1. வாரா-வாரம்-கர்ப்பத்தின்-நிலை ...

கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்யலாம்? தவிர்க்கக் கூடாத பாதுகாப்பு குறிப்புகள்

Age Group: Pregnancy

4.0M views

கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்யலாம்? தவிர்க்கக் கூடாத பாதுகாப்பு குறிப்புகள்

Published: 26/12/21

Updated: 26/12/21

வாரா வாரம் கர்ப்பத்தின் நிலை

கர்ப்பமான பெண்கள் எல்லோருக்குமே நிறைய கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கும். அவற்றில் முக்கியமான ஒரு கேள்வி, கர்ப்பமாக இருக்கும் போது  பயணம் செய்யலாமா? ர்து பாதுகாப்பானது? என்பது தான். பொதுவாக கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களும், கடைசி மூன்று மாதங்களும் பயணத்திற்கு உகந்தது அல்ல மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய காலகட்டங்களில் குறிப்பாக நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பதே நல்லது. 

எல்லோரது உடல்நிலையும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஆரோக்கியமான உடலமைப்பைக் கொண்டவர்கள் மருத்துவரது அறிவுரையின் பேரில் 36 வது வாரம் வரை கூட பயணம் செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில் பயணங்களைத் தவிர்ப்பதே நல்லது.

 நான் தினமும் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறதே என்று சொல்பவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் பயணித்தே ஆக வேண்டும்; ஆனால் பாதுகாப்பாக பயணிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு பயணிப்பது நல்லது. 

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யும் போது உங்களுக்குள் கேட்கப்படும் கேள்விகள் இவைகளே

  • எப்போது பயணம் செய்யலாம்?
  • எங்கு பயணம் செய்யலாம்?
  • எப்படி பயணம் செய்ய வேண்டும்?
  • பயணம் செய்யும் போது என்னென்ன விஷயங்களை திட்டமிட வேண்டும்?

பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் சில குறிப்புகள்

Doctor Q&As from Parents like you

  • வீட்டுக்கு அருகில் அலுவலகம் இருப்பவர்கள் நடந்து செல்வதைப் புறக்கணிக்கக் கூடாது. சிறிய தூரங்களுக்கு மெதுவாக நடந்து செல்வது நல்லது. சற்று தொலைவில் அலுவலகம் இருப்பவர்கள் பைக் அல்லது ஆட்டோவில் போகலாம். ஆனால் மெதுவாகச் செல்ல வேண்டும். 
  • நீண்ட தூரப் பயணங்களுக்குத் திட்டமிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே செயல்படுத்துவது நல்லது. கையில் தேவையான மருந்து, மாத்திரைகளை வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடன் வருபவர் உங்களது உடல்நிலையைப் பற்றி நன்கு அறிந்தவராகவும், அவசர காலங்களில் பதட்டமின்றி செயல்படுபவராகவும் இருக்க வேண்டும். 
  • பொதுவாக கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்.  பயணத்தின் போது இதற்கான விஷயங்களுக்கும் முக்கியம் தரும் வகையில் உங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அடிக்கடி சிறுநீர் வருகிறதே என்று தண்ணீர் குடிப்பதை தவிர்க்காதீர்கள். அது உடலில் நீர் வறட்சியை உண்டாக்கும். தொலைதூரப் பயணத்திற்கு பேரூந்தை விட ரயில் பயணம், விமானப்பயணம் சிறந்தது.  
  • எங்கு பயணம் செய்தாலும் அதாவது சொந்த காரியங்களுக்கு அல்லது அலுவலக வேலைகளுக்கு என பயணம் செய்யும் போது அந்த இடத்தை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். அவசர தேவைகளுக்கு உதவுக்கூடிய மருத்துவமனைகள், வசதிகள் இருக்கிறதா என்று விசாரித்துக் கொள்ளுங்கள்.
  • காரில் வெகுதூரம் பயணிக்கும்போது இடையிடையே நிறுத்தி சற்று நேரம் காலாற நடந்து விட்டோ அல்லது கை, கால்களை அசைத்து விட்டோ பயணத்தைத் தொடர வேண்டும். அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்கவும். அதே போல் அதிக நேரம் காலை தொங்கவிட்டுக் கொண்டு போவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். அமர்ந்து செல்லும் பயணமாக இருந்தால் 6 மணி நேரத்திற்கு குறைவாக இருப்பது நல்லது. அப்படியே பயணம் செய்தாலும் இடை இடையே உடலை தளர்த்திக் கொள்ள மறவாதீர்கள்.
  • பயண நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. தளர்வான பருத்தி ஆடைகள் அணிவதே சிறந்தது. 
  • பயணத்தின் போது தண்ணீர், மோர்,பழச்சாறுகளை அருந்துவது உடல்நலனுக்கு ஏற்றது. 
  • குறை பிரசவம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், ப்ரீக்ளம்ப்சியா எனப்படும் இரத்த உயர் அழுத்தம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், ப்ரீமெச்சூர் ரப்சர் ஆஃப் மெம்பரேன் அதாவது முன்கூட்டியே சவ்வு தகரும் பிரச்சனை உள்ளவர்கள் பயணங்களை தவிர்த்து விடுவதே மிகவும் நல்லது.

இப்போதுள்ள பெண்களுக்கு பயணம் செய்தவற்கான அத்தியாவசியங்கள் அதிகம். இன்னும் பழைய மூட நம்பிக்கைகளை மனதில் வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்க வேண்டாம். உடல்நல பிரச்சனைகளை தவிர்த்து சரியான மருத்துவ ஆலோசனைகளோடு, பாதுகாப்பான பயணம், திட்டமிட்ட பயணம், விழிப்புணர்வோடு உள்ள பயணம் மகிழ்ச்சியை தரும். ‘உங்கள் பயணம் இனிதாகுக’

Be the first to support

Be the first to share

support-icon
ஆதரவு
share-icon
பகிர்
Share it

Related Blogs & Vlogs

No related events found.