராய்வது அதிகரிக்கின்றது. எந்தப் பொருளை எடுத்தாலும் அதை அலசி ஆராய்வது என்பது அவர்களுக்கு விருப்பமானது மற்றும் ஆர்வமானது.
குறிப்பாக 1-18 மாத குழந்தைகளுக்கான பொம்மைகள் வாங்கும் போது அவர்களுடைய மூளை வளர்ச்சிக்கு, ஃபைன் மற்றும் கிராஸ் மோட்டார் திறன்கள் வளர்ச்சிக்கு உதவுக்ககூடியதாக இருந்தால் சிறந்தது. உங்கள் குழந்தைக்கான சரியான பொம்மைகளை தேர்வு செய்வதற்கான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறந்த 10 பொம்மைகள்
- புதிர் விளையாட்டுகள் (Puzzles)
- ‘ப்ளாக்ஸ் (Building blocks)
- ஸ்டேக்கர்ஸ் (stackers)
- வடிவங்கள்
- கன்ஸ்ட்ரக்டர்கள்
- இழுத்து செல்லும் பொம்மைகள் (pull along toys)
- இசை எழுப்பும் பொம்மைகள்(Musical toys)
- ரைடு செல்லும் பொம்மைகள் (Ride-on Toys)
- படப் புத்தகங்கள்
- காய்கறிகள் மற்றும் பழங்கள் வெட்டும் செட் மற்றும் ஹேம்மர் பென்ஞ்
புதிர் விளையாட்டுகள் (Puzzles)
புதிர் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு அறிவாற்றல் திறன் மற்றும் மோட்டார் திறன்களை வளர்க்க உதவுகின்றது. ஒரு பொருள் மற்றொன்றுக்குள் எப்படி பொருந்துகிறது என்பதை அறிந்து கொள்கிறார்கள். விதவிதமான புதிர் படங்கள், வடிவங்கள், வண்ணங்கள் போன்ற விளையாட்டுகளை வாங்கிக் கொடுக்கலாம். நச்சு இல்லாத மென்மையான விளிம்புகள் கொண்டதாக பார்த்து வாங்கவும்.
ப்ளாக்ஸ் (Building blocks)
ஸ்பேஷியல் மற்றும் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். மோட்டார் திறன்களை மேம்படுத்துகிறது. கை-கண் ஒருங்கிணைப்பு மற்றும் காட்சி திறன்களை வளர்க்கிறது. கற்பனை வடிவமைப்புகள் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. வண்ணங்களும், வடிவங்களும் அவர்களை அதில் அதிகமாக ஈடுபட வைக்கும்
ஸ்டேக்கர்ஸ் (stackers)
உங்கள் குறுநடை போடும் குழந்தையின் கை-கண் ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது. மேலும், வெவ்வேறு அளவிலான வளையங்களை குவியலிடுதல் குழந்தைக்கு விழிப்புணர்வு உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும். அவர்கள் இதன் மூலம் பெரியது மற்றும் சிறியது பற்றி அறிய முடியும்.
வடிவங்கள்
குழந்தைகளுக்கு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட விளையாட்டுகளை வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் வடிவங்களை பற்றி அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் தாங்கள் பார்க்கும் எல்லாவற்றிலும் இந்த வடிவங்களை ஒப்பீட்டு பார்ப்பார்கள். பேட்டர்ன்ஸ் பண்ண கற்றுக் கொள்வார்கள்.
கன்ஸ்ட்ரக்டர்கள்
இதுவும் அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும். குழந்தைகள் விளையாடும் போது சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவற்றை கற்றுக் கொள்கிறார்கள். ஃபைன் மோட்டார் திறன்கள் அதிகரிக்கும். கைகளில் பிடிமானத் திறம் மேம்படும்.
இழுத்து செல்லும் பொம்மைகள் (pull along toys)
இந்த வகை பொம்மைகல் மூலம் மோட்டார் திறன்கல் அதிகரிப்பதோடு நடைபயிற்சியும் பெறுகிறார்கள். இதை இழுத்து செல்லும் போது பிடிமானம் அதிகரிக்கும்.
இசை எழுப்பும் பொம்மைகள்(Musical toys)
வண்ணங்கள் மற்றும் இந்த அனுபவங்கள் அவர்களுடைய உணர்வுத்திறனை மேம்படுத்தும். தங்களுடைய சுய வெளிப்பாட்டை காட்டுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இந்த பொம்மைகள் பலவிதங்களில் வருகின்றது. ஒலி எழுப்பும் அளவை குழந்தைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யுங்கள்.
ரைடு செல்லும் பொம்மைகள் (Ride-on Toys)
கிராஸ் மோட்டார் திறன்களை அதிகரிக்கும். சமநிலை அறிய மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றது. குழந்தைகளுக்கு ரைடு செல்வது என்றாலே குஷியாகிவிடுவார்கள். அதுவும் தாங்களே ஓட்டி செல்வது என்றால் ஆர்வத்தோடு விளையாடுவார்கள். குழந்தைகளை சுறுசுறுப்பாக இருக்க வைக்க உதவும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}