1. குழந்தை-பிறப்பு---பிரசவம் ...

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய 7 வீட்டு வேலைகள்

Age Group: Pregnancy

6.6M views

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய 7 வீட்டு வேலைகள்

Published: 26/09/19

Updated: 04/02/22

குழந்தை பிறப்பு - பிரசவம்
வாரா வாரம் கர்ப்பத்தின் நிலை

கர்ப்பகாலம் என்பது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். குறிப்பாக கர்ப்ப காலத்தில் செய்யும் வேலைகள், செயல்பாடுகளை விழிப்புணர்வோடு செய்ய வேண்டும்.  கர்ப்ப காலத்தில் வேலை செய்வது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்றாலும், ஒரு சில வேலைகளை செய்யாமல் இருப்பது பாதுகாப்பானது. ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் சில வேலைகளை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பதன் மூலம் சுகமான பிரசவ காலத்தை அனுபவிக்கலாம். 

நீங்கள் ஒரு நாளில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை மதிப்பிடுவது மட்டுமல்லாமல், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் செய்யும் செயல்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில செயல்பாடுகளைச் செய்வது பாதுகாப்பானது, சிலவற்றை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் அந்த முக்கியமான நாட்களில் தவிர்க்க வேண்டிய 7  வேலைகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

கர்ப்பகாலத்தில் செய்யக்கூடாத 7 வீட்டு வேலைகள்

  1. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வீட்டை துடைத்து சுத்தம் செய்யும் வேலையை கெமிக்கல்களை பயன்படுத்தி செய்ய வேண்டாம். நீங்கள் வீட்டை துடைத்து சுத்தமாக்க பயன்படுத்தும் டிடர்ஜெண்டுகள், சோப் ஆயில்கள் மர்றும் க்ளீனிக் ஏஜெண்டுகள் போன்றவை கர்ப்ப காலத்தில் சென்சிடிவ்வாக இருக்கும் உங்களது ஸ்கின்னில் அலர்ஜியை உண்டாக்கும்.
  2. கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் அதிகமாக வளைவது ஆபத்தை உண்டாக்கும் வீடு துடைக்கும் வேலையை செய்யக்கூடாது என்ரு சொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
  3. கர்ப்ப காலத்தில் உங்களது மூட்டுகள் மற்றும் எலும்புகள் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே நீங்கள் மிக அதிகமாக உங்களது உடலை வருத்திக்கொள்ள கூடாது. நீங்கள் வீட்டை சுத்தம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், மாப்களை பயன்படுத்துவது சிறந்தது.
  4. நீங்கள் வீட்டில் பூனை, நாய் வளர்த்துபவராக இருந்தால், கர்ப்ப காலத்தில் அதை குளிக்க வைக்க வேண்டாம்.
  5. குளியறை மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த வேளைகளை செய்ய வீட்டில் உள்ளவர்களின் உதவியை நாடலாம்.
  6. துணி துவைப்பதும் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாத வேலைகளில் ஒன்றாகும். நீண்ட நேரம் குனிந்து நிறைய துணிகளை துவைப்பது உங்கள் இடுப்புக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். துணி துவைக்கும் இடங்களில்உள்ள சோப்பு நுரைகளால் நீங்கள் கீழே விழக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் என்பதால் இது போன்ற வேலைகளில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
  7. கனமான பொருட்களை தூக்க வேண்டிய வேலைகளை தவிர்க்க வேண்டும். இது உங்களது முதுகு பகுதிக்கு சிறந்தது அல்ல. ஏணிகளில் ஏறுவது போன்ற வேலைகளை செய்வதும் கர்ப்ப காலத்தில் கட்டாயமாக கூடாது. ஒருவேளை இது போன்ற பாதுகாப்பற்ற வேலைகளை செய்ய நேர்ந்தால் நீங்கள் அவசியம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செய்யலாம்.

இந்த கட்டுறையை பற்றி உங்களது கருத்துகளை கீழே பதிவு செய்யலாம்.

Be the first to support

Be the first to share

support-icon
ஆதரவு
share-icon
பகிர்
Share it

Related Blogs & Vlogs

No related events found.