1. தடுப்பூசி

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துகள்

All age groups

Radha Shri

6.5M பார்வை

7 years ago

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துகள்
தடுப்பூசி
ஊட்டத்துள்ள உணவுகள்
நோய் எதிர்ப்பு சக்தி

பிறந்த குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. அதனால்தான், `குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.  அதன் பிறகு, தாய்ப்பால் கொடுப்பதோடு, வேறு ஊட்ட்ச்சத்துள்ள உணவுகளை கொடுப்பதன் மூலமாக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

உடலில் வைட்டமின்கள் குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். அதனால் குழந்தைகளின் உணவுமுறையில் வைட்டமின் ஏ மற்றும் டி, வைட்டமின் பி, வைட்டமின் இ, துத்தநாகம், மக்னீசியம் போன்ற சத்துகள் இருக்கும் உணவு வகைகளை தேர்வு செய்து அவர்கலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

காய்கறிகள்

Doctor Q&As from Parents like you

உங்கள் குழந்தைகளின் தட்டில் இடம் பிடிக்க வேண்டிய முக்கியமான உணவில் பல வண்ணங்கள் கொண்ட காய்கறிகள் அடங்கும். முக்கியமாக, பீட்ரூட், கேரட், மஞ்சள் மற்றும் பச்சை குடமிளகாய், மஞ்சள்பூசணி போன்றவை. பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காளான் மிக நல்லது. நாட்டு காய்களும் அவர்களுக்கு விருப்பத்திற்கேற்ப சமைத்துக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் காய்கறிகளை பொரியல் செய்து ஸ்நாக்ஸ் மாதிரி அறிமுகப்படுத்துங்கள்.

கீரை வகைகள் – குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக உணாவில் கீரை அவசியம் சேர்க்க வேண்டும். தினமும், அல்லது  வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது சிறந்தது. இதிலுள்ள எண்ணற்ற அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும்.

மோர் மற்றும் தயிர் - தயிரில் உள்ள ஆன்டி பாக்டீரியாக்கள், கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை வரவிடாமல் தடுக்கும்,  இதனால் குடல் சுத்தமாகி வயிறு இன்ஃபெக்ஷன் ஆகாமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். தயிர் பிடிக்காத குழந்தைகளுக்கு ஒரு டம்ப்ளர் மோர் குடிக்கக் கொடுக்கலாம்.

பழ வகைகள் - வைட்டமின் சி இருக்கும் பழங்களின் மூலம் குழந்தைகலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, மாதுளை என்றுதான் பொதுவாக பழங்கள் வாங்குகிறோம். அத்தோடு பப்பாளி மற்றும் நெல்லிக்காய், சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு என புளிப்புத்தன்மையுடைய பழவகைகளில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும், பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கும்.

தானியங்கள் - சிறுதானிய சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாம். கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை எல்லாம் கலந்து பொடிசெய்து, கஞ்சியாகவோ, ரொட்டியாகவோ அல்லது தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவற்றில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து உடலைத் தொற்றுகளில் இருந்து காக்கும்.

நட்ஸ் - பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவர, நோய் எதிர்பு சக்தி சீராக வளரும். இவற்றில் அதிகளவில் புரோட்டீன்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடித்து, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

பூண்டு - தினமும் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்கப்படும் உணவில் 2 அல்லது 4 பல் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். பூண்டை பவர் பூஸ்டர் என்று சொல்வார்கள். வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிற்கும் திறன் கொண்டது பூண்டு. இதில் உள்ள Allicin என்ற பொருள், இன்ஃபெக்ஷனால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும். உடலில் உள்ள  ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுவதோடு நோய்லிருந்து காக்கின்றது.

மீன் - மீனில், 'ஒமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது. இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க உதவுவதுடன், கண்பார்வை குறைபாட்டைத் தவிர்த்து மூளைவளர்ச்சிக்கு உதவுகின்றது. அதனால், வாரத்தில் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு மீன் கொடுத்துப் பழக்கலாம். பொரித்த மீனை விட குழம்பில் உள்ள மீனில் . 'ஒமேகா 3' அதிகம் உள்ளது.

முட்டை - ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, குழந்தைகளின் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. வேகவைத்த முட்டையில் வைட்டமின் டி அதிகளவு உள்ளது.

மஞ்சள்தூள் – மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. பெரும்பாலும் நம் உணவில் மஞ்சள் இல்லாத சமையல் மிக குறைவு என்று சொல்லலாம். மஞ்சள் தேய்த்து குளிப்பது மஞ்சள் தண்ணீர் தெளிப்பது என நம் அன்றாட வாழ்வில் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கின்றது. மஞ்சள்தூளில் ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் ஆன்டி வைரஸ் இருப்பதால் நோய் எதிர்பு சக்தி அதிரிக்க உதவும். காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல் போன்ற நோய்கள் அண்டாமல் தடுக்கும். குழந்தைகளுக்கு இரவு கொடுக்கும் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொடுப்பது நல்லது.

இந்த பவர் பூஸ்டர் உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டுங்கள்.

 

Be the first to support

Be the first to share

support-icon
ஆதரவு
comment_iconComment
share-icon
பகிர்
share-icon

Related Blogs & Vlogs

No related events found.