1. வீட்டு-வைத்தியம்

1-3 வயது குழந்தைகளுக்கு மலச்சிக்கல்: அறிகுறிகள் மற்றும் தீர்வு

1 to 3 years

vidhya manikandan

3.9M பார்வை

4 years ago

1-3 வயது குழந்தைகளுக்கு மலச்சிக்கல்: அறிகுறிகள் மற்றும் தீர்வு
வீட்டு வைத்தியம்

குழந்தைகளுக்கு உணவு தருவதில் எந்த அளவுக்கு கவனமாக இருக்கிறோமோ அந்த உணவு சரியாக செரிமானம் ஆகி மலம் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

மலச்சிக்கல் ஏற்பட காரணம் என்ன?

ஒரு வயதிற்க்கு கீழ் உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டுமே குடிப்பதால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படாது.  அப்படி ஏற்பட்டால் அவர்களுக்கு சரியாக தாய்ப்பால் கிடைக்காததன்அறிகுறியாக இருக்கலாம். பசும்பால் மற்றும் இதர உணவுகளை குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன் மலச்சிக்கல் ஆரம்பம் ஆகிறது. இதுதவிர நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடினாலும்,சரியான உணவு பழக்கம் இல்லாமல் இருந்தாலும் மலச்சிக்கல்ஏ ற்படலாம்.

 

Doctor Q&As from Parents like you

மலச்சிக்கலை எப்படி கண்டுபிடிப்பது?

குழந்தைகள் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல், மலம்கழிக்கும் பொழுது வலி ஏற்படுவது, பசியின்மை, எடைக்குறைவு, மலம் கழிக்கும் போது முகத்தைச் சுருக்கி முக்குவது, மலம் இறுகி அதில் ரத்தக்கசிவு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.

மலச்சிக்கலை தீர்க்க வழிகள்:

ஒரு குழந்தையை மலச்சிக்கலில் இருந்து தவிர்க்க அல்லது மீட்கும் ஆலோசனை இங்கே. இதைப் படிக்க வேண்டும் ...

  • இதனை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தினம் ஒரு கீரை வகைகளோடு காய்கறிகள் கேரட்,முருங்கை, வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி என உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகளை மசித்து கொடுக்க வேண்டும்.
  • வாழைப்பழம் சிறந்த மலமிளக்கியாக செயல்படும். பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து கொடுக்கலாம்.மலச்சிக்கலை தீர்க்க மலை வாழைப்பழம் மிக சிறந்தது. இரவு ஊறவைத்த 5-10 உலர் திராட்சைய்களை காலை மற்றும் மாலையில் கொடுக்கலாம்.
  •  பேரீச்சம் பழம்-2, அத்திப்பழம்-1 இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்து கொடுக்கலாம்.  கேரட் சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொடுக்கலாம்.  அரிசி உணவை மட்டும் கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்ளவேண்டும்.  மைதாமாவினால் செய்யப்பட்ட எந்த உணவுகளையும் கட்டாயமாக குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.
  • மலச்சிக்கலை தடுக்க தண்ணீர் மிகவும் அவசியம். குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும் கூட தேவையான தண்ணீரை குடிக்க பழக்கவேண்டியது அவசியம்.  தினமும் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு டம்பளர் குடிக்க கொடுங்கள்.  இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும்.  உணவுசாப்பிட்ட பின் அரைமணி நேரத்திற்கு பிறகு ஒரு டம்பளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்ககொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தை தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும். ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி சிறிது நேரம் வரை குழந்தையை அமரவைக்கலாம். இதனால் குழந்தையின் அடிவயிறு, மலவாய் ஆகியவை தளர்வடைவதால் மலம்கழிக்க பிரச்சனை இருக்காது. 
  • மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சைக்கிள் ஓட்டுவது, கால்களை மெல்ல அசைக்கும் பயிற்சிகள் போன்றவற்றை செய்ய சொல்லலாம். இதன்மூலம் தொடை தசைகள் தளர்வடையும். இதனால் குழந்தைகள் வழியின்றி மலம்கழிக்க முடியும்.  குழந்தைகளை இரவில் நீண்ட நேரமாகியும் விளையாட வைக்காமல் சரியான நேரத்திற்கு தூங்க பழக்கப்படுத்துங்கள்.  அதுபோல காலையிலும் சரியான நேரத்திற்கு எழுவதற்கான சூழ்நிலையை அமைத்து கொடுங்கள்.  பாத்ரூம் போய்ட்டுவா என தினசரி ஒரு நேரத்தை பழக்கப்படுத்துங்கள். 

 

இந்த மாதிரி பழக்கவழக்கங்களே குழந்தையின் உடலையும் மனதையும் மலச்சிக்கலின்றி ஆரோக்கியமாக வைக்கும்.

Be the first to support

Be the first to share

support-icon
ஆதரவு
comment_iconComment
share-icon
பகிர்
share-icon

Related Blogs & Vlogs

No related events found.