1. வாரா-வாரம்-கர்ப்பத்தின்-நிலை ...

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

Age Group: Pregnancy

4.7M views

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

Published: 29/03/21

Updated: 03/02/22

வாரா வாரம் கர்ப்பத்தின் நிலை
ஊட்டத்துள்ள உணவுகள்
உணவுப்பழக்கம்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உடல் நிலையை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த நேரத்தில், உங்கள் உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியமானதாகும். உண்மையில், உங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களின் போது ஒவ்வொரு நாளும் 350 முதல் 500 கலோரிகள் வரை கூடுதலாக தேவைப்படும். ஏனெனில், அக்கலோரிகளே உங்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்க கூடியதாகும். அதுவே, கருவில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும்,கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவையே. அவற்றை குறித்து குழப்பமடைய தேவையில்லை. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்து அதிகளவு கலோரிகளை கொண்டுள்ள உணவுப் பொருட்களை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் உட்கொள்ளுதல் வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள். உங்கள் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலமே குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்:

பால் பொருட்கள்:

கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 4 டம்ளர் பால் அருந்த  வேண்டும், இதன் மூலம் தேவையான அளவு கால்சியம் குழந்தைக்கு கிடைத்துவிடும்.  கர்ப்ப காலத்தில், நீங்கள் வளரும் கருவின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் புரதம் மற்றும் கால்சியம் உணவு உட்கொள்ள வேண்டும். சத்தான உணவுகள் உங்களுக்கும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.

பருப்பு வகைகள்:

Doctor Q&As from Parents like you

இந்த பருப்பு வகையான உணவுகள் முந்திரி, பாதாம் மற்றும் வேர்க்கடலை ஆகியவை கர்ப்ப காலத்தில் உங்கள் உடலுக்கு அதிகமாக தேவைப்படும் புரதம், இரும்பு, கால்சியம் போன்ற சிறந்த சத்துக்களை தருவதுடன்,கருவின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பங்காற்றுகிறது. வேர்க்கடலை பாதமிற்கு இணையான சத்துக்களை அளிக்க வல்லது.

சர்க்கரை கிழங்கு:

சர்க்கரை கிழங்கு வகைகளில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் கருவின் வளர்ச்சிக்கும், பெரும்பாலான செல்கள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகளுக்கும் மிகவும் அவசியமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக வைட்டமின்-ஏ நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல் (10-40%) வேண்டும். 

முட்டை:

ஒரு முட்டையானது 77 கலோரிகளையும், உயர் தரமான புரதத்தையும், கொழுப்புகளையும் கொண்டுள்ளது.  மேலும், பல வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை உள்ளடக்கியுள்ள உணவுப் பொருளாகும்.இவை, உடலில் பல செயல்முறைகளுக்கு அவசியமானதாக உள்ளதால், கருவின் வளர்ச்சிக்கும் தூண்டுதலாக உள்ளது. 

மீன் வகைகள்:

அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன் வகைகளில் அதிக அளவில் காணப்படுகின்றது, ஆனால் இருப்பினும் கர்ப்பிணிப் பெண்கள் இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பசிபிக் மத்தி, அலாஸ்கா சால்மன் போன்ற பாதரசம்  குறைந்த அளவில் உள்ள மீன்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருவின் குழந்தையின் மூளை மற்றும் கண்கள் ஆரோக்கியமாக வளர்ச்சியடைய உதவுகின்றது.

கீரை வகைகள்:

 கீரை வகைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றது, இதில் வைட்டமின்-சி, வைட்டமின்-கே, வைட்டமின்-ஏ, கால்சியம், இரும்பு, மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கி இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

முழு தானியங்கள்:

முழு தானியங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமான கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. குறிப்பாக, இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களில் கருவின் வளர்ச்சிநிலைக்கு உதவி புரிகின்றது. (இதையும் படிக்க: கர்ப்ப கால உணவு முறைகள் http://www.parentune.com/parent-blog/karpa-kalathin-unavu-muraigal/4544)

கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய பழவகைகள்:

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கு அவசியமான ஒன்று பழங்கள் ஆகும். உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

ஆரஞ்சு:

வைட்டமின்கள் அதிகமாக உள்ள பழம் ஆரஞ்சு ஆகும். இது மூளை மற்றும் முதுகு தண்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது.

மாம்பழங்கள்:

மாம்பழங்கள் வைட்டமின் - சி யின் மற்றொரு பெரிய ஆதாரமாக உள்ளது.

வெண்ணெய் பழம்:

வெண்ணெய் பழம் கிடைப்பதற்கு அரிதாக இருந்தாலும், அதிக வைட்டமின்-ஏ பெற்ற பழம் ஆகும்.நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் பழமாக உள்ளது , ஏனெனில் இது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.

எலுமிச்சை பழம்:

கர்ப்ப காலத்தில் எலுமிச்சைச்சாறு கலந்த நீரை பருகுவதால் , மயக்கம் மற்றும் வாந்தி தொடர்பான குமட்டலைக் குறைக்க முடியும். எலுமிச்சை வைட்டமின்- சி அதிகமாக உள்ளது. அவை மலச்சிக்கலை தீர்கவும் செரிமான அமைப்பை தூண்டவும் உதவுகிறது.

வாழைப்பழங்கள்:

வாழைப்பழங்கள் பொட்டாசியம் அதிகம் கொண்ட  உணவுப் பொருளாகும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் குடிநீரின் தேவைகள்:

கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, குடிநீர் மிகவும் முக்கியமானதாகும். அதிக நீர் பருகுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பாதைகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் தடுக்க முடியும்.

தாய்மையின் பெருமை:

தாயின் கருவறையே ஒரு மனிதன் தரிசித்த முதற்கோயில் தாயே முதற்தெய்வம் தாய்மை ஒரு பெண்ணின் பெரும்பேறு! 

இத்தகைய தாய்மையை பெரும் நிலையில் கவனத்துடனும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தும், இரு உயிரை ஒரு உயிராய் கொண்டிருக்கும் எண்ணத்துடனும் தன்னைக் காத்து, சிசு மண்ணைத் தொட வழிவகுக்க வேண்டும் என இக்கட்டுரையின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

Be the first to support

Be the first to share

support-icon
ஆதரவு
share-icon
பகிர்
Share it

Related Blogs & Vlogs

No related events found.